தற்காலிகஓட்டுநர்! அனுபவமில்லாத ஓட்டுநர்களின் கையில் அரசுப்பேருந்துகள்! – தொடரும் விபத்துக்கள்!

government bus

சாலை விபத்துக்களில் தமிழகம் ஏற்கனவே முதலிடம் வகித்து வருகிறது. இந்நிலையில் போக்குவரத்துகழக ஊழியர்கள் தொடர் வேலைநிறுத்தம் செய்வதால் அனுபவமில்லாத ஓட்டுநர்களின் கையில் அரசுப்பேருந்துகளை ஒப்படைத்து சாலை விபத்துக்கள் தொடர்வதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது தமிழக அரசு. அது மட்டுமில்லாமல் ஊழியர்கள் அனைவரும் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பிவிட்டனர் என்று பொய்யான தகவலையும் பரப்பி வருகிறது.

ஓயாத போராட்டம்:

கடந்த சில நாட்களாக தமிழக போக்குவரத்துகழக ஊழியர்கள் தொடர் வேலைநிறுத்தம் செய்துவருகிறார்கள். அவர்களை இன்னும் இரண்டு நாளில் பணிக்கு திரும்பாவிட்டால் பணிநீக்கம் செய்யப்படும் என்று அமைச்சர்கள் அச்சிறுத்தியும் ஊழியர்கள் தங்களின் போராட்டத்தை கைவிடவில்லை. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜி அவர்களும் இது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். ஆனாலும் இதற்கான விடைகள் இன்னும் கிடைத்தபாடில்லை. இப்போது போக்குவரத்து ஊழியர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராடி வருகின்றனர்.

அரசு, எங்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் பேச்சுவார்த்தை நடத்தினால் நாங்கள் போராட்டத்தை கைவிடுகிறோம் என்றும் கூறியுள்ளனர். அமைச்சர்களின் டிரைவருக்கு கொடுக்கும் சம்பளத்தை கொடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர். இதனையடுத்து ஒருசில மாவட்டங்களில் சில ஊழியர்களுக்கு  தற்காலிக பணிநீக்கம் வழங்கப்பட்டுள்ளது.

பயணிகள் அவதி:

இந்த குழப்பமான சூழலால் அதிகம் பாதிக்கப்படுவது பொதுமக்கள் தான். இந்த சூழலை பயன்படுத்தி தனியார் பேருந்துகள் கட்டண விலையை உயர்த்தி நல்ல லாபம் பார்த்து வருகிறது. இருந்தாலும் தனியார் பேருந்துகளில் கூட்டத்திற்கு குறைவில்லை.

ஒருசில இடங்களில் அரசுப்பேருந்துகள் இயங்கிக்கொண்டிருக்கிறது. ஆனால் அவற்றை இயக்கும் ஓட்டுநர்களும் நடத்துனர்களும் முறையான பயிற்சி இல்லாதவர்கள். அனைவரும் இருபது முதல் முப்பது வயதுக்குட்பட்ட இளைஞர்கள். கலர் சட்டை அணிந்துகொண்டு அதற்கு மேல் காக்கிசட்டை அணிந்து தற்காலிக பணியாளர்களாக இயங்கி வருகின்றனர். இவர்களுக்கோ சரியான வழித்தடம் தெரிவதில்லை. டிக்கெட்டின் விலை தெரிவதில்லை. அனைத்தையும் பயணிகளிடம் கேட்டு தெரிந்துகொண்டு திணறியபடி பேருந்தை இயக்கி வருகின்றனர். அதிலும் ஒருசில ஓட்டுநர்கள் பேருந்தை வாய்க்கால், கம்மாய், புளியமரம், சாலையோரக்கடை என்று பல இடங்களில் பேருந்தை மோதச்செய்து உயிர்சேதத்தை உண்டாக்கிவிடுகின்றனர். இவர்களை குத்தம் சொல்லி என்ன பயன். நம்ம ஊர் அரசுப்பேருந்துகளின் நிலைமை அந்த லட்சணத்தில் இருக்கிறது. சரியான பராமரிப்பு இல்லாமல் பயணத்தில் பாதியில் நின்று பயணிகளை வேறு ஒரு பேருந்தில் ஏற்றிவிடும் பழுதடைந்த அரசுப்பேருந்துகளை கணக்கிட்டால் வருடத்திற்கு நூறைத் தாண்டும்.

சமூக வலைத்தளங்களில் பலரும் இந்த அவல நிலையை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். தற்காலிக ஓட்டுநர் என்று ஹேஸ்டேக் போட்டு நிலவி வரும் இந்த அவல நிலையை, தமிழ்நாட்டுல முதலமைச்சர் முதற்கொண்டு பேருந்து ஓட்டுநர் வரைக்கும் எல்லாமே தற்காலிகமாவே இருக்கே என்று வழக்கம்போல கலாய்த்து தள்ளுகிறார்கள்.

இங்கே இப்படி இருக்க, அமைச்சர்களோ அம்மாவின் ஸ்கூட்டி வழங்கும் திட்டத்தை விரைவில் நிறைவேற்றுவோம். அதற்கான மானியத்தை மேலும் ஐயாயிரமாக உயர்த்துகிறோம் என்று அம்மாவின் புகழை காப்பாற்றும் விதத்தில் பெருமை பேசி சட்டசபையில் மேஜையை கும்பலாக தட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

எது அத்தியாவசியமோ அதை மட்டும் செய்யமாட்டார்கள். அவர்களின் புகழை நிலைநாட்ட என்ன செய்ய வேண்டுமோ அதற்காக மட்டும் நிதியை வாரி வழங்குவார்கள் என்று விமர்சனங்கள் எழுந்து வருகிறது.

Related Articles

” மணிரத்னம் படைப்புகள் ஓர் உரையாடல... தமிழ் சினிமாவின் மிக முக்கியமான இயக்குனர் திரு. மணிரத்னம் அவர்கள். அவருடன் பிரபல திரைவிமர்சகர் மேற்கொண்ட உரையாடல், " மணிரத்னம் படைப்புகள் ஓர் உரையாடல்...
ரயிலில் பயணச்சீட்டு முன்பதிவு செய்ய புதி... இ-வாலட்(E-Wallet) மூலம் ரயிலில் முன்பதிவு செய்யும்  புதிய வசதியைப் பயணிகளுக்கு அறிமுகம் செய்துள்ளது ஐஆர்சிடிசி. ஐஆர்சிடிசியின் அதிகாரப்பூர்வ திறன்பேசி...
தமிழக அரசின் ஓராண்டு சோதனைகள் ! – ... 2016 டிசம்பர் 5 ம் தேதியில் இருந்து தமிழகம் பல சோதனைகளை சந்தித்து வருகிறது. ஒரே ஒரு ஓட்டைப் போட்டுதற்கு மூன்று முதலமைச்சர்களை உருவாக்கி உலக வரலாற்று ...
நோட்டு கொடுக்கலனா நோட்டாவுக்குத் தான் ஓட... அனல் பறக்கும் தமிழக தேர்தல் களம்... தீவிர வாக்குசேகரிப்பில் வேட்பாளர்கள் துணை முதல்வர் பரப்புரையில் கலந்துகொள்ள பெண்களுக்கு பணம்?...

Be the first to comment on "தற்காலிகஓட்டுநர்! அனுபவமில்லாத ஓட்டுநர்களின் கையில் அரசுப்பேருந்துகள்! – தொடரும் விபத்துக்கள்!"

Leave a comment

Your email address will not be published.


*