மேற்கு ஜனக்புரி மெட்ரோ ரயில் நிலையத்தில் ஐந்து மாடிக் கட்டிட அளவுக்கு அமைக்கப்பட்டிருக்கும் நகரும் படிக்கட்டுகள் (Escalator)

நகரும் படிக்கட்டுகளில் நாட்டின் மிக உயரமானதாக தற்போது வரை இருந்து வருவது மும்பை விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்தில் அமைந்திருக்கிறது. அதன் உயரம் 11 . 6 மீட்டர்கள் ஆகும். இந்த உயரத்தை விடக் கூடுதலாக அமைய இருக்கிறது மேற்கு ஜனக்புரி மெட்ரோ நிலையத்தில் அமைய இருக்கும் நகரும் படிக்கட்டுகள். அதன் உயரம் 15 . 6 மீட்டர்களாக இருக்கும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் சார்பாகப் பேசிய அதன் செய்தி தொடர்பாளர் இது குறித்து பேசும் போது ‘ஜனக்புரி மெட்ரோ நிலையத்தில் அமைந்திருப்பவை நாட்டின் மிக உயரமான நகரும் படிக்கட்டுகள். இதன் மொத்தம் கிடைமட்ட நீளம் 35 . 3 மீட்டார்கள் ஆகும். உயரம் 15 . 6 மீட்டர்கள் ஆகும். இதன் மொத்த எடை 26 டன் ஆகும். இந்த நகரும் படிக்கட்டுகளின் உயரத்தை ஐந்து மாடிக் கட்டிடத்தின் உயரத்தோடு ஒப்பிடலாம்.’ என்று தெரிவித்தார்.

‘இந்த நகரும் படிக்கட்டுகளை பொருத்துவது மிகக் கடினமான காரியமாக இருந்தது. 250 டன் கிரேன் ஒன்றை நிறுவி அதன் மூலம் இந்தப் படிக்கட்டுகளை நிறுவினோம்’ என்று மேலும் அவர் தெரிவித்தார்.

ப்ளூ லைனில் (துவாரகா துறை 21-நொய்டா சிட்டி சென்டர் / வைஷாலி)  மட்டும் இயங்கிக் கொண்டிருந்த ஜனக்புரி மேற்கு மெட்ரோ நிலையத்தை தற்போது பல வழித் தடங்களுக்கு இயங்கும் வகையில்  மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இது மின்தெட்டா கோட்டையோடு (ஜனக்புரி மேற்கு-பொட்டானிக்கல் கார்டன்) விரைவில் இணைக்கப்படும். இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் முனிகா, ஹவுஸ் காஸ், நேரு பிளேஸ் மற்றும் பொட்டானிக்கல் கார்டன் (நொய்டா) போன்ற முக்கிய இடங்களோடு இந்த மெட்ரோ நிலையத்தின் மூலம் மேற்கு தில்லி இணைந்துள்ளது.

15000 பயணிகள் தற்போது இந்த மேற்கு ஜனக்புரி ரயில் நிலையத்தைப் பயன்படுத்தி வருகிறார்கள், பயணிகளின் எண்ணிக்கை 53700 வரை அதிகரிக்கும் என்று டெல்லி   மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் வல்லுநர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

 

 

உலகின் மிக உயரமான மெட்ரோ நகரும் படிக்கட்டுகள்

செயிண்ட் பீட்டர்ஸ்பேர்கில் இருக்கும் மூன்று மெட்ரோ ரயில் நிலையங்களில் அமைந்துள்ள நகரும் படிக்கட்டுகளின் உயரம் 64 மீட்டர்கள்.

மாஸ்கோவில் இருக்கும் பார்க் பொபெடி மெட்ரோ நிலையத்தில் அமைந்துள்ள நகரும் படிக்கட்டுகளின் உயரம் 27 மீட்டர்கள்.

பாங்காக் மெட்ரோ ரயில் நிலையத்தின் நகரும் படிக்கட்டுகளின் உயரம் 21 . 5 மீட்டர்கள்.

Related Articles

டெல்லி டேர்டெவில்ஸ் (DD) 2018 ஐபிஎல் அணி...  வரிசை எண் போட்டி எண் தேதி டெல்லி டேர்டெவில்ஸ் போட்டிகள் நேரம் இடம்1 2 8-ஏப்ரல் டெல்லி vs பஞ்சாப் 4:00 PM டெல்லி...
டெல்லி ஐஐடியில் காற்று மாசுக்கு எதிரான த... இந்தியாவில் அதிக காற்று மாசு நடைபெறும் இடம் நாட்டின் தலைநகரான டெல்லி என்பது அனைவரும் அறிந்ததே. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தீபாவளி கொண்டாட்டத்தின் போது ...
“தப்ப நான் செஞ்சுட்டு தண்டனைய அவனு... இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் இயக்குனர் புனித். இவர் இயக்கி உள்ள " காதல் ஒன்று கண்டேன் " என்ற குறும்படம் யூடூப்பில் வெளியான ஒரே நா...
ஊரடங்கு நாட்களில் பொழுதுபோக பார்க்க வேண்... The platform Trapped Monos The shawshank redemption  Gantumoote (kannada) The occupant (spain movie) Ayyapanum koshiyum (...

Be the first to comment on "மேற்கு ஜனக்புரி மெட்ரோ ரயில் நிலையத்தில் ஐந்து மாடிக் கட்டிட அளவுக்கு அமைக்கப்பட்டிருக்கும் நகரும் படிக்கட்டுகள் (Escalator)"

Leave a comment

Your email address will not be published.


*