அது என்ன கிகி சேலஞ்ச்!
உலகில் உள்ள பைத்தியங்கறை அரவேக்காட்டுகளை வெளிச்சம் போட்டு காட்டுவது தான் இந்த கிகி சேலஞ்ச்! இப்போது உலகம் முழுக்க டிரெண்டாகி வருகிறது இந்த சேலஞ்ச்! கனடா நாட்டை சேர்ந்த பிரபல ராப் பாடகர் டிரேக் என்பவர் எழுதி வெளியிட்ட பாடலின் பெயர் “இன் மை பீலிங்ஸ்”. இந்த பாடலில் வரும் “கி கி டூ யூ லவ் மீ” என்ற பாடல் வரிகள் பின்னணியில் ஒலிக்க, அதற்கு ஏற்ப நடனம் ஆட வேண்டும்.
இது தற்போது, ‘கிகி சேலஞ்ச்’ அல்லது ‘இன் மை பீலிங்ஸ் சேலஞ்ச்’ என உலகம் முழுவதும் பிரபலம் அடைந்து வருகிறது. இந்த சேலஞ்ச் அவ்வளவு சுலபமானது அல்ல. நடனம்தானே என சுலபமாக நினைத்து விட வேண்டாம். இது நம்ம ஊர் ‘ஐஸ் பக்கெட் சேலஞ்ச்’, இந்திய பிரதமர் மோடியின் ‘பிட்னஸ் சேலஞ்ச்’ காட்டிலும் கொஞ்சம் வித்தியாசமானது.
ஓடும் காரில் இருந்து இறங்கி, ‘கி கி டூ யூ லவ் மீ’ பாடல் வரிகளுக்கு நடனம் ஆட வேண்டும். பின்னர் மீண்டும் காரில் ஏறி கொள்ள வேண்டும். கடந்த சில வாரங்களாக உலகம் முழுவதையும் ஆட்டி படைத்து வரும் ‘கிகி சேலஞ்ச்’, தற்போது தமிழகத்திலும் பரவி வருகிறது.
பைத்தியங்கள்:
படப்ஸ்மாஸ் பைத்தியங்கள், மியூசிக்கல்லி பைத்தியங்கள், பைக் ரைட் பைத்தியங்கள் என்று நம்ம ஊரில் பைத்தியங்களுக்குப் பஞ்சம் இல்லை. இப்போது இந்த கிகி சேலஞ்ச் வந்துவிட ஏராளமானோர் விபத்துக்கு உள்ளாகின்றனர். அது சாலையில் போவோர் வருவோரின் கவனத்தை சிதைக்கும் வகையிலும் திருட்டுத் தொழில்கள் நடப்பதற்கு ஏதுவாகவும் இருக்கிறது என்பதால் போக்குவரத்து துறை போலீசார் எச்சரிக்கை தெரிவித்து உள்ளனர்.
பிடிங்க சார் அவன… பிடிச்சு ஜெயில போடுங்க சார் அவன என்று சந்தானத்தின் காமெடியை அந்த தகவலுக்கு கமெண்டாக கொடுத்து உள்ளனர் நெட்டிசன்கள்.
Be the first to comment on "கிறுக்கத்தனமான கிகி சேலஞ்ச்! – பப்ளிகுட்டி பைத்தியங்களை எச்சரித்த போக்குவரத்து போலீஸ்!"