ரெப்போ விகிதத்தை 25 புள்ளிகள் வரை உயர்த்தி ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பைத் தொடர்ந்து வீட்டுக்கடனுக்கான இஎம்ஐ. சரக்குகள் மற்றும் சேவைகளின் கட்டணமும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை ரிசர்வ் வங்கி நேற்று (புதன்கிழமை) வெளியிட்டு இருக்கிறது.
நடப்பு நிதியாண்டில் முதல் ஆறு மாதங்களுக்கான பணவீக்கத்தின் அளவீடாக 4.8 முதல் 4.9 சதவீதமாக நிதிக் கொள்கைக் குழுவால் திருத்தி அமைக்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக வீட்டுக்கடனுக்கான மாத தவணை மற்றும் வாகன கடன்களுக்கான வட்டியும் உயரும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. நான்கு வருடங்களுக்குப் பிறகு ரெப்போ விகிதம் உயர்த்தப்பட்டு இருப்பது நாடு முழுவதும் பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
சாதகமற்ற சர்வதேச சூழல்
கச்சா எண்ணெய் விலை இரண்டு மாதங்களில் 12 சதவீதம் வரை உயர்ந்திருக்கிறது. ஏப்ரல் மாதம் 66 டாலர்களாக இருந்த ஒரு பீப்பாயின் விலை தற்போது 74 டாலர்களாக உயர்ந்து இருக்கிறது. ரூபாயின் மதிப்பும் தொடர்ந்து குறைந்து வருகிறது. இது போன்ற காரணங்களால் வட்டி விகிதம் உயர்த்தப்படுவதாக நிதிக் கொள்கைக் குழு தெரிவித்து இருக்கிறது. வட்டி விகிதம் உயர்த்தப்பட்டதன் காரணமாக நடுத்தர கால கடன்களுக்கான வட்டியையும் வங்கிகள் உயர்த்தக்கூடும் என அஞ்சப்படுகிறது.
மொத்த உள்நாட்டு வளர்ச்சியின் விகிதம் எந்த மாற்றமும் இல்லாமல் 7 . 4 சதவீதமாகவே நீடிக்கிறது. அதன் வளர்ச்சி முதல் பாதியில் 7 .5 முதல் 7 . 6 சதவீதமாகவும், இரண்டாம் பாதியில் 7 . 3 முதல் 7 . 4 சதவீதமாகவும் இருக்கும் என்று கணிக்கப்பட்டு இருக்கிறது.
Be the first to comment on "அதிகரிக்க இருக்கிறது வீட்டுக்கடனுக்கான இஎம்ஐ. சரக்குகள் மற்றும் சேவைகளின் கட்டணமும் உயரும் அபாயம்"