எவ்வளவு சம்பாதித்தாலும் உங்கள் கையில் பணம் நிற்பதில்லையா?

பணக்காரர்கள் ஏழை வேடமிட்டு மேலும் மேலும் பணக்காரன் ஆகிறான். ஆனால் உண்மையான ஏழைகளும், நடுத்தர வர்க்கத்தினரும் உருண்டு பிரண்டு எவ்வளவு சம்பாதித்தாலும் கடன் தொல்லையில் சிக்கித் தவிக்கின்றனர். இதற்கு காரணம் என்ன தெரியுமா?

ராபர்ட் கியோஸாசியின் ” பணக்காரத் தந்தை, ஏழைத் தந்தை ” ( தமிழில் நாகலட்சுமி சண்முகம் ) என்ற புத்தகத்தைப் படித்தவர்களுக்கு இதற்கான பதில் தெரியும். அப்படி என்ன இருக்கிறது என்று எண்ணம் எழும். ரொம்ப ரொம்ப சிம்பிளான விசியம் தான். ” பொருளாதாரக் கற்றல் குறைபாடு ” என்பது தான் அதன் விடை. ( சமீபத்தில் வெளி வந்த வேலைக்காரன் படத்தையும் அதில் வரும் முதலாளித்துவம் சம்பந்தப்பட்ட காட்சிகளையும் மற்றும் சுஜாதாவின் பணக்காரன் இன்னும் பணக்காரன் ஆகிறான், ஏழை இன்னும் ஏழை ஆகிறான் என்ற வசனத்தையும்   அடிக்கடி நினைத்துக் கொள்ளுங்கள்)

பணத்தின் மீதான காதல் தான் தீயவை அது தான் அனைத்திற்கும் காரணம் என்று புலம்புவர் சிலர். பணமின்மை தான் தீயவை அனைத்திற்கும் மூலகாரணம் என்று புலம்புவர் சிலர். இதற்கு எல்லாம் காரணம் பொருளாதார கல்வி குறைபாடு தான். ஏழைகளும் நடுத்தர வர்க்கத்தினரும் பணத்திற்காக வேலை செய்கின்றனர். ஆனால் பணக்காரர்களோ பணத்தை வேலை செய்ய விடுகிறார்கள். அதனால் தான் அவர்கள் நோகாமல் பணம் குவிக்கின்றனர். இந்த திறன் இல்லாததால் தான் பணம் எவ்வாறு வேலை செய்கிறது என்பதை ஒரு போதும் கற்றுக் கொள்ளாததால் பணத்திற்காக வேலை பார்ப்பதில் தங்கள் வாழ்நாள் முழுவதையும் செலவிடுகின்றனர் ஏழைகளும் நடுத்தர வர்க்கத்தினரும்.

இந்தியாவில் கல்வி அறிவு பெற்றவர்களின் எண்ணிக்கை அதிகம். அப்படி என்றால் இந்தியா பணக்கார நாடு ஆகி இருக்க வேண்டும் தானே? இல்லையே காரணம் கல்வி கற்பிக்கும் முறை. பணத்தைப் பற்றியும் அது எவ்வாறு எல்லாம் வேலை செய்கிறது என்பதைப் பற்றியும் யாரும் அறிந்து கொள்ள முற்படுவதில்லை. ( இந்த இடத்தில் சிவாஜி படத்தில் வரும் ஒரு ரூபாய் நாணயம் காட்சியை பொருத்திக் கொள்ளுங்கள் ). “பெரும்பாலான மக்களிடம் இந்த விருப்பம் இருப்பதில்லை. அவர்கள் கல்லூரிக்குச் செல்கின்றனர். ஒரு தொழிலைக் கற்றுக் கொள்கின்றனர். வேலையில் குதூகலமாக இருக்கின்றனர். ஏராளமான பணத்தைச் சம்பாதிக்கின்றனர். ஒரு நாள் அவர்கள் கண் விழிக்கும் போது பெரும் பணப் பிரச்சினைகள் அவர்கள் முன் தலை விரித்து ஆடுகின்றன. அப்போது அவர்களால் வேலை செய்வதை நிறுத்த முடியாது. பணத்தை உனக்காக வேலை செய்ய வைப்பது எப்படி என்பதைக் கற்றுக் கொள்வதற்குப் பதிலாக வெறுமனே பணத்திற்காக வேலை செய்வதைப் பற்றி மட்டுமே தெரிந்து வைத்திருப்பதற்குக் கொடுக்கப்பட வேண்டிய விலை அது. ” . மக்களின் வாழ்க்கை எப்போதும் இரண்டு உணர்ச்சிகளால் கட்டுப்படுத்தப் படுகிறது. பயமும் பேராசையும் தான் அவை. முதலில் அதை விட்டு ஒழியுங்கள்.

Related Articles

தமிழ்நாடு எனும் சுடுகாடு – மூடப்பட... தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் எதாவது ஒரு தொழிற்சாலையை எதிர்த்து போராட்டம் நடந்து கொண்டே இருக்கிறது. ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ரத்த ஆறு ஓடுகி...
இன்ஜினியரிங் படிப்பிற்கும் பொது நுழைவுத்... மே, ஜூன், ஜூலை இந்த மூன்று மாதங்களில் ரிசல்ட், தற்கொலை, நீட், கவுன்சிலிங், ஆன்லைன் கவுன்சிலிங் சரிவரவில்லை போன்ற வார்த்தைகள் தான் அடிபட்டுக் கொண்டிருக...
மும்பை இந்தியர்கள் (MI) 2018 ஐபிஎல் அணி...  வரிசை எண் போட்டி எண் தேதி மும்பை இந்தியர்கள் போட்டிகள் நேரம் இடம்1 1 7-ஏப்ரல் மும்பை vs சென்னை 8:00 PM மும்பை2 7...
மார்ச் 8 – 5 years of நிமிர்ந்து ந... * "சிலையும் நீயே சிற்பியும் நீயே, உன்னை நீ சரிசெய்துகொள்... உலகம் தானாக சரியாகி விடும்... " * " ஒழுக்கம், உண்மை, நேர்மை, பெரியவங்கள மதிக்...

Be the first to comment on "எவ்வளவு சம்பாதித்தாலும் உங்கள் கையில் பணம் நிற்பதில்லையா?"

Leave a comment

Your email address will not be published.


*