அளவுக்கு அதிகமாகத் தண்ணீர் அருந்துவது மூளை வீக்கத்திற்கு வழி வகுக்கும் – ஆய்வாளர்கள் தகவல்

ஹைபோநெட்ரீமியா(hyponatremia) என்பது ரத்தத்தில் சோடியத்தின் அளவைக் குறைக்கும் ஒரு நோய் ஆகும். இதனால் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் நிலையான மூளை வீக்கத்திற்கு இட்டுச் செல்லும். தொடர்ந்து அதிக அளவில் தண்ணீர் குடிப்பதனால் ஹைபோநெட்ரீமியா ஏற்படும் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

கனடா மேக்கில் பல்கலைக்கழக(McGill University) சுகாதார மையத்தின் ஆராய்ச்சி நிறுவனத்தைச் சார்ந்த ஒரு குழு, மூளை எப்படி  ஹைபோநெட்ரீமியாவை அடையாளம் காண்கிறது எனவும், அளவுக்கு அதிகமான தண்ணீர் உடலில் இருப்பதை எப்படி ஒழுங்குசெய்கிறது எனவும் ஆய்வில் ஈடுபட்டது.

ஜெர்னல் செல் ரிப்போர்ட்ஸ்(Journal Cell Reports) என்ற ஆய்விதழில் இந்த ஆய்வு வெளியாகி இருக்கிறது. மூளை எவ்வாறு ஹைபோநெட்ரீமியாவை அடையாளம் காண்கிறது என்பது இந்த ஆய்வின் அடிப்படை நோக்கமாகும்.

 

காக்கும் மனித மூளை

பல்கலைக்கழக ஆய்வுக் குழுவின் சார்பாகப் பேசிய சார்லஸ் போர்க்கே ‘ஹைட்ரோமினெரல் மற்றும் திரவ-எலக்ட்ரோலைட் ஹோமியோஸ்டிஸ் (hydromineral and fluid electrolyte homeostasis)ஆகியவற்றைப் படிக்கும் மாணவர்களுக்கு எங்கள் ஆய்வு முடிவுகள் மிகவும் உதவிக்கரமான ஒன்றாக இருக்கும், மற்றும் ஹைப்போநட்ரீமியா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்களுக்கும் இது உதவும்’ என்றார்.

வயதான நோயாளிகளுக்கு இந்த நிலை மிகவும் பொதுவானது இதனால் அறிவாற்றல் பிரச்சினைகள் மற்றும் வலிப்புத்தாக்கங்களை ஏற்படும் எனத் தெரிகிறது. இருப்பினும் ஹைபோநெட்ரீமியா  எப்படி உருவாகிறது என்பது குறித்த தெளிவான கருத்துக்கள் இன்னும் உருவாக்கப்படவில்லை.

உடலில் அதிகளவு நீர் சேர்ந்ததும் அது Trpv4  என்ற ஒன்றை இயக்குகிறது. அது உடலில் நீர் சமநிலையை பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. Trpv4 என்பது கால்சியம் சேனலாகும், இதை புளுமை செல்களில்க்(Glial Cells) காணலாம், அவை நீரோட்டங்கள் உணர்திறன் நரம்புக்கலங்களைச்(hydration sensing neurons) சுற்றிச் செயல்படும் செல்கள் ஆகும்.

குளோரல் செல்கள் முதன்முறையாக நீரிழப்பு நிலையைக் கண்டுபிடித்து பின்னர் நீர்மம் உணர்திறன் நரம்பணுக்களின் மின்சார செயல்பாட்டை நிறுத்துமாறு தகவல் அனுப்புகிறது.

உடலில் சேரும் அதிகளவிலான நீரை கண்டுபிடிக்கும் மூளையின் திறன் மிக முக்கியமானது என்றும் அதுவே ஹைபோநெட்ரீமியா போன்ற நோய்களில் இருந்து காக்கும் என்றும் ஆய்வாளர்கள் மேலும் தெரிவித்தனர்.

Related Articles

100 தமிழ் சினிமா பிரபலங்களின் சம்பள விவர... இங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் இயக்குனர், நடிகர், நடிகைகள், இசை அமைப்பாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் ஆகியோரின் சம்பள விவரங்கள் அனைத்தும் 2019ம் ஆண்டிற்கு உ...
“ஹோம் ஸ்கூலிங்” முறை சிறந்தத... பிள்ளையை படிக்க வைக்கணும், என்ன படிக்க வைக்கலாம்? எங்க படிக்க வைக்கலாம்? என்ற கேள்விக்கு இந்த சமூகத்தில் சமச்சீர்ல, சிபிஎஸ்சி ஸ்கூல்ல, இன்டர்னேஷ்னல் ...
பார்க்க வேண்டிய உலக சினிமாக்கள்!... 1.children of heaven2.Life is beautiful3.The way home4.the road home5.cinema paradiso6.run lala run7.mariya full of grace ...
நாம் யாரை சப்பை என்கிறோமோ அவர்களே சாதிக்... பொல்லாதவன் படத்தில் தனுஷின் அப்பாவை காலில் வெட்டி விடுவார்கள். அப்போது ஹாஸ்பிட்டலுக்கு தனுஷின் அப்பாவைப் பார்க்க வரும் செல்வாவிடம், "நான் சப்பைதான... ...

Be the first to comment on "அளவுக்கு அதிகமாகத் தண்ணீர் அருந்துவது மூளை வீக்கத்திற்கு வழி வகுக்கும் – ஆய்வாளர்கள் தகவல்"

Leave a comment

Your email address will not be published.


*