இந்த ஆண்டின் சிறந்த படங்களில் ஒன்று ” ஒரு குப்பைக் கதை “

என்ன தான் குப்பை அள்ளுறவனா இருந்தாலும் அவன் மனசு சுத்தம் என்பது படத்தின் மையக்கரு. சமூக வலைதளங்களில் போராளி வேசம் போட்டுத் திரியும் போலி பொதுநலவாதிகள், அறியாமையால் நாகரிகமற்று வாழும் மக்கள் என்று சாலையில் பொறுப்பின்றி குப்பையை வீசிச் செல்லும் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய படம்.

படத்தின் முதல் பாகத்தில் மட்டும் சில காமெடி சீன்கள். மற்ற நேரம் முழுக்க வறுமை, இறுக்கம், சோகம், பேராசை, துரோகம் இவை தான் சுற்றிசுற்றி வலம் வருகிறது. நாயகனாக அறிமுகமாகி இருக்கிறார் தினேஷ் மாஸ்டர். முதல் படமே இப்படி ஒரு அழுத்தமான கதைக்களம். மாஸ்டரின் துணிச்சல் பாராட்டுக்கு உரியது. நடன இயக்குனர்களுக்கு நடிப்பது அவ்வளவு கஷ்டமான காரியம் இல்லை. தேர்ந்த நடிப்பை தந்திருக்கிறார் மாஸ்டர். மனிஷா யாதவ் நடிப்பு மிரள வைக்கிறது. கதாபாத்திரத்துக்கு ஏற்ற அளவான நடிப்பு. நியாயப்படி மணிஷா யாதவ், ஸ்ரீ, கதிர் போன்ற இளம் நடிகர்கள் கொண்டாடப்பட வேண்டியவர்கள். அவர்களின் கதை தேர்வு அப்படி உள்ளது. படத்தின் பிண்ணனி இசை பக்கா.

படத்தில் ஒரு சில காட்சிகள் எளிதில் யூகிக்க கூடியதாக இருந்தாலும் வலுவான திரைக்கதை கரை சேர்க்கிறது. ( டமால் டுமீல் ரசிகர்களுக்கு இந்தப் படம் சுத்தமாக பிடிக்காது. சிறுகதை, நாவல், யதார்த்த சினிமா ரசிகர்களுக்கு இந்தப் படம் விருந்து ). குப்பை அள்ளுபவர்களின் வாழ்வியலை இவ்வளவு யதார்த்தமாக யாரும் பதிவு செய்யவில்லை. பைசா, அம்மணி போன்ற படங்களில் வந்து இருந்தாலும் இந்த அளவுக்கு வலிமையாக இல்லை. கிளைமேக்ஸ் டுவிஸ்ட் யாரும் எதிர்பாராதது. அனைவரும் கண்டிப்பாக பார்த்து ஆதரிக்க வேண்டிய நல்ல படம்.

Related Articles

கேட்கலனா கொல்வோம் – சாதிவெறியன்களு... சமீபத்தில் பரியேறும் பெருமாள் வெளியாகி சமூகத்தில் இந்த சாதி எப்படி குரூரமாகச் செயல்படுகிறது என்ற விவாதத்தை உண்டாக்கியது. ஒசூர் ராகவேந்திரா தியேட்டரில்...
இயக்குனர் வெற்றிமாறன் பற்றிய 25 தகவல்கள்... இயக்குனர் வெற்றிமாறனின் அப்பா ஒரு வெட்னரி சயின்டிஸ்ட். அம்மா நாவலாசிரியர். படித்தது ஆங்கில இலக்கியம். லயோலா கல்லூரியில் படித்தார். தமிழ் இலக்கி...
வசந்தத்தை வண்ணங்களால் வரவேற்கும் ஹோலி பண... நெருக்கடியான வாழ்வில் ஒரு இளைப்பாறுதலை, நிழலை நமக்குப் பண்டிகைகளே தருகின்றன. சிறு வயதில் நமது ஊர்களில் கொண்டாடிய பண்டிகைகள் இன்னமும் நம் மனதில் பசுமைய...
உலகிலேயே அதிக “செல்ஃபி பைத்தியங்கள... ரயில் நிலையங்களில் செல்ஃபி எடுத்தால் ரூ. 2000 அபராதம் என செல்பி பைத்தியங்களுக்கு செக் வைத்து உள்ளது.  அந்த அளவுக்கு செல்பி மோகம் பிடித்தவர்களாக மாறிவி...

Be the first to comment on "இந்த ஆண்டின் சிறந்த படங்களில் ஒன்று ” ஒரு குப்பைக் கதை “"

Leave a comment

Your email address will not be published.


*