ஜவுளிக்கடையில் குழந்தை தொழிலாளர்கள் படும்பாடு – கசப்பான குழந்தைகள் தினம் !

Unpleasant experience of child labourers in textile industry

நவம்பர் 14 குழந்தைகள் தினம் இந்தியா முழுக்க கொண்டாடப் படுகிறது. ஆனால் இந்தியாவைப் பொறுத்த வரையில் பண்டிகைகளை தவிர தேசிய தினங்கள் எதுவும் உண்மையாக கொண்டாடப்படுவது இல்லை.

மாணவனை கொன்று ஆசிரியர் தினமும், ஆசிரியரை குத்திக் கொன்று மாணவர் தினமும், மக்களை அடிமையாக்கி வைத்து சுதந்திர தினமும், மக்களை காசுக்கு ஓட்டு போடும் செம்மறி ஆடுகளாக மாற்றிவிட்டு தேசிய வாக்காளர் தினமும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதே போல குழந்தை தொழிலாளர்கள் நாடு முழுவதும் பரவிக் கிடந்தாலும் எதோ இந்தியாவில் குழந்தை தொழிலாளர்களே இல்லாதது போல நாடு முழுவதும் குழந்தை தொழிலாளர் தினத்தை கொண்டாடி இருக்கிறார்கள்.

பேக்கரி மற்றும் ஜவுளிக்கடை :

வழக்கு எண் 18/ 9 படத்தில் நாயகன் தனது குடும்பம் வட்டி கொடுமையால் வாடுவதை கண்டு பள்ளியை விடுத்து பேக்கரி ஒன்றுக்கு வேலை செல்வார். விவரம் தெரியாத சிறுவர்கள் தானே என்று அதட்டி அதட்டி வேலை வாங்கிவிட்டு குறைவான சம்பளம் கொடுத்து தின்று பெருத்து போய் கிடக்கிறார்கள் முதலாளிகள். என்ன தான் குழந்தை தொழிலாளர் தடுப்புச் சட்டம் வந்தாலும் அது பயனற்றதாவே இருக்கிறது.

ஜவுளிக்கடையில் துணியை எடுத்துக் காட்டும் இடத்தில் பெரும்பாலும் சிறுவர்களே இருக்கிறார்கள். அத்தனை பேரும் ஸ்கூல் ட்ராப் அவுட். குடும்ப வறுமை ஒருபுறம் என்றாலும் கொழுப்பு மறுபக்கம்.  சேர்க்கை அப்படி. சீக்கிரமே செல்போன் வாங்கி சீன் போட வேண்டும், சீக்கிரமே பைக் வாங்க வேண்டும் என்ற ஆர்வத்தில் தடாலென வேலைக்கு வந்துவிடுகிறார்கள். அதிலும் ஜவுளிக்கடையில் வேலைக்கு சேரும் சிறுவர்கள் எல்லாம் போன ஜென்மத்தில் என்ன பாவம் செய்தவர்களோ.

காலை ஒன்பது மணி முதல் இரவு ஒன்பது மணி வரை என்று தொடர்ந்து 12 மணி நேரம் வேலை செய்கிறார்கள். ஆனால் மாத சம்பளம் வெறும் 6000 ம் ரூபாய். ஒரு நாளைக்கு 12 மணி நேரம் வேலை செய்து 200 ரூபாய் சம்பளம் என்பது எவ்வளவு கொடுமையான விஷியம். இந்த இருநூறு ரூபாய்க்காக அவர்கள் எத்தனை முறை மாடிக்கும் தரைக்கும் ஏறி இறங்குகிறார்கள் ( ஒரு சில கடைகளில் மட்டுமே பணியாட்கள் லிப்ட்டில் செல்ல அனுமதிக்கிறார்கள் ) எத்தனை பேருக்கு துணி எடுத்து போடுகிறார்கள்.

இளம் வயதினர்  துருதுருவென இருப்பார்கள் என்பதால் அவர்களை வைத்து இரண்டு பெரிய ஆட்கள் செய்ய வேண்டிய வேலையை வாங்கிவிட்டு அரை ஆள் கூலி போட்டு தருகிறார்கள். அவர்களும் விவரம் தெரியாமல் முதலாளியிடம் வெரி குட் வாங்க வேண்டுமென்று அலைந்து திரிகிறார்கள்.

இவர்களை சொல்லி என்ன பயன் ? பெற்றோர்களை சொல்ல வேண்டும். பிள்ளைகள் பள்ளி கல்லூரி செல்லாமல் அடம் பிடிக்கிறார்கள், கட் அடித்துவிட்டு ஊர் சுற்றுகிறார்கள் என்பதற்காக உருப்படியாக வேலைக்காவது போகட்டும் என்று ஜவுளிக்கடை மாதிரியான நரகத்தில் தள்ளிவிடுகிறார்கள். அவர்களை ஓட ஓட விரட்டி முதுகு தோல் கிழிந்து தொங்கும் வரை சாட்டையால் வெளுத்து வாங்க வேண்டும்.

 

Related Articles

ஆப்ரிக்காவின் உயர்ந்த சிகரமான கிளிமாஞ்சா... கடல் மட்டத்தில் இருந்து 5895 மீட்டர் உயரம் இருக்கும் ஆப்ரிக்காவின் மிக உயர்ந்த சிகரமான கிளிமாஞ்சாரோவில் ஏறி சாதனை புரிந்திருக்கிறான் ஹைதராபாத்தைச் சேர...
பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஆசிரியர்களுக்கு ... கடந்த வாரம் (ஜூலை 5) ம் தேதியன்று வெளியாகி கலவையான விமர்சனம் பெற்ற படம் ராட்சசி. ஜோதிகா லீடாக நடிக்க பூர்ணிமா பாக்யராஜ், சத்யன் உள்ளிட்டோர் நடிப்பில் ...
கோபிநாத்தின் பாஸ்வேர்டு புத்தகத்தை ஏன் ப... நீயா நானா புகழ் கோபிநாத் மண்டபத்ரம், ப்ளீஸ் இந்தப் புத்தகத்தை வாங்க வேண்டாம், நிமிர்ந்து நில் உள்ளிட்ட பல புத்தகங்களை எழுதியுள்ளார். அவற்றில் மிக முக்...
” பிகில் ” படம் பற்றிய சுவார... தளபதி விஜய்க்கு தந்தை மகன் என்று இரட்டை வேடம். தந்தை மதுரை மார்க்கெட்டில் கசாப்புக்கடை நடத்துகிறார். மகன் மைக்கேல் புட்பால் வீரராக இருக்கிறார். ...

Be the first to comment on "ஜவுளிக்கடையில் குழந்தை தொழிலாளர்கள் படும்பாடு – கசப்பான குழந்தைகள் தினம் !"

Leave a comment

Your email address will not be published.


*