பொதுத்தேர்வில் மாநில அளவில் மதிப்பெண் பெற்ற போது ” நான் டாக்டராகி இலவச மருத்துவ செய்வேனு சொன்னவங்களாம் எங்க? “

கோடை காலம் முடிந்ததும் தமிழகத்திற்கு வருடம் வருடம் வரக்கூடிய ஒரு பிரச்சினை எதாவதொரு நோய்த் தொற்று. கடந்த வருடம் டெங்கு வந்து ஒரு காட்டு காட்டியது. அரசு மருத்துவமனைகளில் போதிய வசதி இன்றி படாதபாடு பட்டனர். அத்தனைக்கும் காரணம் நமக்கு தெரிந்தது தான். பணம் அமுக்கி கொள்தல். அரசு மருத்துவமனைகளில் போதிய நவீன வசதிகள் ஏற்பாடு செய்ய முயன்றாலும் அது முழுவதுமாக நடைபெறுவது இல்லை. பாதிக்கும் மேற்பட்ட பணம் இடையில் களவு போகிறது. கடந்த வருடம் போதிய வசதி இல்லாததால் மரத்துக்கு அடியில் வெட்ட வெளியில் படுத்துக் கிடந்தனர் என்று செய்திகள் வெளி வந்தது. இந்த வருடமும் எதாவது நோய்கள் தாக்க நேர்ப்பட்டால் அதே நிலைமை தான் தொடரும்.

 

மக்கள் மனநிலை

வசதிகள் இப்படி இருக்க, மக்களின் மனநிலை வேறு விதமாக இருக்கிறது. அந்த அளவுக்கு திசை திருப்பிவிட்டார்கள். உணவே மருந்து என்றிருந்த சமுதாயம் இன்று நோய்களால் அல்லல்பட்டு வருவது எவ்வளவு பெரிய அவலம்! எவ்வளவு பெரிய அரசியல்! அரசு மருத்துவமனைகளில் கூட்டம் நிரம்பி வழிவது போல் தோன்றும். ஆனால் அந்த கூட்டம் எல்லாம் சாமான்ய மக்களின் கூட்டம். போதிய வசதி இல்லாத, படிப்பறிவு இல்லாத, எதிர்த்து கேள்வி கேட்க திராணி இல்லாத பாமர கூட்டம். எந்த செல்வந்தனாவது அரசு மருத்துவமனைகளில் வைத்தியம் பார்க்கிறானா? எந்த அரசு அலுவலராவது, எந்த அரசு அதிகாரியவது? எந்த அரசியல்வாதியாவது? நம்ம ஜெயலலிதா. கருணாநிதி உள்பட எல்லோரும் தனியார் தான்.

அந்த தனியார் மருத்துவமனைகளில் அரசு மருத்துவர்களின் பங்கு உண்மையில் அதிகம். மறைமுக பார்னட்ர்சிப் என்றும் சொல்லலாம். சம்பளத்தை அரசிடம் வாங்கிக் கொண்டு வேலையை தனியாருக்கு தன்னுடைய சுயநலத்துக்கு செய்கிறார்கள். ” ஏழைகளின் கஷ்டம் = மருத்துவர்களுக்கு காசு ” இது தான் மருத்துவமனை அரசியலின் தாரக மந்திரம்.

 

மாறாத நிலை?

சினிமா காட்சிகளை வைத்து பார்ப்போம். இந்தியன் படம் 1996ம் ஆண்டு வெளி வந்தது. சுதந்திர போராட்ட தியாகி சேனாதிபதியின் மகளுக்கு தீக்காயம் ஏற்பட அரசு மருத்துவமனைகளில் வைத்தியம் பார்க்க முடியாமல் தவித்த காட்சியை யாராலும் எளிதாக மறக்க முடியாது. இந்தியன் படம் வெளிவந்து இருபது வருடங்களுக்கு மேலாகிவிட்டது. ஆனால் நிலைமை அதே தான். அடுத்தது ரமணா. ” எவ்வளவு செலவு ஆனாலும் பரவால ” என்று வசனம் காதில் விழுந்துவிட்டால் அவ்வளவு தான் செத்த பொணத்தை வைத்து அரசியல் செய்கிறார்கள். இன்றும் அதே நிலை தான். உதா: உத்திரபிரதேச மாநில மருத்துவ சீர்கேடுகள். தரமணி படத்தில் ” போலீசார் நம்மிடம் பணம் புடுங்குவார்… டாக்டர்களோ போலீசார், நான், நாம் என்று எல்லோரிடமும் பணம் புடுங்குவார் ” என்று வசனம் உள்ளது. எவ்வளவு பெரிய உண்மை இது. மெர்சல் படம் இன்னும் கொஞ்சம் தெளிவாக வலுவாக சொன்னது. அருவியில் மருத்துவமனை அரசியல் பற்றி ” நோயாளி சாகணுமே தவிர நோய் சாகக் கூடாது ” என்று ரொம்ப நல்லாவே சொல்லி இருந்தார்கள். இந்தியாவில் திறமை மிகுந்த மருத்துவர்கள் நிறைய இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் எல்லோரும் ” கஷ்டத்தை காசாக்கு ” என்ற மனப்பான்மையுடனே இருக்கிறார்கள். கடந்த சில வருடங்களுக்கு முன்பு பொதுத் தேர்வு ரிசல்ட் நாட்களில், நான் டாக்டராகி இலவச மருத்துவ சேவை செய்வேனு சொன்னவங்களாம் இன்று என்ன செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களை குற்றம் சொல்லி ஒரு பயனும் இல்லை. காரணம் அவர்களுக்கு பாடம் எடுப்பவர்கள் ” கஷ்டத்தை காசாக்கு ” என்பதை தான் முதலில் சொல்லி கொடுக்கிறார்கள்.

மெர்சல் படத்தில் உயர்ந்த மனிதன் என்ற நிகழ்ச்சியில் ” மருத்துவ துறைல நம்ப நாடு அபார வளர்ச்சி அடைஞ்சிடுச்சுனு புள்ளி விவரங்கள் சொல்லுது ? ” என்ற கேள்வி எழுப்பப் படும். அதற்கு, ” தலை சிறந்த டாக்டர்களை உருவாக்கி 34 வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கிற லிஸ்ட்ல இந்தியாவுக்கு முதலிடம். ஆனா அதே சமயம் தன்னுடைய சொந்த மக்களுக்காக தரமான மருத்துவத்த தரதுல இந்தியாவுக்கு 114வது இடம். பிராபர் மெடிக்கல் குவாலிபிகேசன் இல்லாத டாக்டர்கள் மட்டுமே இந்தியாவுல 57.3 %. ஒரு வருசுத்துல இந்தியாவுல நடக்குற மெடிக்கல் எர்ரர்ஸ் மட்டும் 52 லட்சம். 120 கோடி மக்கள் வாழுற இந்த நாட்டுல வெறும் 120 பேருக்கு மட்டும் நல்ல மருத்துவம் கிடைக்கறதுக்கு பேரு வளர்ச்சி கிடையாது ” என்ற வசனம் இடம் பெற்றிருக்கும். புள்ளி விவரங்கள் அவ்வளவாக சரி இல்லை என்றாலும் கிட்டத்தட்ட உண்மை. இதற்கு எல்லாம் தீர்வு பொதுமக்கள் சிந்தித்து செயல்படுவது. ஆனால் எங்கே சிந்தித்து செயல்படுவது? சிந்திக்க விடாமல் இருக்க ஊருக்கு ஊர் மதுக்கடையை திறந்து வைத்திருக்கிறார்களே! நீட் எழுத இருந்த, அப்பா குடிக்கிறார் என்பதற்காக தற்கொலை செய்து கொண்ட தினேஷுக்கு, தினேஷ் போன்ற இன்னும் பல மாணவர்களின் இளைஞர்களின் வாழ்க்கை எல்லாம் கேள்விக் குறி! அரசியல் ! எல்லாம் அரசியல்!

Related Articles

பாக்கியம் சங்கர் எழுதிய நான்காம் சுவர் &... தேசப்பன், கிளாரிந்தா, பாம்பு நாகராஜ், நூர், திருப்பால், சகாயம், நந்தினி, அலமேலு, பாப்பம்மா, காந்தி, பாஸ்கர் டாக்டர், குணா, மலர்விழி, சர்மா டாக்டர், ரோ...
படைப்பாளிகள் கலைஞர்கள் இவர்களெல்லாம் தங்... தமிழ் சினிமாவில் மட்டுமல்ல இந்திய சினிமா அளவில் ஏன் உலக சினிமா அளவில் கூட மிகக் குறுகிய காலத்தில் மிகப் பெரிய அளவில் பிரபலமான அல்லது மக்களுக்கு மிகவும...
“ஜல்லிக்கட்டு போராட்டம்” மாத... சமூக வலைதளங்களினால் மிகப்பெரிய வரலாற்று போராட்டமாக மாறிய ஜல்லிக்கட்டு போராட்டம், மெரினா கடற்கரையில் மிகப்பெரிய மாற்றத்தை பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறத...
நியூட்ரினோ : புதிரா? அறிவியலா?... பேய் படங்கள் நிறையப் பார்த்தவர்களுக்கு இது எளிதில் புரியும். மர கதவோ அல்லது வீட்டுச் சுவர்களோ எதுவாக இருந்தாலும் அந்தப் பேய் தடையே இன்றி, மிக எளிதில் ...

Be the first to comment on "பொதுத்தேர்வில் மாநில அளவில் மதிப்பெண் பெற்ற போது ” நான் டாக்டராகி இலவச மருத்துவ செய்வேனு சொன்னவங்களாம் எங்க? “"

Leave a comment

Your email address will not be published.


*