ஜவுளிக்கடையில் குழந்தை தொழிலாளர்கள் படும்பாடு – கசப்பான குழந்தைகள் தினம் !

Unpleasant experience of child labourers in textile industry

நவம்பர் 14 குழந்தைகள் தினம் இந்தியா முழுக்க கொண்டாடப் படுகிறது. ஆனால் இந்தியாவைப் பொறுத்த வரையில் பண்டிகைகளை தவிர தேசிய தினங்கள் எதுவும் உண்மையாக கொண்டாடப்படுவது இல்லை.

மாணவனை கொன்று ஆசிரியர் தினமும், ஆசிரியரை குத்திக் கொன்று மாணவர் தினமும், மக்களை அடிமையாக்கி வைத்து சுதந்திர தினமும், மக்களை காசுக்கு ஓட்டு போடும் செம்மறி ஆடுகளாக மாற்றிவிட்டு தேசிய வாக்காளர் தினமும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதே போல குழந்தை தொழிலாளர்கள் நாடு முழுவதும் பரவிக் கிடந்தாலும் எதோ இந்தியாவில் குழந்தை தொழிலாளர்களே இல்லாதது போல நாடு முழுவதும் குழந்தை தொழிலாளர் தினத்தை கொண்டாடி இருக்கிறார்கள்.

பேக்கரி மற்றும் ஜவுளிக்கடை :

வழக்கு எண் 18/ 9 படத்தில் நாயகன் தனது குடும்பம் வட்டி கொடுமையால் வாடுவதை கண்டு பள்ளியை விடுத்து பேக்கரி ஒன்றுக்கு வேலை செல்வார். விவரம் தெரியாத சிறுவர்கள் தானே என்று அதட்டி அதட்டி வேலை வாங்கிவிட்டு குறைவான சம்பளம் கொடுத்து தின்று பெருத்து போய் கிடக்கிறார்கள் முதலாளிகள். என்ன தான் குழந்தை தொழிலாளர் தடுப்புச் சட்டம் வந்தாலும் அது பயனற்றதாவே இருக்கிறது.

ஜவுளிக்கடையில் துணியை எடுத்துக் காட்டும் இடத்தில் பெரும்பாலும் சிறுவர்களே இருக்கிறார்கள். அத்தனை பேரும் ஸ்கூல் ட்ராப் அவுட். குடும்ப வறுமை ஒருபுறம் என்றாலும் கொழுப்பு மறுபக்கம்.  சேர்க்கை அப்படி. சீக்கிரமே செல்போன் வாங்கி சீன் போட வேண்டும், சீக்கிரமே பைக் வாங்க வேண்டும் என்ற ஆர்வத்தில் தடாலென வேலைக்கு வந்துவிடுகிறார்கள். அதிலும் ஜவுளிக்கடையில் வேலைக்கு சேரும் சிறுவர்கள் எல்லாம் போன ஜென்மத்தில் என்ன பாவம் செய்தவர்களோ.

காலை ஒன்பது மணி முதல் இரவு ஒன்பது மணி வரை என்று தொடர்ந்து 12 மணி நேரம் வேலை செய்கிறார்கள். ஆனால் மாத சம்பளம் வெறும் 6000 ம் ரூபாய். ஒரு நாளைக்கு 12 மணி நேரம் வேலை செய்து 200 ரூபாய் சம்பளம் என்பது எவ்வளவு கொடுமையான விஷியம். இந்த இருநூறு ரூபாய்க்காக அவர்கள் எத்தனை முறை மாடிக்கும் தரைக்கும் ஏறி இறங்குகிறார்கள் ( ஒரு சில கடைகளில் மட்டுமே பணியாட்கள் லிப்ட்டில் செல்ல அனுமதிக்கிறார்கள் ) எத்தனை பேருக்கு துணி எடுத்து போடுகிறார்கள்.

இளம் வயதினர்  துருதுருவென இருப்பார்கள் என்பதால் அவர்களை வைத்து இரண்டு பெரிய ஆட்கள் செய்ய வேண்டிய வேலையை வாங்கிவிட்டு அரை ஆள் கூலி போட்டு தருகிறார்கள். அவர்களும் விவரம் தெரியாமல் முதலாளியிடம் வெரி குட் வாங்க வேண்டுமென்று அலைந்து திரிகிறார்கள்.

இவர்களை சொல்லி என்ன பயன் ? பெற்றோர்களை சொல்ல வேண்டும். பிள்ளைகள் பள்ளி கல்லூரி செல்லாமல் அடம் பிடிக்கிறார்கள், கட் அடித்துவிட்டு ஊர் சுற்றுகிறார்கள் என்பதற்காக உருப்படியாக வேலைக்காவது போகட்டும் என்று ஜவுளிக்கடை மாதிரியான நரகத்தில் தள்ளிவிடுகிறார்கள். அவர்களை ஓட ஓட விரட்டி முதுகு தோல் கிழிந்து தொங்கும் வரை சாட்டையால் வெளுத்து வாங்க வேண்டும்.

 

Related Articles

சென்னை சூப்பர் கிங்ஸ் மேட்ச்சும் ஹார்ட் ... நடந்து வரும் ஐபிஎல் தொடரில் இன்று இரவு எட்டு மணிக்கு பெங்களூர் அணியுடன் மோத இருக்கிறது, சென்னை சூப்பர் கிங்ஸ். ஐந்து போட்டிகளில் நான்கில் வெற்றி பெற்ற...
கவிப்பேரரசு வைரமுத்து பற்றிய சுவாரஸ்யமான... கவிஞர் வைரமுத்து தேனி மாவட்டம் வடுகப்பட்டியில் 13-7-1953 ல் பிறந்தார். தந்தை இராமசாமி தேவர், தாயார் அங்கம்மாள். வடுகப்பட்டியில் உயர்நிலைப் பள்ளிக்...
விஸ்வரூபம் 2 படத்துக்கு வந்த புதிய பிரச்... கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வந்த விஸ்வரூபம் முதல் பாகம் பலத்த எதிர்ப்புகளை சந்தித்தது. அதனால் கடும் மன உளைச்சலுக்கான கமல் இந்தியாவை விட்டு வெளியேறுவ...
கிறுக்கத்தனமான கிகி சேலஞ்ச்! – பப்... அது என்ன கிகி சேலஞ்ச்! உலகில் உள்ள பைத்தியங்கறை அரவேக்காட்டுகளை வெளிச்சம் போட்டு காட்டுவது தான் இந்த கிகி சேலஞ்ச்! இப்போது உலகம் முழுக்க டிரெண்டாகி வ...

Be the first to comment on "ஜவுளிக்கடையில் குழந்தை தொழிலாளர்கள் படும்பாடு – கசப்பான குழந்தைகள் தினம் !"

Leave a comment

Your email address will not be published.


*