லட்சுமி குறும்பட இயக்குனரின் அடுத்த படைப்பு “MAA” எப்படி இருக்கு?

MAA

கலை என்பது வெறும் லாபம் பார்க்கும் தொழிலாக, பொழுதுபோக்குக்காக மட்டுமல்லாமல்  சமூக பொறுப்புணர்வுடனும் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் இயக்குனர்
சர்ஜூன்னுக்கு பாராட்டுக்கள்.

“பத்தாம் வகுப்பு படிக்கும் பெண் பள்ளி கழிவறையில் குழந்தை பெற்றெடுத்தாள்” இது போன்ற
செய்திகளை இப்போது அடிக்கடி செய்தித்தாள்களில் பார்க்க நேரிடுகிறது. அந்த செய்தி தான்
இந்த குறும்படத்தின் மையக்கதை.

அது போன்ற செய்திகள் உருவாகக் காரணம் என்ன? அந்த பள்ளிப்பெண் அந்த தவறை தெரிந்து
செய்தாளா? அவள் செய்தது தவறு என்பது புரிந்ததா? அந்த பெண்ணுடன் உறவு கொண்ட
பையனுக்கு தான் செய்தது தவறு என்பது புரிந்ததா? பள்ளிப்பருவத்தில் ஆணும் பெண்ணும்
பேசிப்பழகுவது தவறா? ஆண்களுக்கு தனிப்பள்ளி, பெண்களுக்கு தனிப்பள்ளி என்ற சிஸ்டம்
சரியா? காதல் என்றால் வெறும் செக்ஸ் என்ற மனநிலை சரியானதா? பாதிக்கப்பட்ட பெண்ணின்
அம்மா அந்த தருணத்தில் எப்படி நடந்துகொள்ள வேண்டும்? “செக்ஸ்”ன்னா என்ன? குழந்தைப்
பெற்றுக்கொள்ள எந்த வயது தகுந்தது? இது போன்ற பல கேள்விகளுக்கு வெறும் இருபத்தெட்டு
நிமிட குறும்படம் பதிலளிக்கிறது.

அம்முவாக, அம்மாவாக நடித்தவர்களின் நடிப்பு கச்சிதம். “பயத்தோடையும் வெறுப்போடையும்
ஒரு உயிர இந்த உலகத்துக்கு கொண்டு வரக்கூடாது” என்ற வசனம் இன்றைய தலைமுறை
காதலர்களுக்கான மெசேஜ். என்னுயிரே என்ற பாடல் மனதைக் கவர்கிறது.

குற்றம் கடிதல், மாலை நேரத்து மயக்கம், சிகப்பு எனக்கு பிடிக்கும் போன்ற பெரிய படங்களைத்
தொடர்ந்து இந்தக் குறும்படமும் பாலியல் கல்வியை வலியுறுத்துகிறது. அம்மாவின் வளர்ப்பில்
தான் எல்லாம் உள்ளது என்பதை உணர்த்துவதுதான் இந்த “MAA”. மொத்தத்தில் அனைவரும்
ஒருமுறையாவது பார்க்க வேண்டிய குறும்படம்.

Related Articles

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.11,500 கோடி ... இந்திய வங்கிகளில் கோடி கணக்கில் கடன் வாங்கிவிட்டு இங்கிலாந்துக்கு எஸ்கேப் ஆகி சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார் விஜய் மல்லையா. இப்போது அந்த வரிசை நீர...
அரசியலுக்கு எதிர்ப்பு தான் மூலதனம்! எதிர... எதிர்ப்பு தான் மூலதனம் அரசியலுக்கு எதிர்ப்பு தான் மூலதனம் என்று ரஜினி சொன்னதும் சொன்னார் எக்கசக்க எதிர்ப்புகள் குவிந்து வருகிறது. ரசிகர்களுடன் புகைப்...
ஒழுக்கமில்லாதவர்களால் தமிழகம் ரத்தக்காடா... வாழ்க்கை மிக எளிதான ஒன்று ஒழுக்கத்தை கடைபிடிப்பவனுக்கு. அது இல்லாமல் இருப்பவர்களால் வாழ்க்கையில் நேரும் பிரச்சினைகளை சமாளிக்க முடியாமல் மன உளைச்சலால...
இந்த உலகம் ஜெயிச்சுடுவேன்னு சொன்னா கேட்க... கடந்த ஆண்டு வெளியான படங்களில் மிக முக்கியமான படம் கனா. பெண்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்து மிக அழகாக உருவாக்கி இருந்தார் இயக்குனர் அருண்ராஜா காமராஜ். இ...

Be the first to comment on "லட்சுமி குறும்பட இயக்குனரின் அடுத்த படைப்பு “MAA” எப்படி இருக்கு?"

Leave a comment

Your email address will not be published.


*