மேற்கு வங்கம், தெலங்கானா, ஆந்திர பிரதேச மாநிலங்களில் மின்னல் தாக்கி 18 பேர் பலி

மேற்கு வங்கத்தில் நான்கு மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் புயல் மற்றும் மின்னல் தாக்குதலில் குறைந்தது ஒன்பது பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர், தெலங்கானா மற்றும் ஆந்திர பிரதேசத்தில் ஒன்பது பேர் கொல்லப்பட்டனர் என்று மாநில அனர்த்த முகாமைத்துவ திணைக்களம்( the state disaster management department) தெரிவித்தது.

ஞாயிற்றுக்கிழமை கொல்லப்பட்ட ஒன்பது பேரில், நான்கு பேர் குழந்தைகள், அவர்கள்  ஹூரா மாவட்டத்தில் உல்பூரியாவில் மாம்பழங்களை சேகரிக்கச் சென்றபோது மின்னல் தாக்கி உயிர் இழந்தனர். நதியா மாவட்டத்தில் ஹான்ஸ்காலி, மேற்கு மிட்னாபூர் மாவட்டம் கத்தலில் இரண்டு பேரும் மற்றும் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் ஜலாங்கியில் ஒருவரும்  கொல்லப்பட்டனர்.

புயல் மற்றும் மின்னல் தாக்குதலில் கொல்லப்பட்ட அனைத்து குடும்புகளுக்கும் இழப்பீடு வழங்கப்படும் என்று மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார். ‘அதுமட்டுமல்லாமல் புயலால் சேதமடைந்த வீடுகளை மாநில அரசு மீண்டும் கட்டித்தரும் ‘என்று அவர் கூறினார். ஏப்ரல் 30 ஆம் தேதி அதிகமானோர் உயிர் இழந்திருக்கின்றனர். அன்று மட்டும்  13 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் புயலாலும், மின்னலிலும் காயமடைந்தனர். ‘மாநில பேரழிவு மேலாண்மை துறை (the state disaster management department)சார்பாகக் குழு ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது. அனைத்து மாவட்ட நீதிபதிகள் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளனர். இது துரதிர்ஷ்டமானது. இயற்கை பேரழிவுகளை நம்மால் கட்டுப்படுத்த இயலாது.’ என்று மேலும் அவர் தெரிவித்தார்.

 

ஆந்திரா மற்றும் தெலங்கானாவிலும் உயிர்ச் சேதம்

தெலங்கானா மற்றும் ஆந்திரப்பிரதேசத்தில்  மூன்று விவசாயிகள் உட்பட ஒன்பது பேர் மின்னல் தாக்கி கொல்லப்பட்டனர். தெலங்கானா மன்சேரி மாவட்டத்தில் மூன்று விவசாயிகள் மின்னல் தாக்கி இறந்தனர். ஆந்திராவில் உள்ள ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் ஆறு பேர் இறந்தனர். நெல் வயலை மூட முயற்சி செய்தபோது விவசாயிகள் மின்னல் தாக்கி உயிர் இழந்தனர். அவர்கள் வீடு திரும்பாததை கண்டு அஞ்சிய குடும்பத்தினர் வயலுக்குச் சென்று இறந்த விவசாயிகளின் உடலை மீட்டனர்.

Related Articles

நவுத்துப்போன பட்டாஸ் – பட்டாஸ் விம... தயாரிப்பு: சத்ய ஜோதி பிலிம்ஸ்இயக்கம்: ஆர் எஸ் துரை செந்தில் குமார்இசை: விவேக் மெர்வின்நடிகர் நடிகைகள்: தனுஷ், சினேகா, நாசர், சதீஷ், முனீஷ்...
தத்தகிட தித்தோம் – உறியடி 2 விமர்ச... கெமிக்கல் இன்ஜினியரிங் படித்த மூன்று வேலையில்லாத இளைஞர்கள் ஒரு பக்சான் என்ற கெமிக்கல் கம்பெனியில் வேலைக்கு சேர்கிறார்கள். அந்தக் கெமிக்கல் கம்பெனியில்...
”முதலமைச்சர் பழனிசாமிக்குள் புகுந்... கடமை வேறு, பெருமை வேறு, தியாகம் வேறு என்று நாம் எப்போது புரிந்து கொள்ளப் போகிறோம் என்று தெரியவில்லை. குறிப்பாக அரசியல்வாதிகள் இதை எப்போது புரிந்து கொள...
கோமாவில் இருந்த பெண்ணை இயல்புநிலைக்கு மா... நடிகர் வடிவேலு எத்தனை படங்கள் நடித்தவர் எவ்வளவு மனித உள்ளங்களை சம்பாதித்திருக்கிறார் என்பதெல்லாம் சொல்லித்தான் தெரிய வேண்டுமென்பதில்லை.பெரும்பாலான...

Be the first to comment on "மேற்கு வங்கம், தெலங்கானா, ஆந்திர பிரதேச மாநிலங்களில் மின்னல் தாக்கி 18 பேர் பலி"

Leave a comment

Your email address will not be published.


*