உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள நொய்டாவில் உலகிலயே மிகப்பெரிய செல்போன் தயாரிப்பு தொழிற்சாலையை உருவாக்க இருக்கிறது சாம்சங் கம்பெனி.
சாம்சங் நிறுவனத்தின் பயணம் முதன்முதலில் 1990 ல் தொடங்கியது. அப்போது வெறும் எலக்ட்ரானிக் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனமாக மட்டுமே இருந்தது. அதை அடுத்து ஏழு வருடங்கள் கழித்து 1997 ல் அந்தத் தொழிற்சாலையாக டிவி தயாரிக்கும் தொழிற்சாலையாக முன்னேற்றியது. அது அப்போது டிவிக்கள் பிரபலமான காலம். அதைத் தொடர்ந்து செல்போன்கள் பிரபலமடைந்தது. அதற்கு ஏற்றார் போல கடந்த 2005ம் ஆண்டு செல்போன் தயாரிக்கும் தொழிற்சாலையாக உருவெடுத்தது. இப்படி காலத்தோடு ஒன்றி வருவதால் தான் பல தரப்பட்ட விமர்சனங்களை சந்தித்தாலும் இன்றும் வியாபாரத்தில் முன்னணியில் இருந்து வருகிறது. சென்ற ஆண்டு கூட இந்தியாவில் சாம்சங் மொபைல்களின் விற்பனை 27% ஆக உயர்ந்து இருக்கிறது. இந்தியாவின் மார்க்கெட் பெரியது என்பதால் மட்டுமின்றி இந்தியர்களின் எளிதில் மனம் கவர்ந்ததாலே தென் கொரியாவில் அமெரிக்காவில் சீனாவில் அமைக்காத உலகின் மிகப் பெரிய உற்பத்தி தொழிற்சாலையை இந்தியாவில் தொடங்கி இருக்கிறது.
உத்திரபிரதேசத்திலும் தமிழகத்திலும் சாம்சங்:
உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ளது போலவே காஞ்சிபுரத்தில் உள்ள ஸ்ரீபெரும்புத்தூரிலும் சாம்சங் மொபைல் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இனால் உத்திரப்பிரதேசத்தில் இயங்குவதைப் போல தமிழகத்தில் பெரிய அளவில் ஆலையை விரிவாக்க இல்லை.
நொய்டாவில் உள்ள தொழிற்சாலையில் அப்படி இல்லை. கடந்த வருடம் ஜூன் மாதம் ரூபாய் 4915 கோடி செலவில் ஆலை விரிவாக்கம் செய்யப்பட்டது. அது மட்டுமின்றி நொய்டாவில் உள்ள தொழிற்சாலையில் உற்பத்தி, வடிவமைப்பு என்றும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்கள் ஐந்தும் இயங்கி வருகிறது. அது மட்டுமின்றி அங்கு பணிபுரிபவர்களின் எண்ணிக்கை எழுபதாயிரத்துக்கும் மேல் உள்ளது.
இந்நிலையில் இந்தியாவுக்கு நான்கு நாள் அரசு முறைப் பயணமாக வந்துள்ள தென் கொரிய அதிபர் மூன் ஜேவும் பாரத பிரதமர் மோடியும் இணைந்து விரிவாக்கப்பட்ட ஆலையில் உற்பத்தி தொழிலை இருமடங்காக உயர்த்தி இருக்கும் பிரிவை திறந்து வைக்க இருக்கிறார்கள். இப்போது இரண்டு மடங்காக உயர்ந்துள்ள சாம்சங் உற்பத்தி, ஏற்கனவே பணியாற்றிய எழுபது ஆயிரம் ஊழியர்களுக்கு மட்டும் அல்லாமல் இன்னும் பதினைந்து ஆயிரம் ஊழியர்களுக்கு வேலை வாய்ப்பு தர இருப்பதாக கூறப்படுகிறது. உற்பத்தி அதிகரிப்பதால் மொபைல்களின் விலை குறையுமா என்று ஆவலுடன் காத்து இருக்கிறார்கள் மொபைல் பிரியர்கள்.
Be the first to comment on "உலகிலயே மிகப்பெரிய செல்போன் ஃபேக்ட்ரியை நொய்டாவில் உருவாக்குகிறது சாம்சங் நிறுவனம்!"