அரசுப்பள்ளி ஆசிரியர்கள் அரசுப்பள்ளியில் மாணவ சேர்க்கையை அதிகரிக்கும் வகையில் நடந்துகொள்ள வேண்டும்!

தமிழகத்தில் கல்வி என்ன நிலைமையில் இருக்கிறது என்றும் அரசுப்பள்ளிகள் எப்படி இருக்கிறது என்றும் அரசுப்பள்ளி ஆசிரியர் ஆசிரியைகள் எப்படி இயங்கி வருகிறார்கள் தற்போதைய தேர்வு விடுமுறையில் அவர்கள் என்ன செய்து வருகிறார்கள் என்பது பற்றி நாம் யாவரும் அறிந்ததே. சமீபத்தில் பள்ளிக்கல்வித் துறை வெளியிட்ட அறிவிப்பு ஒன்றில் அரசுப்பள்ளிகள் தரம் மிகவும் குறைந்துவிட்டது எனவும்  கூடிய விரைவில் அரசுப்பள்ளிகள் இழுத்து மூடப்படும் நிலைமைக்கு வரும் என்று கூறப்பட்டு இருந்தது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் அரசுப்பள்ளிகள் மூடப்பட மாட்டாது என்று தெரிவித்து இருந்தார். மேலும்,

விஜயதசமி அன்று அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு அரசுப்பள்ளி ஆசிரிய ஆசிரியைகளுக்கும் முதன்மைக் கல்வி அலுவலர்கள் வழியாக தமிழக அரசு பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக அவர் உத்தரவிட்டுள்ளார்.

அவருடைய அறிவிப்பின்படி, அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 14 வகை நலத்திட்ட உதவிகள் குறித்த விவரங்களை கிராமங்களின் பொது இடங்களில் எழுதி வைக்க வேண்டும் எனவும் பெற்றோர், ஆசிரியர் சங்கங்கள் மூலம் கூட்டங்களை நடத்தி பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் குறித்து தெரியப்படுத்தி, 5 வயதுடைய குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்கச் செய்ய வேண்டும் எனவும் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கன்வாடிகள் மற்றும் சுற்றுப்புற குடியிருப்புகளில் உள்ள 5 வயது குழந்தைகளைக் கண்டறிந்து விஜயதசமி அன்று பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

விஜயதசமி அன்று அரசு பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்க்க வரும் பெற்றோரை இன்முகத்துடன் வரவேற்று, அன்றைய தினமே விலையில்லா பாடநூல், சீருடைகள் உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும் எனவும் தலைமை ஆசிரியர்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது. குறிப்பு: இன்முகத்துடன் வரவேற்று என்று குறிப்பிட்டுள்ளார்கள். “இன்முகம்” என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியுமா அந்த அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு.

என்ன நம்பிக்கையில் அரசு இப்படி ஒரு உத்தரவு பிறப்பித்து உள்ளது. நேரடியாக அரசுப்பள்ளி ஆசிரியர் ஆசிரியையகள் தங்கள் பிள்ளைகளை அரசுப்பள்ளியில் தான் சேர்த்து படிக்க வைக்க வேண்டும் என்று ஆணை பிறப்பிக்காமல் ஏன் இந்த கண் துடைப்பு வேலை. மாசம் ஐம்பதாயிரம் மேல் சம்பளம் வாங்கும் அவர்கள் பள்ளியில் வேலை செய்ய மனம் நோகிறார்கள். இந்நிலையில் வீடு வீடாகச் சென்று பிள்ளைகளை அழைத்து வர வேண்டும் என்ற அறிவுறுத்தலை அவர்கள் எப்படி ஏற்றுக்கொள்ள போகிறார்கள். பேசாமல் TET, TRB போன்ற தேர்வுகளை நிறுத்திவிட்டு அனைத்து அரசுப்பள்ளிகளையும் இழுத்து மூடிவிட்டு அத்தனை அரசுப்பள்ளி ஆசிரிய ஆசிரியையகளுக்கும் பணி ரத்து செய்து தனியார் பள்ளிகள் திறக்க லைசன்ஸ் கொடுத்துவிட வேண்டியது தானே. ஏன் இந்த கண்துடைப்பு வேலை?

​புனிதமான ஆசிரியப் பணியை ஆத்மாத்மாக யாரும் செய்வது இல்லை. கண்ட கண்ட பரதேசிகளும், நாரச்சிகளும், ரவுடிகளும் ஆசிரியர் பொறுப்பில் இருந்து கொண்டு தமிழ்ச் சமூகத்தை நாசம் செய்கிறார்கள் என்பது பொதுமக்கள் பலருடைய புலம்பலாக இருக்கிறது.

 

Related Articles

மனசுல அலைபாயுதே மாதவன்னு நினைப்போ! ̵... பெண் செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு உரிய பதிலை அளிக்காமல் அவரை கேலி செய்யும் விதமாக பதிலளித்துள்ளார் சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர்.அதி...
எளிதில் மறக்க முடியாத பத்தாம் வகுப்பு சச... இன்று கிரிக்கெட்டின் கடவுள் என்று அழைக்கப்படும் சச்சின் அவர்களின் பிறந்த நாள். சமூக வலை தளங்கள் முழுக்க சச்சினின் போட்டோக்கள் உலாவி வருகிறது. அத்துடன்...
இணையத்தில் வெளியான 2018ம் ஆண்டின் 38 படங... திரைப் படங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பெரும்பாலான படங்களுக்கு உரிய ரிலீஸ் தேதியும் போதுமான அளவிலான தியேட்டர்களும் கிடைப்பது இல்...
மனநலம் பாதிக்கப்பட்ட மாஸ் ஹீரோக்களின் ரச... மெண்டலுங்கப்பா... எல்லாருமே மெண்டலுங்கப்பா... என்ற மொட்டை ராஜேந்திரனின் வசனத்தைப் போல தமிழகத்தில் நாளுக்கு நாள் மெண்டல்கள் அதிகரித்து வருகிறார்கள். பண...

Be the first to comment on "அரசுப்பள்ளி ஆசிரியர்கள் அரசுப்பள்ளியில் மாணவ சேர்க்கையை அதிகரிக்கும் வகையில் நடந்துகொள்ள வேண்டும்!"

Leave a comment

Your email address will not be published.


*