விஜய் ரஜினிக்கு நோ சொல்லி கமலுக்கு ஆதரவு தெரிவித்தார் என்பது வதந்தி!

Actor Vijay

கமல், ரஜினி வருகையைத் தொடர்ந்து அடுத்தது தளபதி விஜய்யும் அரசியலுக்கு வர இருக்கிறார் என்று செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. அதற்குத் தகுந்தாற்போல் விஜயின் தந்தை எஸ். ஏ. சந்திரசேகர் அவ்வப்போது விஜய் அரசியல் பயணம் பற்றி பேசிக்கொண்டிருகிறார். சமீபத்தில் கூட காலாவைக் காட்டிலும் மெர்சல் நல்ல அரசியல் படம் எனக் கூறி வரவேற்பும் எதிர்ப்பும் பெற்றுக்கொண்டார். அதே போல, கடந்த சில தினங்களுக்கு முன்பு சர்க்கார் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது. அதில் விஜய் சுருட்டு பிடிப்பது போல் இருந்ததால் உடனே அதற்கு பாமக அன்புமணி ராமதாஸிடம் இருந்து எதிர்ப்பு வந்தது. இதை வைத்து, பாமக வம்பு இழுத்ததால் தான் விஜயகாந்த் அரசியலுக்கு வந்தார் அதேபோல விஜயும் அரசியலுக்கு வருவார் என்று ஒரு தரப்பினர் கூறுகிறார்கள்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக விஜய் ரஜினியைப் புறக்கணித்து கமலை ஆதரிக்கிறார் என்று செய்திகள் உலாவிக் கொண்டிருக்கிறது. டுவிட்டரில் கமல்ஹாசன் ரசிகர்களுடன் உரையாடியபோது விஜய் ரசிகர் ஒருவர் உங்கள் தம்பி விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்பீர்களா என்று கேள்வி எழுப்ப, அதற்கு விஜய்யின் அரசியல் வருகையை வரவேற்பேன் என்று பதிலளித்தார். அதையடுத்து விஜயின் ரசிகர்கள் சிலர் ரஜினியுடன் தன் படத்தை இணைத்து வைத்து பிளக்ஸ் பேனர்கள் அடிப்பதை தவிர்க்க வேண்டும் என்று விஜய் தனது ரசிகர்களுக்கு அன்புக் கட்டளை விடுத்ததாக செய்திகள் வந்தது. இந்த இரண்டு செய்தியும் வேறு வேறு. ஆனால் இந்த இரண்டு செய்தியையும் வேண்டுமென்று திரித்துக் கொண்டு, ” விஜய் ரஜினியை புறக்கணிக்கிறார், கமலை ஆதரிக்கிறார்… ” என்று செய்திகள் பரவி வருகிறது.

ரஜினி, கமல் மீது மிகுந்த மரியாதை வைத்திருப்பவர் விஜய் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷியம். அதனால் ரஜினியுடன் என்னை ஒப்பிட்டு படங்கள் தயார் செய்ய வேண்டாம் என்ற பண்பான பதிலாகத் தான் விஜய்யின் கருத்து இருந்திருக்கிறது. அதேபோல கமலுக்கு அவர் குறுஞ்செய்தி மூலமாக நன்றி மட்டுமே கூறி இருக்கிறார். இணைவோம் என்று கூறவில்லை. உண்மையை சொல்லப் போனால் விஜய் வழக்கம் போல எந்த விளம்பரமுமின்றி ரசிகர்களுக்கும் தூத்துக்குடி சம்பவம் போன்று பல அரசு தாக்குதல்களால் பாதிப்படைந்த மக்களுக்கும் உதவி புரிந்து வருகிறாரே தவிர அவருடைய அரசியல் பயணம் இன்னும் தொடங்கவில்லை என்பது தான் உண்மை. அவர் அரசியலுக்கு எப்போது வருகிறார் என்பதை அவரே சர்க்கார் படத்தின் இசை வெளியீட்டு விழாவிலோ அல்லது எதாவது விருது விழாவில் அவராகவே கூறினால் தான் உண்டு. மற்றது எல்லாம் வெறும் வதந்தி.

Related Articles

வீட்டுக்குப் பொருட்களை அனுப்பி வைக்கும் ... தொழில்நுட்பம் முன்பு மனிதர்கள் செய்துவந்த மிகக் கடினமான வேலைகளை எளிமையாக்கியது, பிறகு அவர்களின் அன்றாட வாழ்வில் தவிர்க்க முடியாத அங்கமாக மாறிப்போனது. ...
உத்தர பிரதேசத்தில் எண்பது ஆண்டுகளுக்குப்... உத்திரபிரதேசத்தில் நடந்து வரும் சாதி ஆதிக்கம் பற்றி சொல்லித் தான் தெரிய வேண்டும் என்பது இல்லை. சக மனிதனை ஜாதியின் பெயரில் பொதுவெளியில் நிர்வாணமாக்கி அ...
கடந்த பத்தாண்டுகளில் வெளியான டாப் 10 சிற... 2010 ல் வெளியான படங்கள்:  2010 ம் ஆண்டில் மொத்தம் 143 படங்கள் ரிலீஸ் ஆகி உள்ளன. அவற்றில் ஆயிரத்தில் ஒருவன், நாணயம், கோவா, தமிழ் படம், விண்ணைத் தாண்டி...
லிஸ்ட் – பேஸ்புக்கின் புதிய அம்சம்... புதிய பயனாளிகளின் எண்ணிக்கையைக் கூட்டவும், ஏற்கனவே இருக்கும் பயனாளிகளை தக்கவைத்துக் கொள்ளவும் பேஸ்புக் நிறுவனம் தனது தளத்தை நிறைய மேம்படுத்தல்களுக்கு ...

Be the first to comment on "விஜய் ரஜினிக்கு நோ சொல்லி கமலுக்கு ஆதரவு தெரிவித்தார் என்பது வதந்தி!"

Leave a comment

Your email address will not be published.


*