65ம் ஆண்டிற்கான தேசிய விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பலருக்கு மகிழ்ச்சி என்றாலும் இந்த வருடம் தமிழ்சினிமாவில் சில அறிமுக இயக்குனர்கள் ” நச் “படங்களை தந்து அதிசயிக்க வைத்தனர். அவர்களுடைய படங்களுக்கு எந்த விருதும் கிடைக்காதது சற்று வருத்தமளிக்கிறது.
குருவிடம் வாழ்த்து
இதில் தமிழ்மொழியின் சிறந்த படமாக ஒளிப்பதிவாளர் செழியனின் டூலெட் படம் தேர்வாகியுள்ளது. தனது மாணவன் தேசிய விருதை பெற்றதையொட்டி முதல் ஆளாக முந்திக்கொண்டு வந்து டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துவிட்டார் அவருடைய குருநாதர்.
குருவை முந்தினார்
சிறந்த இசையமைப்பாளர் மற்றும் சிறந்த பிண்ணனி இசை என்று இரண்டு விருதுகளை தட்டியுள்ளார் ஏர்.ஆர். ரகுமான். அதுவும் அவருக்குப் பிடித்தமான மணிரத்னத்தின் காற்று வெளியிடை படத்திற்காக. இதுவரைக்கும் ஐந்து தேசிய விருதுகள் பெற்று இளையராஜா முன்னணியில் இருந்தார். நான்கு தேசிய விருதுகள் பெற்றிருந்த ரகுமான் தற்போது ஒரே நேரத்தில் இரண்டு விருதுகளை பெற்று ஆறு தேசிய விருதுகள் பெற்ற ஒரே இயக்குனர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதே போல் இந்தப் படத்தில் இடம்பெற்ற வான் வருவான் பாடலை பாடிய பாடகிக்கு சிறந்த பாடகிக்கான தேசிய விருது கிடைத்துள்ளது. மொத்தமாக தமிழ்சினிமாவிற்கு மூன்று தேசிய விருதுகள். அவற்றில் இரண்டு காற்று வெளியிடை அடித்திருக்கிறது. ஒரு விருது செழியன் பெற்றுத் தந்தது.
சிறந்த பின்னணி பாடகருக்கான விருது கேஜே யேசுதாஸ்க்கு வழங்கப்பட்டிருக்கிறது. இது அவருடைய எட்டாவது தேசிய விருது.
சிறந்த படங்கள்: தெலுங்கு மொழியின் சிறந்த படமாக காஸி திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. டாப்ஸி நடித்த ஆடுகளம், பிங்க், காஸி ஆகிய இம்மூன்று படங்களும் விருது வென்றுள்ளது. பாகுபலியும் சிறந்த எண்டர்டெயின்மன்ட், சிறந்த ஸ்டண்ட் டைரக்சன் மற்றும் சிறந்த ஸ்பெசல் எபெக்ட்ஸ்காக விருது வென்றுள்ளது. இந்தி மொழியின் சிறந்த படமாக நியூட்டன் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
சுருட்டிச்சென்ற மலையாள சினிமா
சிறந்த இயக்குனர், சிறந்த துணை நடிகர், சிறந்த பின்னணி பாடகர், சிறந்த திரைக்கதை, சிறந்த தயாரிப்பு, சிறந்த ஒரிஜினில் திரைக்கதை, டேக் ஆப் படத்திற்காக பார்வதிக்கு ஸ்பெசல் மென்சன் விருது என்று மொத்தம் ஒன்பது தேசிய விருதுகளை வென்றுள்ளது மலையாள சினிமா.
தமிழ் சினிமாவுக்கு இன்னும் எதிர்பார்த்தோம்
தமிழ் சினிமாவை பொறுத்தவரை 2017ம் ஆண்டு மிகவும் கவனிக்கத்தக்கது. ஒரு கிடாயின் கருணை மனு, மாநகரம், தரமணி, அறம், அருவி போன்ற படங்களுக்கு எதிர்பார்க்கப்பட்டது. அறம் நயன்தாராவுக்கு அல்லது தரமணி ஆண்ட்ரியாவுக்கு சிறந்த நடிகை விருது கிடைக்கும் என்றும், எட்டு தோட்டாக்கள் எம்எஸ் பாஸ்கர் அல்லது குரங்குபொம்மை பாரதிராஜாவுக்கு விருதுகள் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. அனைவரும் கொண்டாடிய அருவிக்கு ஒரு விருதும் கிடைக்காதது அதைவிட வருத்தமளிக்கிறது.
Be the first to comment on "65 வது தேசிய விருதுகள் அறிவிப்பு! – எதிர்பார்த்த சிலருக்கு கிடைக்கவில்லை!"