காதும்மாவை விரும்பியவர்களுக்கு கோலமாவு கோகிலாவைப் பிடிக்குமா? – கோலமாவு கோகிலா விமர்சனம்!

kolamavu kokila review nayanthara

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிப்பில் அனிருத்தின் இசையில் வெளியாகி இருக்கும் படம் கோலமாவு கோகிலா. நயன்தாராவுக்கு தோழியாக அனிருத் பெண் வேடமிட்டு நடிக்கிறார் என்று சர்ச்சையை உண்டாக்கிய படம். சிவகார்த்திகேயனை பாடலாசிரியராக அறிமுகப் படுத்தி இருக்கும் படம்… ரிலீசுக்கு முன்பே எனக்கு இப்ப கல்யாண வயசு தான் ஆகிடுச்சுடி… பாடலால் பெரிதும் பேசப்பட்ட படம் என்று இந்தப் படம் பல நாட்களாகவே ரிலீசுக்குப் பெரிதும் எதிர்பார்க்கப் பட்டது.

ஏடிஎம் வாட்ச்மேன் பணிபுரியும் ஒருவருக்கு வயதுக்கு வந்த இரண்டு மகள்கள். அந்த நபரின் மனைவிக்கு கேன்சர். இன்னும் மூன்று மாதங்கள் இருப்பார் பெரிய செலவு செய்தாள் முழுமையாகக் காப்பாற்றலாம் என்ற இக்கட்டான நிலை. பணம்… பணம்… பணம்… இந்தப் பணத்தை எப்படியாவது சம்பாதிக்க வேண்டும் என்று வீட்டின் மூத்த மகள் கோகிலா முயற்சி செய்கிறாள். எங்கும் அவள் எதிர்பார்த்த பணம் கிடைக்கவில்லை.

ஆதலால் நிறைய பணம் கிடைக்கும் போதைக் கடத்தல் தொழிலில் இணைகிறார். ஏகப்பட்ட தவறுகள், பொய்கள் என்று சுற்றி சுற்றி சிக்கலுக்குள் சிக்கித் தவிக்கிறார். இறுதியாக எப்படி அந்த சிக்கலில் இருந்து கோகிலா தப்பிக்கிறார் என்பதுதான் கதைக்களம். நயனும் யோகி பாபுவும் படத்தின் சுமையைப் பகிர்ந்துகொள்கிறார்கள். அன்புதாசன், ஜாக்குலின், அறந்தாங்கி நிஷா என்று சின்னத்திரை பட்டாளங்கள் நிறைந்து இருக்கிறது. மொட்டை ராஜேந்திரன் வருகிறார் ஆனாலும் சிரிக்க வைப்பது யோகிபாபுவும் அன்புதாசனும் அந்த டோரா விக் வைத்த டோனி கதாபாத்தரமும் மட்டுமே.

ரேப் என்பது மிகவும் சென்சிட்டிவான விஷியம், அதை காமெடி காட்சிகளாக மாற்றி வரும் அவலம் சமீப காலமாக தமிழ் சினிமாவில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அனிருத்தின் இசை படத்திற்குப் பக்க பலம். ஒரு சில இடங்களில் ஒளிப்பதிவு பிரமிக்க வைக்கிறது. வசனம் ஒரு சில இடங்களில் கைதட்டல் வாங்குகிறது. மொட்டை ராஜேந்திரன் பேசும் வசனங்கள் காமெடியாக இல்லை. மாறாக அழுப்பை உண்டாக்குகிறது.

நானும் ரௌடிதான் படத்தில் வந்த காதும்மா அப்பாவிப் பெண்ணாக அழகாக இருப்பார். அதுபோல இந்தப் படத்திலும் அப்பாவியாக அழகாக இருக்கிறார் நயன்தாரா. ஆனால் காதும்மாவைப் பிடித்த அளவுக்கு கோலமாவு கோகிலாவை ரசிகர்கள் விரும்புவார்களா என்பது சந்தேகம் தான்.

 

Related Articles

திறந்தவெளி கழிவறைகளை ஒழித்த எட்டுவயது மா... பிரதமரின் முப்பத்து எட்டாவது மனதின் குரல் நிகழ்ச்சி ஒலிபரப்பாகும் வரை துஷார் என்ற எட்டுவயது மாணவனைப் பற்றி நாட்டில் யாருக்கும் தெரியாது. அந்நிகழ்ச்சிக...
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) 2018 ஐப...  வரிசை எண் போட்டி எண் தேதி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் போட்டிகள் நேரம் இடம்1 3 8-ஏப்ரல் கொல்கத்தா vs பெங்களூர் 8:00 PM கொ...
சுருதி டிவி – தினமும் அரை மணி நேரம... தமிழில் இன்று  ஆயிரக்கணக்கான யூடியூப் சேனல்கள் இருக்கின்றன. ஆனால் அத்தனை யூடியூப் சேனல்களில் பெரும்பாலான சேனல்கள் ஏற்கனவே தெரிந்த விஷயங்களை பலபேர் போட...
புதிய வாக்காளர் அடையாள அட்டைகளில் ஏகப்பட... ஆதார் கார்டு, ஸ்மார்ட் ரேசன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை என்று அரசு வழங்கும் அனைத்து ஆவணங்களிலும் ஏகப்பட்ட பிழைகள். தேர்தல் நேரம் நெருங்கிவிட்டதால்...

Be the first to comment on "காதும்மாவை விரும்பியவர்களுக்கு கோலமாவு கோகிலாவைப் பிடிக்குமா? – கோலமாவு கோகிலா விமர்சனம்!"

Leave a comment

Your email address will not be published.


*