நீங்கள்லாம் ஆசிர்வதிக்கப்பட்ட வாழ்க்கய வாழுறிங்க – எதிர்பார்ப்பை தூண்டிய பேரன்பு ட்ரெய்ல

You are all living a blessed life - Expectation of Peranbu Trailer!

கற்றது தமிழ், தங்க மீன்கள், தரமணி என மூன்று அட்டகாசமான படங்களை இயக்கியவர் இயக்குனர் ராம். தற்போது மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டியுடன் கை கோர்த்து பேரன்பு படத்தை உருவாக்கி உள்ளார். இந்த முறை கண்டிப்பாக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுக்கு தேசிய விருது கிடைக்கும் என எதிர்பார்க்கப் படும் இந்தப் படத்தின் டீசர் 1 & டீசர் 2 சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. அதை தொடர்ந்து தற்போது ட்ரெய்லர் வெளியாகி உள்ளது.

” என் வாழ்க்கைல நடந்த சில விஷியங்களை தேர்ந்தெடுத்து இந்தக் கதையை நான் எழுதுறேன்…

நீங்க எவ்வளவு நல்ல ஆசிர்வதிக்கப் பட்ட ஒரு வாழ்க்கையை வாழ்ந்துட்டு இருக்கிங்கன்னு நீங்க புரிஞ்சிக்கிறதுக்காக நான் இத எழுதுறேன்…

பேரன்போடு அமுதவன்… ”

என்ற மாற்றுத் திறனாளி பெண்ணின் அப்பாவாக மம்முடியின் குரல் நம்மை என்னமோ செய்து விடுகிறது. 2019 ம் ஆண்டில் வெளியாகும் படங்களில் இந்தப் படம் மிக முக்கியமான படமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

பேரன்பு படம் கலந்து கொண்ட சர்வதே திரைப்பட விழாக்கள்:

* 47 th International Film Festival ROTTERDAM 2018.

* 21st SHANGHAI International Film Festival 2018.

* 49 th International Film Festival Of India, Goa 2018.

பேரன்பு படம் குறித்த பிரபலங்களின் பாராட்டு மழை :

* அரிதிலும் அரிதான பெரும்படைப்பு – ஒலாஃப் மோலர், எழுத்தாளர், திரை விமர்சகர் & திரைப்பட விழா பொறுப்பாளர்

* அழகானது, பாசாங்கற்றது, யூகிக்க முடியாதது மற்றும் சுவாரஸ்யமானது – கேரின் வுல்ஃப்ஸ், திரைப்பட விமர்சகர் & ஆசிரியர் VPRO ( நெதர்லாந்து )

* ஒளிவுமறைவற்று வெளிப்படையாக பேசுகிறது. மனம் திறந்து பாராட்டப்பட வேண்டியது. – டேனியல் கஸ்மான், எழுத்தாளர் & திரைப்பட விமர்சகர்

* மனித நேயத்தை ஆழமாகவும் மிகவும் தீர்க்கமாகவும் வெளிப்படுத்துகிறது. தமிழின் தனித்துவம் கொண்டிருந்தாலும் உண்மையில் இது ஒரு சர்வதேசப் படைப்பு. – ஸ்டெஃப்ன் பர்சாஸ், திரை ஆய்வாளர், எழுத்தாளர் & பொறுப்பாளர்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு மம்முட்டி தமிழுக்குத் திரும்பி வருகிறிர் என்பதிலும் நல்ல சினிமா எடுக்க தெரிந்த இயக்குனருடன் வருகிறார் என்பதாலும் இந்தப் படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது. பிப்ரவரி மாதம் வெளியாகிறது என்பது குறிப்பிடத் தக்கது.

Related Articles

பாக்யராஜின் நேர்மையை பாராட்டும் ரசிகர்கள... சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜயை வைத்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் படம் என்ற அறிவிப்பு வந்த நாளில் இருந்தே இந்தப் படம் பற்றி பலவாறு பேச்சு அடிபட்டது. ...
கடமை, கண்ணியம், கட்டுப்பாடு – இது ... காஞ்சித்தலைவன், தென்னாட்டு காந்தி, தென்னாட்டு பெர்னாட்ஷா, பேறிஞர், நூற்றாண்டு தலைவர் என்று பலவாறு  போற்றப்படும் தமிழகத்தின் ஒப்பற்ற தலைவர் அண்ணா என்கி...
போலீஸ் துறையில் இருப்பவர்கள் எல்லாருமே ம...   சிவகார்த்திகேயனும் அப்பா சென்டிமென்டும்:  சிவகார்த்திகேயன் எவ்வளவு கொடுத்து வைத்தவர் என்றால் யுவன் நா முத்துக்குமார் கூட்டணியில் உருவான தெய்வ...
இரண்டு மாதங்களில் 106 சிறுத்தைப்புலிகளை ... வருடத்தின் முதல் இரண்டு மாதங்களில் மட்டும் இந்தியாவில் கிட்டத்தட்ட 106 புலிகள் இறந்துள்ளன என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிக...

Be the first to comment on "நீங்கள்லாம் ஆசிர்வதிக்கப்பட்ட வாழ்க்கய வாழுறிங்க – எதிர்பார்ப்பை தூண்டிய பேரன்பு ட்ரெய்ல"

Leave a comment

Your email address will not be published.


*