ஜம்முவில் பாகிஸ்தான் படை வீரர்களின் குண்டுவீச்சு தாக்குதலில் எல்லை பாதுகாப்பு வீரர் மற்றும் பொதுமக்கள் ஐந்து பேர் உயிர் இழந்தனர். எல்லை பாதுகாப்பு கோட்டுக்கு அருகே இந்தச் சம்பவம் நடைபெற்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜம்மு காஷ்மீருக்கு பிரதமர் நாளை (சனிக்கிழமை) செல்லவிருப்பதைத் தொடர்ந்து, கடந்த மூன்று நாட்களாகவே இந்திய தரப்பின் மீது பாதுகாப்பு படையினர் போர் நிறுத்த ஒப்பந்தத்தையும் மீறி குண்டுவீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஆர்.எஸ்.புரா, ஜம்முவின் பிஷ்னா மற்றும் ஆர்னியா பகுதிகளில் நள்ளிரவு ஒரு மணியில் இருந்து பாகிஸ்தான் படையினர் தாக்குதல் நடத்தி வருவதாக மூத்த எல்லை பாதுகாப்பு படைவீரர் ஒருவர் தெரிவித்தார். பாகிஸ்தான் தாக்குதல்களுக்கு இந்திய தரப்பில் தக்கப் பதிலடி கொடுத்து வருவதாகத் தெரிவித்தார்.
கொல்லப்பட்ட எல்லை பாதுகாப்பு வீரர் 192 ஆவது பட்டாலியனை சேர்ந்த கான்ஸ்டபிள் சீதாராம் உபத்யாயா ஆவார். கடுமையாக காமயுற்றிருந்த அவரை மீட்டு நள்ளிரவு 01 : 30 மணி அளவில் ஜம்முவில் இயங்கும் ஜிஎம்சி மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர்.இருப்பினும் கொண்டு செல்லும் வழியிலேயே அவர் இறந்தார். உபத்யாயா ஜார்க்கண்டில் உள்ள கிரிடியில் இருந்து 2011 ஆம் ஆண்டில் படையில் சேர்ந்தார். அவருக்கு மூன்று ஆண் குழந்தைகளும், ஒரு பெண் குழந்தையும் இருப்பதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பொதுமக்கள் தேவை
உதவி துணை ஆய்வாளர் ஒருவரும் இந்தத் தாக்குதலில் காயம்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். பாகிஸ்தானின் இந்தத் தாக்குதலில் கணவன், மனைவி உட்பட பொதுமக்கள் நான்கு பேர் கொல்லப்பட்டனர். 12 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். குண்டுவீச்சு நடைபெற்ற இடங்களில் நிர்வாகத்தின் சார்பாக தங்குமிடம் அமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கதுவா மற்றும் சம்பா மாவட்டங்களில் தங்குமிடம் நடக்கும் பணிகள் தொய்வாக நடைபெற்று வருகின்றன.அம்மாவட்டங்களில் துப்பாக்கி சூடு மற்றும் குண்டுவீச்சு சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பாகிஸ்தான் படைகளின் இந்த அத்துமீறலால் எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது.
Be the first to comment on "பாகிஸ்தான் படையினரின் தாக்குதலில் எல்லை பாதுகாப்பு படை வீரர் உட்பட ஐந்து பேர் உயிரிழப்பு"