நாடக கலைஞர்களை இளைஞர்கள் ஆதரிக்க வேண்டும்!

Young people need to support drama artist

சமீபத்தில் வெளியான படம் சீதக்காதி. அந்தப் படத்தில் நாடக கலைஞர்களின் வாழ்க்கை முறைகளை மிக அற்புதமாக காட்டி இருந்தது படக்குழு. அந்தப் படத்தில் காட்டப்பட்டது போலவே நாடக கலைஞர்களை இன்றைய கலைஞர்கள் ஆதரிப்பதில்லை என்பதே உண்மை. 

கடந்த ஞாயிறு ( 22. 12. 2019 ) மாலை 6.00 மணிக்கு சேலம் ஸ்ரீ ரத்னவேல் ஜெயக்குமார் திருமண மண்டபத்தில் TVK cultural academy மற்றும் The real theatre people இணைந்து நடத்திய பொன்னியின் செல்வன் நாடகம் அரங்கேற்றப்பட்டது. அங்கு என்ன நடந்தது என்பதை அப்படியே தெரிவிக்கிறோம். 

6.27க்கு அரங்க விளக்குகள் அணைக்கப்பட்டன். மேடை விளக்குகள் மட்டும் ஒளிர்ந்தன. 6. 35க்கு நாடகம் தொடங்கியது. இடைஇடையே ஆடியோ ப்ராளம் ஏற்பட்டது.  சலசலப்பு உண்டானது. டிக்கெட் விற்பனை மற்றும் சீட் அரேன்ஜ்மெண்ட் எதுவுமே சரியாக இல்லை. பாதி பேருக்கு திரை தெரியவில்லை. சில நிமிடங்களில் ரசிகர்கள் தங்களுடைய சேர்களை தூக்கிக்கொண்டு திரை அருகே சென்று அமர்ந்தனர். நிகழ்ச்சிக்கு முன்பே சரிபார்த்திருக்க வேண்டிய ஆடியோ ப்ராப்ளத்தை நிகழ்ச்சியினூடாக செய்தது ரசிகர்களை எரிச்சலூட்டியது. 

ஆடியோ ப்ராப்ளம் சரிசெய்யப்பட்ட பிறகு ரசிகர்களின் சலசலப்பு அமைதியானது. 1500 சீட்கள். அதில் வெறும் 300 பேர் மட்டுமே இளைஞர்களாக இருந்திருப்பார்கள். அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு  பொன்னியின் செல்வன் கதை தெரிந்திருக்கவில்லை. அதனால் ஒரு சிலர் தங்கள் அருகே அமர்ந்திருப்பவர்களுக்கு கதையை விளக்கி கொண்டிருந்தனர். 

ஏசி மண்டபம் என்பதால் டிக்கட் ரேட் (300, 500, 1000, 1500, 2000) அதிகம் . 

9 மணிக்கு இடைவேளை விட்டு 9.10க்குத் தொடங்கியது. இடையில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஆடியோ சிஸ்டம் சரியில்லை என மீண்டும் சண்டை போட்டார். 10.20க்கு நாடகம் முடிய 10.40 வரை நாடக இயக்குனர் மாலிக் ராஜ் தன்னுடைய நாடக குழுவை பற்றி விவரித்து ரசிகர்களுக்கு நன்றி சொல்லி நிகழ்ச்சியை முடித்தார். 

பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு என கல்கியின் மூன்று படைப்புகளை நாடகமாக போடக் கூடிய ஒரே குழு இந்தக் குழு தான். 

2005 ஜனவரி 25 தொடங்கிய இந்தக் குழுவுக்கு சேலத்தில் நடந்தது 142வது விழா. தயாரிப்பாளர் டி கே ரமேஷ் மற்றும் இயக்குனர் மாலிக்ராஜ் இருவரும் தங்களது பணியை சிறப்பாக செய்து வருகின்றனர். இதுபோன்று பல நாடக குழுக்கள் வீரபாண்டிய கட்டபொம்மன், வேலு நாச்சியார், எம்ஜிஆர் வாழ்க்கை வரலாற்று போன்ற நாடகங்களை அரங்கேற்றி வருகின்றனர். இதுபோன்ற நாடகங்கள் உங்கள் பகுதியில் நடந்தால் தவறாமல் கலந்துகொள்ளுங்கள். 

பொன்னியின் செல்வன் நாடகத்தை சேலத்தில் நடத்திய குழு கீழ்க்கண்ட 40 காட்சிகளின் மூலம் கிட்டத்தட்ட 75% பொன்னியின் செல்வன் கதையை மக்களுக்குப் புரிய வைத்தனர். 

  1. ஆழ்வார்க்கடியான் சிவன் விஷ்ணு சண்டை
  2. ஆழ்வார்க்கடியான் வந்தியத்தேவன் சந்திப்பு
  3. பெரிய பழுவேட்டரையர் வருகை
  4. பெரிய பழுவேட்டரையர் மீட்டிங்
  5. பல்லக்கிலிருந்து மதுராந்தகன் வருகை
  6. வந்தியத்தேவனை ஒற்றன் நினைத்து ஆழ்வார்க்கடியான் பின்தொடருதல்
  7. பெரிய பழுவேட்டரையரின் சூழ்ச்சி மீட்டிங்கை வந்தியத்தேவனும் ஆழ்வார்க்கடியானும் தெரிந்துகொள்ளுதல்
  8. குடந்தை சோதிடரை குந்தவையும் வானதியும் சந்தித்தல்
  9. குடந்தை சோதிடரை குந்தவையும் வானதியும் இருக்கும்போது சந்தித்தல்
  10. மந்திரவாதிகள் (ஆந்தை போல ஒலியெழுப்பும் ரவிதாஸன்) சூழ்ச்சி மீட்டிங் – ஆழ்வார்க்கடியான் ஒளிந்திருந்து அதை கேட்டல்
  11. பல்லக்கிலிருந்து நந்தினி வெளியேறுதல் – நந்தினி வந்தியத்தேவன் சந்திப்பு
  12. நந்தினி வந்தியத்தேவனுக்கு மோதிரம் கொடுத்தல்
  13. வந்தியத் தேவன் – சேந்தன் அமுதன் சந்திப்பு – ஊமை அம்மாவைப் பற்றி விளக்குதல்
  14. சேந்தன் அமுதன் தன் காதலி பூங்குழலியைப் பற்றி விளக்குதல்
  15. சின்ன பழுவேட்டரையரை மீறி சுந்தர சோழரை வந்தியத் தேவன் சந்தித்தல் – அரசிற்கு நேர இருக்கும் ஆபத்தை கூறுதல்
  16. நந்தினியை ஒளிந்திருந்து வந்தியத்தேவன் சந்தித்து பேசுதல் – குந்தவை மற்றும் ஓலைச்சுவடி பற்றி பேசுதல்
  17. செம்பியன் மாதேவி குந்தவை பற்றி பெரிய பழுவேட்டரையர் சின்ன பழுவேட்டரையர் பேசுதல் – சின்ன பழுவேட்டரையர் அண்ணி நந்தினியை பற்றி தவறாகப் பேசுதல் – சதித்திட்டத்தை விளக்குதல் – பெரிய பழுவேட்டரையர் கோபப்படுதல்
  18. மந்திரவாதியும் நந்தினியும் தங்களது திட்டம் பற்றி பேசுதல் – நந்தினியை மீட்டு வந்ததைப் பற்றி மந்திரவாதி பேசுதல் – 
  19. பெரிய பழுவேட்டரையர் நந்தினி சந்திப்பு – மதுராந்தகனுக்கு பட்டம் சூட்டுதல் பற்றி பேசுதல் – பழுவேட்டரையரை தன் திட்டத்திற்குத் தகுந்தாற்போல நைசாகப் பேசி மாற்றுதல்
  20. பாழடைந்த குகைப் பாதைக்குள் வந்தியத்தேவன் – மதுராந்தகனுக்குப் பாதுகாவலனாக கந்தமாறன் (சம்புவரையர் மகன்) – கந்தமாறன் முதுகில் குத்தப்படுகிறான் – கந்தமாறனை வந்தியத்தேவன் சேந்தன் அமுதன் வீட்டில் சேர்த்தல் – கொலைமுயற்சி பழி வந்தியத்தேவன் மீது விழுதல்
  21. ஒற்றன் வந்தியத்தேவன் பற்றி குந்தவை ஆழ்வார்க்கடியான் பேசுதல்
  22. குந்தவை வந்தியத்தேவன் சந்தித்து காதலித்து பேசுதல் – ஆதித்த கரிகாலன் கொடுத்த ஓலையை குந்தவையிடம் கொடுத்தல் – வந்தியத்தேவனிடம் அருள்மொழித்தேவரை இலங்கையிலிருந்து அழைத்து வரும் பணியை கொடுத்தல்
  23. ஆதித்த கரிகாலன் பல்லவ மன்னன் பார்த்திபேந்திரன்  அறிமுகம் 
  24. வீரபாண்டியன் நந்தினி காதல் ப்ளாஸ்பேக் – நந்தினி கெஞ்ச கெஞ்ச வீரபாண்டியனை ஆதித்த கரிகாலன் கொல்லுதல்
  25. பூங்குழலி (சமுத்திரகுமாரி) வந்தியத்தேவன் சந்திப்பு – பூங்குழலி மீது சேந்தன் அமுதனுக்கு இருக்கும் காதலை வந்தியத்தேவன் எடுத்துரைத்தல் – பூங்குழலியை தான் காதலிப்பதாக கூறி வந்தியத்தேவனை வம்பிழுத்தல் – எல்லா வகையிலும் வந்தியத்தேவனுக்கு உதவுமாறு பூங்குழலிக்கு குந்தவையின் ஓலையை காட்டுதல் – அருள்மொழித்தேவர் மீது தனக்கு இருக்கும் காதலை பூங்குழலி விளக்குதல்
  26. சுந்தர சோழரை நந்தினி பேயாக மிரட்டுதல் – மந்தாகினி பற்றி சுந்தரசோழர் புலம்புதல் – நல்ம் விசாரித்த குந்தவையிடம் மந்தாகினி (வாய் பேச முடியாத ஊமை) ப்ளாஸ்பேக் பற்றி சொல்லுதல் 
  27. நந்தினியும் குந்தவையும் சந்தித்து தங்களது பழைய வாழ்க்கையை பற்றி பேசுதல் – குந்தவையிடம் கந்தமாறனும் நந்தினியும் சேர்ந்து வந்தியத்தேவனை பற்றி தவறாகப் பேசுதல் – கந்தமாறனை காப்பாற்றிய வந்தியத்தேவன் பற்றி சேந்தன் அமுதன் சாட்சி சொல்லுதல்
  28. வந்தியத்தேவன் இலங்கைக்குச் செல்ல அவரை பின்தொடர்ந்து ஆழ்வார்க்கடியான் செல்லுதல் – ஆதித்த கரிகாலனின் தம்பி குந்தவையின் தம்பி பொன்னியின் செல்வனை வந்தியத்தேவன் சந்தித்து ஓலையை கொடுத்தல் – சித்தப்பா மதுராந்தகர் பதவியேற்பதற்கு பொன்னியின் செல்வன் ஒப்புக்கொள்ளுதல் – வந்தியத்தேவன் குந்தவை குடுத்த ஓலையை குடுத்து மன்னரிடம் வர சொல்ல – ஆதித்த கரிகாலன் பார்த்திபேந்திரனிடம் ஓலைகொடுத்து காஞ்சிக்கு வர சொல்ல – சுந்தரசோழர் ஆழ்வார்க்கடியானிடம் ஓலைகொடுத்து இலங்கையிலயே இருக்க சொல்ல பொன்னியின் செல்வன் குழம்புதல் – தன்னை இலங்கைக்கு அழைத்து வந்த பூங்குழலி பற்றி பொன்னியின் செல்வனிடம் வந்தியத்தேவன் சொல்லுதல் – பொன்னியின் செல்வனை கைது பண்ண சொன்ன சுந்தர சோழரின் ஆணை பற்றி பழுவேட்டரையர்களின் திட்டம் பற்றி பூங்குழலி எடுத்துச் சொல்லுதல்
  29. பெரும்புயலில் வந்தியத்தேவன் சிக்கி அவன் கப்பல் எரிய பொன்னியின் செல்வன் அவனை காப்பாற்ற கடலுக்குள் குதிக்கிறார். 
  30. செம்பியன் மாதேவியும் மகன் மதுராந்தகர்(கண்டாராதித்தரின் மகன்) சந்திப்பு – கடம்பூர் மாளிகையின் மன்னர் ஆக கூடாது என செம்பியன் மாதேவி அறிவுறுத்தல் – போருக்கு அழைத்துச் செல்லாமல் சாமியறைக்கு அழைத்துச் சென்றே ஆண்டியாக்கிய தாயிடம் மதுராந்தகர் மன்றாடுதல் – தான் உன்னை பெற்றெடுக்கவில்லை என தேவி பேச – அமைச்சர் அநிருத்தர் கண்டராதித்தர் செம்பியன் தேவிக்கு மதுராந்தகர் பிறக்கவில்லை என்ற செய்தியை வெளியே தெரிய வேண்டாம் என அவர்களுக்கு ஆறுதல் கூற – அருள்மொழிவர்மனுக்கு இலங்கையில் நேர்ந்ததை அநிருத்தர் சொல்லி மதுராந்தகரையே மன்னராக்கிவிடலாம் என்ற சுந்தர சோழரின் முடிவை கூற தேவி மறுப்பு தெரிவிக்கிறார்
  31. இலங்கையிலிருந்து திரும்பி வந்தியத்தேவன் நந்தினியை சந்தித்தல் – அருள்மொழிவர்மனை பற்றி நந்தினி வினவுதல் – அருள்மொழிவர்மன் பற்றி தெரியாது என வந்தியத்தேவன் சொல்லுதல் – ஆதித்த கரிகாலனை சந்திக்க நந்தினி வேண்டுதல் – நந்தினி தன் கையில் வைத்திருக்கும் வாளின் நோக்கம் (பாண்டியநாட்டு வாள்) பற்றி சொல்லுதல் – நந்தினி வந்தியத்தேவனை சிறையிலடைத்தல்
  32. சிறையிலிருந்த வந்தியத்தேவனை குந்தவை விடுதலை செய்தல் – அநிருத்தர் வந்தியத்தேவனை நந்தினியின் ஒற்றன் என சிறைபிடிக்க – குந்தவை விடுதலை செய்ய – நந்தினியின் சதியை நினைத்து குந்தவை பதற – ஆதித்த கரிகாலனின் வருகையை தடுக்க வேண்டுமென குந்தவை வந்தியத்தேவனுக்கு கட்டளை இடுதல்  
  33. ஆதித்த கரிகாலன் பழுவேட்டரையர் சம்புவரையர் சந்திப்பு – நந்தினி பழுவேட்டரையர் உறவுபற்றி ஆதித்த கரிகாலன் பேசுதல் – ஆதித்த கரிகாலனுக்கு தன் மகள் மணிமேகலையை திருமணம் செய்துகொடுக்க சம்புவரையர் ஆசைப்படுதல் – 
  34. மந்திரவாதிகள் சுந்தர சோழர் மற்றும் ஆதித்த கரிகாலரை திட்டமிடுதல்
  35. மந்தாகினி குறுக்கே பாய்ந்து சுந்தர சோழரின் உயிரைக் காப்பாற்றுதல் – மந்தாகினி பற்றி பொன்னியின் செல்வன் பூங்குழலி சுந்தர சோழர் மூவரும் பேசுதல் – மந்தாகினி உயிரிழத்தல்
  36. நந்தினி வந்தியத்தேவன் சந்திப்பு – ஆதித்த கரிகாலன் தனது சகோதரன் என்ற தகவலை நந்தினி நம்ப மறுத்தள் – நந்தினியின் அம்மா மந்தாகினி இறப்பு பற்றி நந்தினியிடம் கூறுதல்
  37. நந்தினி ஆதித்த கரிகாலன் சந்திப்பு – வீரபாண்டியனின் வாள் நோக்கத்தை ஆதித்த கரிகாலன் புரிந்துகொள்ளுதல் – ஆதித்த கரிகாலனை நந்தினி கொல்ல மறுத்தல் – நந்தினி கண்முன்னே யாரோ ஒருவர் ஆதித்த கரிகாலனை கொல்லுதல் – வந்தியத்தேவன் தான் கொன்றான் என கந்தமாறன் அவனை கைதுசெய்தல் 
  38. மதுராந்தகர் அநிருத்தர் தேவி சந்திப்பு – மதுராந்தகரிடம் தேவி நான் உன்னை பெற்ற தாயல்ல உண்மையைக் கூறுதல் – தோட்டத்தில் வசித்து வந்த ஊமைப்பெண்ணுக்கு பிறந்தவன் தான் மதுராந்தகன் என அறிதல் – தேவிக்குப் பிறந்த அசைவற்ற குழந்தையை ஊமைப்பெண் வளர்த்த கதை – ஊமைப்பெண்ணுக்கு பிறந்த பெண் குழந்தை நந்தினியை அநிருத்தர் தனது சீடன் ஆழ்வார்க்கடியானிடம் குடுத்து வளர்த்தல் – மந்தாகினியின் மகன் தான் மதுராந்தகன், மகள் தான் நந்தினி – தேவிக்குப் பிறந்த குழந்தை சேந்தன் அமுதன் என்ற உண்மைகள் வெளிப்படுதல்
  39. சுந்தர சோழர் குணம்பெற்று ஆதித்த கரிகாலனின் கொலை பற்றி விசாரணை நடத்துதல் – வந்தியத்தேவனை கொன்று ஆற்றில் மிதக்கவிட்டேன் என கந்தமாறன் சொல்லுதல் – வந்தியத்தேவன் மீண்டும் கண்முன் தோன்றுதல் – இளவரசனை கொன்றது வந்தியத்தேவன் இல்லை நான் தான் என பழுவேட்டரையர் ஒப்புக்கொண்டு தற்கொலை செய்துகொள்ள முயலுதல் (நந்தினி மீது வீசிய கத்தி குறி தவறியதால் ஆதித்த கரிகாலன் இறந்தான்) – பெரிய பழுவேட்டரையர் இறத்தல்
  40. பொன்னியின் செல்வனுக்கு மகுடாபிஷேகம் – பொன்னியின் செல்வனோ சேந்தன் அமுதனுக்கு மணிமகுடம் சூட்டுகிறான் – 

கைதட்டல்கள் வந்த இடம் : 

  1. நந்தின் பெயர் வந்தபோது
  2. பெரிய பழுவேட்டரையர் அறிமுகம்
  3. வந்தியத்தேவன் அறிமுகம்
  4. வந்தியத்தேவன் குந்தவை சந்திப்பு – பார்த்தவுடன் காதல்
  5. நந்தினி அறிமுகம்
  6. குந்தவை வந்தியத்தேவன் ரொமான்ஸ் செய்த இடங்கள்
  7. பூங்குழலியிடம் வந்தியத்தேவன் வம்பிழுக்கும் இடங்கள்
  8. நாட்டை ஆளத்துடிக்கும் நபர்கள் பற்றி அருள்மொழித்தேவர் கேட்க ரஜினி கமல் பற்றி வந்தியத்தேவன் சொல்லுதல்
  9. பொன்னியின் செல்வன் பெயர்க்காரணம்
  10. மந்தாகினியின் சாவை ஜெயலலிதாவின் சாவுடன் ஒப்பிட்டு பேசுதல்

நாடகத்தில் நடித்த கதாபாத்திரங்களின் உடலமைப்பு உடல்மொழிகள் செம. பொன்னியின் செல்வனை போன்று மற்றும் பல நாடகங்களுக்கும் மக்கள் ஆதரவு தர வேண்டும். 

Related Articles

ஐபிஎல் அட்டவணை 2018... போட்டி எண் தேதி போட்டி நேரம் இடம்1 7-ஏப்ரல் மும்பை vs சென்னை 8:00 PM மும்பை2 8-ஏப்ரல் டெல்லி vs பஞ்சாப் 4:00 PM டெல்லி...
நம்மோட திறமைகளை நாம காட்டிட்டே இருக்கணும... மலையாளத்தில் ஜி ஆர் இந்துகோபன் எழுதிய திருடன் மணியன் பிள்ளை என்ற புத்தகத்தை தமிழில் மொழிபெயர்த்துள்ளார் எழுத்தாளர் குளச்சல் மு யூசுப். காலச்சுவடு பதிப...
தமிழ் சீரியல்களில் மாமியார் கொடுமைகள்!... பரபரப்பான சீரியல்களை ஒளிபரப்புவதில் சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ், கலர்ஸ் தமிழ் ஆகிய நான்கு சேனல்கள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த சீரியல்கள் எ...
96 ராமை போல் திருமணம் செய்யாமலே வாழ்வது ... 96 படம் சமீபத்தில் வெளியாகி விஜய் சேதுபதி மற்றும் திரிஷா ரசிகர்களின் பலத்த  ஆதரவை பெற்றது. வசூல் ரீதியாக விமர்சன ரீதியாக இந்தப் படம் பெரிய வெற்றியை ர...

Be the first to comment on "நாடக கலைஞர்களை இளைஞர்கள் ஆதரிக்க வேண்டும்!"

Leave a comment

Your email address will not be published.


*