இந்த ஆண்டு முதல் மாணவ மாணவிகளின் புகைப்படங்களை விளம்பரங்களுக்கு உபயோகிக்க கூடாது என்று தடை விதித்து உள்ளது தமிழகப் பள்ளிக் கல்வித்துறை. இது சமூக ஆர்வலர்கள் பலருடைய ஆதரவைப் பெற்றிருந்தாலும் பள்ளி மாணவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பது தான் இங்கு கவனிக்கப்பட வேண்டியவை.
விளம்பர பலகைகள் வைப்பதனால் அதனை பார்க்கும் மற்ற மாணவர்களும் நாமளும் இவர்களைப் போல நல்ல மதிப்பெண் எடுத்து ஊர் வியந்து பார்க்க வைக்க வேண்டும் என்ற விரும்பி நன்றாக படிப்பார்கள் ஆதலால் தடை விதித்தது வருத்தத்துக்கு உரியது என்கின்றனர் டாப்பர் மாணவர்கள். இன்னும் சில மாணவர்கள், விளம்பர பதாகைகளில் எங்கள் புகைப்படங்களை பார்க்கும் போது எங்களின் மகிழ்ச்சி விலை மதிப்பு அற்றது. எதிர்காலத்தில் இந்த தருணங்களை எண்ணி மகிழ்ந்து கொள்வோம். எங்களை நாங்களே ஊக்கப் படுத்திக் கொள்வோம் என்கின்றனர். இப்படி சொல்பவர்கள் எல்லாம் டாப்பர் மாணவர்கள். டாப்பர்கள் அல்லாது மற்ற மாணவர்களோ ” இப்பவாச்சும் இந்த தடையே கொண்டு வந்தாங்களே… ரோட்டுல போற வரப்பலாம் அந்த போஸ்டர் பேனர்களை காட்டி கம்பேரிசன் பண்ண ஆரம்பிச்சுடுறாங்க பேரண்ட்ஸ்… இது எங்கள பெரிதும் மட்டம் தட்டக்கூடிய விசியமா இருந்துச்சு… எங்களுக்கு இருக்குற தனிப்பட்ட திறமைல போகாம செம்மறி ஆட்டுக் கூட்டமா போகறது தூண்டுது… அதனால தடை விதிச்சது ரொம்பவே நல்லது… ” என்கின்றனர். இவர்களில் யார் நல்ல சமூக அறிவுடன் இருக்கிறார்கள் என்று பார்த்தால் அது டாப்பர் அல்லாத மாணவர்கள் தான். உங்கள் பகுதிகளில் மாணவ மாணவிகளின் புகைப்படங்களை விளம்பர பதாகைகளில் எந்த கல்வி நிறுவனமாவது உபயோகித்தால் அதனை கேள்வி கேளுங்கள்.
Be the first to comment on "தனியார் பள்ளிகளின் விளம்பர பதாகைகளில் மாணவ மாணவிகளின் புகைப்படங்களை வைக்க கூடாது என்று தடை விதித்தது தவறா? மாணவர்கள் என்ன சொல்கிறார்கள்?"