மக்களுக்கு விசம் கொடுத்து சம்பாதிக்கிறது தமிழக அரசு!

(TASMAC – Tamilnadu Anaiththu Samooga Makkalum Arundhum Cool Drinks) சமூக வலை தளங்களில் உலவிக் கொண்டிருக்கும் வரிகள் இது. உண்மை தான். தெருவுக்கு தெரு டாஸ்மாக் கடைகளை திறந்து வைத்து இருக்கிறது தமிழக அரசு. பல இடங்களில் மதுக்கடை அகற்றக் கோரி பல போராட்டங்கள் நடந்தது. அத்தனையும் தற்போது கப்சுப் என்றாகிவிட்டது. தற்போது நெல்லை மாணவன் தினேஷின் கடிதம் தமிழகத்தை உலுக்கி உள்ளது. அப்பா என்னுடைய இறுதி சடங்கில் பங்கேற்க கூடாது, காரியம் செய்யக் கூடாது என்று கடிதம் எழுதி வைத்திருக்கிறார் தினேஷ். இதுவும் ஒரு வகையில் மது ஒழிப்பு போராட்டம் தான். கப்சுப் என்று சத்தம் இல்லாமல் இருந்த இந்த விவகாரத்தை மீண்டும் கவனத்திற்கு வரச் செய்துள்ளது தினேஷின் மரணம். இந்திய சமூகத்தைப் பொறுத்த வரை மரணங்கள் நடந்த பிறகே நடவடிக்கைகள் எடுப்பது, கவனத்தில் மேற்கொள்வது பழக்கமாகி விட்டது.

மது ஒழிப்பு நடவடிக்கை?

ஒவ்வொரு தேர்தலின் போதும் அனைத்துக் கட்சிகளும் கட்டாயம் மது ஒழிப்பு கொண்டு வருவோம் என்று உறுதி அளிக்கின்றனர். ஆனால் அந்த பொதுக் கூட்டத்திற்கும் மாநாட்டுக்கும் மக்களை இழுத்து வர கோட்டரும் கோழி பிரியாணியும் தேவை. கோட்டர் அதிகம் கொடுக்கும் கட்சிக்கு ஓட்டை குத்துகிறான் வாக்காளன். பாவம் அவனுக்குத் தெரிவதில்லை. மதுவை கொடுத்து கொடுத்து அவனை சிந்திக்க விடாமலே மழுங்கடிக்கிறது தமிழக அரசியல். அரசியல்வாதிகள் தான் திருட்டு வேலை செய்கிறார்கள் எனத் தெரிந்தும் அவர்கள் கொடுக்கும் மதுவை வாங்கி அருந்தும் மக்களுக்கு புத்தி எங்க போனது. கடைசி வரைக்கும் சிந்தனை அற்ற ஜடமாகவே வாழ்ந்து திரிகிறான்.

மது அருந்துவது கெத்து!

உழைக்கும் மக்கள் களைப்பாறுவதற்காக பானங்கள் கொண்டு வரப்பட்டது. நமது சமூகத்தைப் பொறுத்த வரை கள் தான் அதிகம் பேர் பருகும் பானம். அதன் பிறகு சாராயம் காய்ச்சத் தொடங்கி அது கள்ளச் சாராயமாக மாறி இன்று அரசு அங்கீகாரம் பெற்ற நவீன பார் வசதி உடன் ஒயின் ஷாப் என்ற நிலைமைக்கு வந்து நிற்கிறது. உழைப்பவன் தான் எதோ உடல் அசதிக்காக அடிக்கிறான் என்றால் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு என்ன கேடு வந்தது? எல்லாம் அந்த கெத்து என்ற வார்த்தை தான். காசு கொடுத்து விசம் வாங்கி சாகிறது இன்றைய இளைய சமுதாயம். சமீபத்தில் வேலூர் பாளையங்கோட்டையை சேர்ந்த பெண்கள் மது அருந்தும் வீடியோ ஒன்று சமூக வலை தளங்களில் வைரல் ஆனது. அத்தனை அறியாமை. தனி மனித ஒழுக்கம் இல்லாமல் இங்கு எதையும் நிமிர்த்த முடியாது.

Related Articles

நமது மாநில மரமான பனை மரங்களின் சிறப்பம்ச... கோடை காலம் வந்துவிட்டது. சாலையோரங்களில் நுங்கு விற்பனையாளர்களை காண முடிகிறது. ஒரு நுங்கின் விலையைக் கேட்டால் தலை சுற்றுகிறது. இளம் பருவத்தில் நண்பர்கள...
குரங்கணி தீ விபத்தில் 9 பேர் உயிரிழப்பு... தேனி மாவட்டம் போடி அருகே உள்ள குரங்கணி மலைப்பகுதியில் மலையேற்ற பயிற்சிக்கு சென்றவர்களில் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் நான்கு பெண்க...
பூனை நம்மை கடித்து விட்டால் உடனடியாக நாம... ஏதாவது ஒரு விலங்கினை செல்லப்பிராணிகளாக வீட்டில் வளர்ப்பது உலகம் முழுக்க உள்ள மனிதர்களின் நற்பண்பாக இருக்கிறது. அந்த வகையில் மனிதர்கள் நாய்களை பூனைகளை ...
பேசாத பேச்செல்லாம்!  – நீங்கள் யார... மொத்தம் 32 கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு தான் எழுத்தாளர் பிரியா தம்பி எழுதிய இந்த "பேசாத பேச்செல்லாம்" புத்தகம். இந்தப் புத்தகம் கற்றுக் கொடுத்த சில விஷ...

Be the first to comment on "மக்களுக்கு விசம் கொடுத்து சம்பாதிக்கிறது தமிழக அரசு!"

Leave a comment

Your email address will not be published.


*