சென்னை டூ சேலம் பசுமை விரைவு எட்டு வழிச்சாலை திட்டத்தில் மறைந்திருக்கும் அரசியல் பற்றிய விவாதம் இப்போது நடந்து வருகிறது. இது மக்களுக்கான திட்டம் மக்களுக்கான திட்டம் என்று அரசு கொண்டுவரும் திட்டம் எல்லாம் மக்களுக்கு ஆனதாக,இருக்கிறது என்றால் அவை மக்களை நோகடிக்கும் திட்டங்களாகத் தான் இருக்கிறது.
இந்நிலையில் சேலத்திற்கும் சென்னைக்கும் இடையிலான பயண நேரத்தை குறைக்கிறேன் என்று தற்போது சென்னை டூ சேலம் எட்டு வழி பசுமைச் சாலை என்று புதிய திட்டத்தை தொடங்கி உள்ளது “மக்களுக்கான அரசு”. இந்த திட்டம் பல ஆயிரம் கோடி செலவில் நிறைவேற்றப்பட இருக்கிறது. அது ஒரு புறமிருக்க இந்தத் திட்டத்தால் பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுகிறது. அது மட்டுமின்றி பல மலைகள் குடைந்து காணாமல் போகப் போகிறது என்பதாலும் இந்த எட்டு வழிச்சாலை பேரில் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு மிகப் பெரிய அளவில் கனிம வளங்கள் தாரைவார்க்கப் பட இருப்பதாலும் இதற்கு பலத்த எதிர்ப்புகள் தொடங்கி உள்ளது.
இந்த அரசு, மக்களுக்கான திட்டம் மக்களுக்கான திட்டம் என்று பணத்தை கோடி கோடியாய் கொள்ளை அடிப்பதற்கான திட்டமாக மாற்றிக் கொள்கிறது. இந்நிலையில் இந்த அரசு, மணல் வியாபாரத்தில் ஐம்பதாயிரம் கோடி ஊழல் செய்து உள்ளது என்று குற்றம் சாட்டி உள்ளது திமுக அரசு.
இப்படியே ஆள் மாற்றி ஆள், இருக்குற கொஞ்ச இயற்கை வளங்களையும் சுரண்டித் தின்றுவிட்டால் எதிர்காலத்தில் நாம் மட்டுமே இருப்போம், நமக்கென்று எதுவும் இருக்காது. வெறுங்கையை நக்க வேண்டிய காலம் வெகு தொலைவில் இல்லை.
Be the first to comment on "சென்னை டூ சேலம் பசுமை விரைவு எட்டு வழிச்சாலை திட்டத்தில் மறைந்திருக்கும் அரசியல்?"