கடந்த மே 1ம் தேதி அஜீத்துக்கு 48 வது பிறந்தநாள் அவருடைய ரசிகர்களால் கொண்டாட பட்டது. 48 வயதான அவரைப் பற்றிய 48 தகவல்கள்!
- தன்னை தேடி வருபவர்களுக்கு டீ காபி டிபன் வரை தானே செய்து பரிமாறுவார்.
- சினிமாக்காரர்களிடையே ஜி போட்டு பேசும் பழக்கம் இவரால் தான் வந்திருக்கும். யாரை தொடர்பு கொண்டாலும் ஹலோ ஜி என்பார்.
- இவர் படித்தது 10வது வரைக்கும் தான். இவர் பேசும் இங்கிலீஷ் செம ஸ்டைலிசாக இருக்கும்.
- எத்தனை கோடி கொடுத்தாலும் வெளிநாட்டு குளிர்பான விளம்பரங்களில் மாடலிங் செய்வதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறார்.
- பைக் மெக்கானிக், பைக் கார் ரேசர், டெக்ஸ்டைல் பிசினஸ் மாடலிங் எல்லாவற்றையும் விட அவருக்கு கைகொடுத்தது அள்ளிக் கொடுத்தது சினிமா தான்.
- தங்க நகை அணிவதில்லை என்பதில் உறுதியாக இருந்தவர் காதல் மனைவி பிரியமாக அணிவித்த மோதிரத்தை அப்படியே அணிந்திருக்கிறார்.
- அலைபேசியில் பேசும்முன், ” இப்போது பேச உங்களிடம் நேரமிருக்கிறதா… ” என குறுஞ்செய்தி அனுப்பி அனுமதி பெற்றே பேசுவார்.
- அஜீத்தின் ஆசைகளில் ஒன்று ரஜினிக்கு வில்லனாக நடிக்க வேண்டும் என்பது.
- கார் ரேஸ், கிரிக்கெட், ஸ்விம்மிங், ஏரோ பைலட், சமையல், போட்டோகிராபி இவை தவிர தற்போது கப்பல் ஓட்டவும் பழகுகிறார்.
- அஜித்தின் அப்பா சுப்ரமணியம் பாலக்காட்டு ஐயர். அம்மா மோகினி வடநாட்டுக்காரர்.
- வெளியூர் செல்லும் முன் அன்னையின் பாதம் பணிவார். அம்மாவின் பெயரில் அறக்கட்டளை வைத்து நற்பணிகள் செய்து வருகிறார்.
- ஹைதராபாத் பிரியாணி போல அஜித் பிரியாணி சினிமா நட்சத்திங்களிடையே பிரபலம். தம்முடன் நடிப்பவர்களுக்கு தாமே சமைத்துப் போட்டு அசத்துவார்.
- இவரது முதல் படம் ” என் வீடு என் கணவர் “. மாணவராகச் சிறிய வேடத்தில் தோன்றினார்.
- தமிழ், மலையாளம், ஆங்கிலம், இந்தி, ப்ரெஞ்ச் ஐந்து மொழிகளை பேசுவார்.
- பாதுகாப்பு கருதி பாயின்ட் 32 ரக பிஸ்டல் வைத்திருக்கிறார்.
- சமீபத்தில் சைவத்துக்கு மாறிவிட்டார்.
- தன்னிடம் வேலை பார்க்கிறவர்களுக்கு சீருடை, இன்சூரன்ஸ், இலவசமாக பைக் மற்றும் சொந்த வீடு என்று சகல வசதி செய்து கொடுத்திருக்கிறார்.
- தமது பிறந்த நாளை பசுமை தினமாக அனுசரித்து ஒவ்வொருவரும் தங்கள் பகுதியில் மரக்கன்றுகளை நடுங்கள் என்பது ரசிகர்களுக்கு தலயின் தலைப்புச் செய்தி.
- செயின்ஸ்மோக்கராக இருந்தவர் காதல் மனைவியைக் கைப்பிடித்ததும் சிகரெட்டை விவாகரத்து செய்துவிட்டார்.
- தானே கார் பைக் ஓட்டிச்சென்றாலும் சாலை விதிகளை மீறுவதில்லை.
- 1999 மார்ச் 17, காலை 10.30 மணி. ‘அமர்க்களம்’ படிப்பில் ஷாலினியைப் பார்த்த அந்த நாள் பசுமையாக நினைவில் இருக்கிறதாம்.
- எனக்கும் விஜய்க்கும் சரியான தீனி போடுற மாதிரி சப்ஜெக்ட் அமைந்தால் நடிக்க தயார் என்பது அஜித்தின் வாக்குமூலம்.
- ஒருபோதும் அரசியல் பேசுவதில்லை.
- அவரது ஹாபி பலநாட்டு நாணயங்கள், தபால் தலைகள், விதவிதமான கைக்கடிகாரங்கள், மினியேச்சர் ஹெல்மெட்டுக்கள், நவீன கேமராக்கள் போன்றவை.
- அவருடைய தைரியம் தன்னம்பிக்கை, உதவுகிற மனசு எளிமையாக வாழ நினைப்பது
- அன்பு தான் இந்த உலகத்திலயே வலிமையான ஆயுதம்னு இப்ப உணர்றேன் என்பதுதான் அஜித்தின் அனுபவ மொழி.
- வாழு வாழ விடு இதுதான் அஜித்தீன் பாலிசி
- திருப்பதி பாலாஜியை தரிசனம் செய்ய இரண்டு தடவை சென்னையிலிருந்து நடந்து போயிருக்கிறார்.
- அவரது வீட்டில் சின்னதாய் ஒரு நூலகம் உள்ளது.
- வாக்குச் சாவடி, விமான நிலையம், கோயில் எங்கு சென்றாலும் மக்களோடு மக்களாக வரிசையில் செல்வார்.
- தன்னை சந்திக்க வந்தவர்கள் டூவிலரில் வந்தால் ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை அவர் வலியுறுத்துவார்.
- மகளுக்கு என்ன உணாவு பிடிக்கும் எனக்கேட்டு தன் கையால் சமைத்து பரிமாறுவார்.
- சின்சியாரிட்டி, டெடிகேசன், ஸ்பீடு இந்த முன்றும் அவரிடம் எனக்கு பிடித்தவை என்கிறார் திருமதி அஜித்.
- தேடி வரும் ரசிகர்களிடம் முதலில் உங்கள் வேலையை குடும்பத்தை கவனியுங்கள் பிறகு தான் மன்றம் என்பார்.
- மிஸ்டர் அஜீத் என்று தன் மகள் அனொஷ்கா பெயர்சொல்லி செல்லமாக அழைத்தால் மகிழ்ந்து போவார் தல.
- அஜித்தை பேபி என்றழைப்பார் மனைவி ஷாலினி
- யாரும் கற்றுக் கொடுக்காததை வாழ்க்கையில் அனுபவம் நிறைய கற்றுத் தரும் என்பது அவருடைய அனுபவ மொழி.
- அஜீத் சாய் பாபாவின் தீவிர பக்தர்.
- அவரது நண்பர்கள் வட்டாரத்தில் குட்மார்க் பெற்றவர் ஐ ஸ்பெசலிஸ்ட் விஜய் சங்கர் ( இவர் நடிகர் ஜெய்சங்கரின் மகன் )
- பழகிய நண்பர்கள் பத்திரிக்கையாளர்கள் யாரை சந்தித்தாலும் முதலில் ஒரு ஹக். பிறகு தான் உடல்நல குடும்ப நல விசாரிப்புகள்.
- ஒரு மனிதரை ஒரு முறை பார்த்துப் பேசினால் போதும் அவருடைய நடை உடை முகபாவனையை அப்படியே செய்துகாட்டுவார் அஜீத்.
- இவர் ஒரு ரசனைமிக்க புகைப்பட கலைஞர். தம்முடன் நடிப்பவர்களை அவர்களூக்கே தெரியாமல் போட்டோ எடுத்து லேமினேசன் செய்து அனுப்பி வைத்து இன்ப அதிர்ச்சி கொடுப்பார்.
- இன்டீரியர் டெக்ரேசனில் பிரமாதமான டேஸ்ட் கொண்டவர்.
- ‘ அமைதி… அருமையான பீலிங்… அதை ஆழ்ந்து அனுபவிக்கனும் அதை ஆன்மீகம் தரும் என்று நம்புகிறேன்’ என்பார்.
- ஒரு பொறுப்பு மிக்க தந்தையாக குழந்தையை ஸ்கூலுக்கு கூட்டிச் செல்வது பேரன்ட்ஸ் மீட்டிங்கில் கலந்துகொள்வது போன்ற செயல்களை தவறாமல் செய்கிறார்.
- விஜய் மனைவி சங்கீதாவும் அஜீத் மனைவி ஷாலினியும் பெஸ்ட் ப்ரெண்ட்ஸ்.
- வீட்டில் மனைவி விளையாடுவதற்காக ஷட்டில் கோர்ட் அமைத்துக் கொடுத்திருக்கிறார்.
- ஓய்வாக இருந்தால் திருப்பதி வெங்கடா சலபதியை தரிசிக்க கிளம்பிவிடுவார்.
Be the first to comment on "தல அஜித் பற்றிய 48 தகவல்கள்!"