டெல்லியில் ஒரு நாளைக்கு ஐந்து பெண்கள் பாலியல் வன்புணர்வு செய்யப்படுகிறார்கள்

டெல்லி காவல்துறையின் தரவுகளின் படி, 2018 ஆம் ஆண்டின் முதல் 3.5 மாதங்களில் ஒரு நாளைக்கு ஐந்துக்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்புணர்வு செய்யப்படுகிறார்கள். கடந்த ஆண்டு நிகழ்ந்த பாலியல் வன்புணர்வு குற்றங்களில் 96.63 சதவீதம் குற்றவாளிகள் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அறிமுகமானவர்களாகவே இருக்கிறார்கள்.

2017 ஆம் ஆண்டில் 563 வன்புணர்வு குற்றங்கள் பதிவாகி இருந்த நிலையில், இந்த ஆண்டு ஏப்ரல் 15 ஆம் தேதி வரை மட்டும் 578 வன்புணர்வு குற்றங்கள் பதிவாகி இருக்கின்றன.

 

பெண்கள் மீதான தாக்குதல்களும் அதிகரிப்பு

பாலியல் வன்புணர்வு குற்றங்களை போலவே, பெண்கள் மீதான தாக்குதல்களும் இந்த ஆண்டு அதிகரித்த வண்ணம் உள்ளன. 2017 ஆம் ஆண்டில் ஏப்ரல் 15 வரை  944 பெண்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள்  பதிவாகி இருந்த நிலையில், இந்த ஆண்டு ஏப்ரல் 15 ஆம் தேதி வரை மட்டும் 883 தாக்குதல் வழக்குகள்  பதிவாகி இருக்கின்றன.

2016 ஆம் ஆண்டு 2064 பாலியல் வன்புணர்வு வழக்குகள் பதிவாகி இருந்தன. அதுவே 2017 ஆம் ஆண்டு 2049 ஆகப் பதிவாகி இருக்கிறது.

கடந்த ஆண்டு 3,273 பாலியல் வன்முறை வழக்குகளும் , 2016  ஆம்  ஆண்டு 4,035 பாலியல் வன்முறை வழக்குகளும் பதிவாகியுள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

Related Articles

சில நேரங்களில் சில மனிதர்கள் – பார... (புத்தகமாக காலச்சுவடு பதிப்பகத்தில் கிடைக்கிறது)சாகித்திய அகாடமி விருது பெற்ற ஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள் நாவல் பீம்சிங், எம்.எஸ்.வி...
மூன்று மில்லியன் பேஸ்புக் பயனாளிகளின் தக... கேம்பிரிட்ஜ் அனலிட்டிக்கா(Cambridge Analytica) என்ற நிறுவனம் 87 மில்லியன் பேஸ்புக் பயனாளிகளின் தகவல்களைத் திருடி தங்களது வாடிக்கையாளர்களோடு பகிர்ந்துக...
விஸ்வரூபம் 2 படத்துக்கு வந்த புதிய பிரச்... கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வந்த விஸ்வரூபம் முதல் பாகம் பலத்த எதிர்ப்புகளை சந்தித்தது. அதனால் கடும் மன உளைச்சலுக்கான கமல் இந்தியாவை விட்டு வெளியேறுவ...
இளையராஜாவுக்கு பத்மவிபூசண் விருது! வைரமு... கடந்த ஜனவரி 25ம் தேதி இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பத்மவிபூசண் விருது வழங்க இருப்பதாக அறிவிப்பு வெளிவந்தது. அதனையடுத்து இளையராஜாவுக்கு பலர் வாழ்த்து ...

Be the first to comment on "டெல்லியில் ஒரு நாளைக்கு ஐந்து பெண்கள் பாலியல் வன்புணர்வு செய்யப்படுகிறார்கள்"

Leave a comment

Your email address will not be published.


*