அதிகரிக்க இருக்கிறது வீட்டுக்கடனுக்கான இஎம்ஐ. சரக்குகள் மற்றும் சேவைகளின் கட்டணமும் உயரும் அபாயம்

ரெப்போ விகிதத்தை 25 புள்ளிகள் வரை உயர்த்தி ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பைத் தொடர்ந்து வீட்டுக்கடனுக்கான இஎம்ஐ. சரக்குகள் மற்றும் சேவைகளின் கட்டணமும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை ரிசர்வ் வங்கி நேற்று (புதன்கிழமை) வெளியிட்டு இருக்கிறது.

நடப்பு நிதியாண்டில் முதல் ஆறு மாதங்களுக்கான பணவீக்கத்தின்  அளவீடாக 4.8 முதல் 4.9 சதவீதமாக நிதிக் கொள்கைக் குழுவால் திருத்தி அமைக்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக வீட்டுக்கடனுக்கான மாத தவணை மற்றும் வாகன கடன்களுக்கான வட்டியும் உயரும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. நான்கு வருடங்களுக்குப் பிறகு ரெப்போ விகிதம் உயர்த்தப்பட்டு இருப்பது நாடு முழுவதும் பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

 

சாதகமற்ற சர்வதேச சூழல்

கச்சா எண்ணெய் விலை  இரண்டு மாதங்களில் 12 சதவீதம் வரை உயர்ந்திருக்கிறது. ஏப்ரல் மாதம் 66 டாலர்களாக இருந்த ஒரு பீப்பாயின் விலை தற்போது 74 டாலர்களாக உயர்ந்து இருக்கிறது. ரூபாயின் மதிப்பும் தொடர்ந்து குறைந்து வருகிறது. இது போன்ற காரணங்களால் வட்டி விகிதம் உயர்த்தப்படுவதாக நிதிக் கொள்கைக் குழு தெரிவித்து இருக்கிறது. வட்டி விகிதம் உயர்த்தப்பட்டதன் காரணமாக நடுத்தர கால கடன்களுக்கான வட்டியையும் வங்கிகள் உயர்த்தக்கூடும் என அஞ்சப்படுகிறது.

மொத்த உள்நாட்டு வளர்ச்சியின் விகிதம்  எந்த மாற்றமும் இல்லாமல் 7 . 4 சதவீதமாகவே நீடிக்கிறது. அதன் வளர்ச்சி முதல் பாதியில் 7 .5 முதல் 7 . 6 சதவீதமாகவும், இரண்டாம் பாதியில் 7 . 3 முதல் 7 . 4 சதவீதமாகவும் இருக்கும் என்று கணிக்கப்பட்டு இருக்கிறது.

Related Articles

பெரியார் பற்றிய 20 தகவல்கள்!... ஈரோட்டில் 1879ம் ஆண்டு செப்டம்பர் 17ம் தேதி பிறந்தார். பெற்றோர் வெங்கட்ட நாயக்கர் - சின்னத் தாயம்மாள். இவருக்கு பெற்றோர் வைத்த பெயர் ராமசாமி. இவர...
இந்த சமூகம் எதை கற்றுக்கொடுக்கிறது? நாமெ... மாரடைப்பு, சாலை விபத்து, தற்கொலை இந்த மூன்றும் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதற்கு காரணம் அதீத மன உளைச்சல். இப்படி மன உளைச்...
“தப்ப நான் செஞ்சுட்டு தண்டனைய அவனு... இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் இயக்குனர் புனித். இவர் இயக்கி உள்ள " காதல் ஒன்று கண்டேன் " என்ற குறும்படம் யூடூப்பில் வெளியான ஒரே நா...
சிறுமி ஹாசினியை கொலை செய்த தஷ்வந்த்க்கு ... சென்னை குன்றத்தூர் பகுதியைச் சேர்ந்த சிறுமி ஹாசினி கடந்தாண்டு பிப்ரவரி மாதம் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார். அதற்கான தண்டனை பற்றிய விவரங...

Be the first to comment on "அதிகரிக்க இருக்கிறது வீட்டுக்கடனுக்கான இஎம்ஐ. சரக்குகள் மற்றும் சேவைகளின் கட்டணமும் உயரும் அபாயம்"

Leave a comment

Your email address will not be published.


*