டேட்டிங் வசதியை அறிமுகம் செய்கிறது பேஸ்புக்

செவ்வாய்க்கிழமை நடந்த பேஸ்புக் F8 டெவலப்பர் மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய பேஸ்புக்கின் சிஇஓ மார்க் ஸுக்கர்பேர்க், டேட்டிங் செய்பவர்களுக்கான பிரத்யேக பக்கங்களைப் பேஸ்புக்கில் அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்தார். பொழுதுபோக்கிற்காக அல்லாமல், உண்மையான நீண்ட கால உறவை விரும்புபவர்களுக்காக மட்டும் டேட்டிங் பக்கங்கள் உருவாக்கப்பட இருக்கிறது என்று மேலும் அவர் தெரிவித்தார்.

 

டேட்டிங்கிற்கான பிரத்யேக பக்கம்

ஏற்கனவே பேஸ்புக்கில் நண்பர்களாக இருப்பவர்கள் இந்த டேட்டிங் வசதியை பயன்படுத்த இயலாது. பேஸ்புக் பயனாளிகளுக்குப் பிரத்யேகமான டேட்டிங் பக்கம் உருவாக்கி தரப்படும், அந்தப் பக்கத்தை நட்பு பட்டியலில் இருக்கும் நண்பர்கள் காண இயலாது. இந்த வசதி பேஸ்புக் பயனாளிகளுக்கு இலவசமாக வழங்கப்பட இருக்கிறது.

 

F8 டெவலப்பர் மாநாட்டின் அறிவிப்புகள்

கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனத்தோடு பேஸ்புக் நிறுவனம் தனது பயனாளிகளின் தகவல்களைக் கசிய விட்டது உலகெங்கிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்துத் தனது தலைமை உரையில் குறிப்பிட்ட மார்க் ஸுக்கர்பேர்க் ‘பயனாளிகள் தரும் தகவல்களைப் பாதுகாக்க சிறந்த கட்டமைப்புகளை உருவாக்கி வருகிறோம்’ என்றார்.

பயனாளிகளின் பொதுவான விருப்பங்கள் மற்றும் கலந்துகொண்ட நிகழ்வுகளின் அடிப்படையில் டேட்டிங் வசதியை பயன்படுத்த அழைக்கப்படுவர்.

பேஸ்புக் தனது பயனாளிகளுக்குத் திருமணம் செய்துவைக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.

Related Articles

மும்பை இந்தியர்கள் (MI) 2018 ஐபிஎல் அணி...  வரிசை எண் போட்டி எண் தேதி மும்பை இந்தியர்கள் போட்டிகள் நேரம் இடம்1 1 7-ஏப்ரல் மும்பை vs சென்னை 8:00 PM மும்பை2 7...
அறம் திரைப்பட வசனங்கள் ஒரு பார்வை!... நயன்தாராவின் சினிமா வாழ்க்கையில் மிக முக்கியமான திரைப்படம் "அறம்". அந்தப் படம் ரிலீசான சமயத்தில் அந்தப் படத்தின் வசனங்கள் மிகப் பெரிய அளவில் கவனம் பெற...
படம் ரிலீசாகும் வரை ரஜினி பேட்டி கொடுக்க... காலா படம் நல்ல விமர்சனங்களை சந்தித்திருந்தாலும் வசூலில் சறுக்கியது. காரணம் கபாலி தந்த எபெக்ட் அப்படி. அந்தப் படத்திற்கு தயாரிப்பாளர் கலைப்புலி தாணு எக...
தனுஷ் படங்களும் ஆனந்த விகடன் மதிப்பெண்கள... புதுப் பேட்டை - 45 திருவிளையாடல் ஆரம்பம் - 41 பொல்லாதவன் - 43 யாரடி நீ மோகினி - 42 உத்தமபுத்திரன் - 41 ஆடுகளம் - 44 வேங்கை - 37 ...

Be the first to comment on "டேட்டிங் வசதியை அறிமுகம் செய்கிறது பேஸ்புக்"

Leave a comment

Your email address will not be published.


*