கடந்த 2007ம் ஆண்டு மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் ஓர் ஆய்வு மேற்கொள்ளப் பட்டது. அதில் நாட்டில் 53.2 சதவீத குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகியிருப்பது தெரிய வந்தது. அவர்களில் 52.9 சதவீதம் ஆண் குழந்தைகள் என்பதும் குறிப்பிடத் தக்கது. அது மட்டுமின்றி உலகில் நான்கில் ஒரு பெண் குழந்தை, ஏழில் ஒரு ஆண் குழந்தை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிறார்கள் என்று உலக சுகாதார நிறுவனமும் பெண் குழந்தைகளுக்கு இருக்கும் அதே அளவு பாலியல் அச்சுறுத்தல் ஆண் குழந்தைகளுக்கும் இருக்கிறது என்றும் இந்திய அரசின் ஆய்வு அறிவித்து உள்ளது.
இந்நிலையில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகும் ஆண் குழந்தைகளுக்கும் சட்டத்தின் வழியே நீதி கிடைக்கும் வகையில் அதற்கு உரிய சட்டங்களில் திருத்தம் செய்ய உள்ளனர். கடந்த சில வருடங்களாக தொடர்ந்து பாதிப்புக்கு உள்ளாகி வரும் சிறுமிகளுக்கு நீதியும் பாதுகாப்பும் கிடைக்கும் வகையில் சமீபத்தில் மரண தண்டனைகள் விதிக்கப் பட்டது. பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் போக்ஸோ (Protection of Children from Sexual Offences Act – 2012) சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளும் வகையில் இந்த அவசர சட்டம் பிறப்பித்து உள்ளது.
இதனை தொடர்ந்து பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகும் பெண் குழந்தைகளுக்கு உள்ளது போல் ஆண் குழந்தைகளுக்கும் சட்டப் பாதுகாப்பு கொண்டு வர வேண்டும் என்று பல சமூக அமைப்புகள் கோரிக்கை விடுத்து உள்ளது. அதை ஒட்டி மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் இரு பாலருக்கும் பொருந்தும் வகையில் விரைவில் சட்டம் இயற்றப்படும் என்று அறிவித்து உள்ளது.
Be the first to comment on "பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகும் ஆண் குழந்தைகளுக்கும் நீதி கிடைக்க சட்டத்திருத்தம் விரைவில்!"