சட்டக்கல்லூரியில் படித்து டாக்டர் ஆகணும்! – பரியேறும் பெருமாள் பிஏபிஎல் மேல ஒரு கோடு படம் எப்படி இருக்கு?

Pariyerum Perumal Movie Review

Pariyerum Perumal (2018) – IMDB Rating – 9.6/10

எல்லா ஊரிலும் கூட்டம் அதிகம் கூடாத ஒரு தியேட்டர் இருக்கும். காரணம் அந்த தியேட்டர்களில் மட்டும் தான் நல்ல படம் ஓடும். அப்படியொரு மொக்கை தியேட்டரில் வெறும் இருபத்தைந்து பேருடன் பார்த்த ஒரு நல்ல படத்தைப் பற்றி பேசுவோம் வாருங்கள்.

படத்தின் முதல் நாயகன் சந்தோஷ் நாராயணன். மனுசன் இந்தப் படத்திற்காக முழுமனதுடன் மெனக்கெட்டு இசையமைத்து இருக்கிறார். அதிலும் அந்த சம்படி ஆட்டப்பாடல் எல்லாம் தாறுமாறு. விரைவில் ஒரு தேசிய அங்கீகாரம் எதிர்பார்க்கலாம்.

இரண்டாம் நாயகன் படத்தின் ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர். படம் பார்ப்பது போல் இல்லாமல் அந்தக் கதாபாத்திரங்களுடன் வாழ்ந்தது போல் இருக்கிறது. ஏரியல் ஷாட்ஸ் எல்லாம் செம. அதேபோல் கிளைமேக்ஸில் டீ டம்ளர்களை வைத்து கேமராவாலே அரசியல் பேசியது அல்டிமேட்.

மாரி செல்வராஜ்! உங்கள் கைக்கு ஆயிரம் முத்தங்கள். உங்கள் வாழ்வில் நடந்த ஜோவுடனான நட்பு, கருப்பி இழந்த கதை, அப்பா செல்வராஜின் சம்படி ஆட்டம், தாமிரபரணியில் கொல்லப்பட்டவர்கள் என்று மறக்க முடியாத சில சம்பவங்களை இவ்வளவு அழுத்தமாக, அழகாக  எழுதி அதை காட்சியிலும் கொண்டு வந்திருக்கிறீர்கள். உங்களுடைய பண்ணிரெண்டு வருட கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றி. கூடிய விரைவில் உங்கள் கைகளில் விருதுகள் குவியும்.

கதிருக்கும், ஆனந்திக்கும் இடையே இருக்கும் நட்பையும் காதலையும் தாண்டிய பந்தத்தை உணர்த்தும் காட்சிகள் அவ்வளவு அழகு. அவ்வளவு வலிமை! யோகிபாபு சரியாகப் பயன்படுத்தப்பட்டு இருக்கிறார்.  

சாதிய ஆதிக்கத்தை, ஆணவ கொலைகளை, சட்டக்கல்லூரியில் நடக்கும் அரசியலை, தாழ்ந்த சாதிக்காரன் ஒருவன் படிக்க நினைக்கும்போது அவனை ஆதிக்க சாதியினர் மட்டம் தட்டப்படுவதை இவ்வளவு வலிமையாக நெற்றிப்பொட்டில் அடித்தபடி சொல்லிய படங்கள் தமிழில் இதுவரை வரவில்லை. மாவீரன் கிட்டு சொல்லத் தவறிய சில விஷியங்களை நுணுக்கமாக சொல்லப்பட்டிருக்கிறது.

சட்டக்கல்லூரியில் பரியேறும் பெருமாள் சேரும்போது நான் டாக்டர் ஆகணும் என்று சொல்வதும், பரியேறும் பெருமாள் பிஏபிஎல் மேல ஒரு கோடு என்று சொல்வதும் அவ்வளவு அழகாக இருக்கிறது. ஆங்கிலம் கற்றுக்கொடுப்பவர்கள் எனக்கு தேவதைகள், பேய் மாதிரி படிச்சு இந்த இடத்துக்கு வந்தேன் போன்ற வசனங்கள் இயக்குனரை ராமை நினைவூட்டியது.

கருப்பி கொல்லப்படும் இடமும், பரியேறும் பெருமாளை மீட்க கருப்பி நீல வண்ணத்துடன் ஓடி வருவதும் போன்ற காட்சிகளில் மெய் சிலிர்த்துவிட்டது. ஜோவின் கார் கண்ணாடியை உடைத்து அதன் துளை வழியாக பரியன் பேசும் வசனங்கள் படம் பார்க்கும் நம்மை கேட்கும் சுருக் கேள்விகள்! அந்த ஒரு காட்சிக்காகவே படத்தை அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டும்!

தயாரிப்பாளர் பா.ரஞ்சித் என்பதால் அவருடைய வளர்ச்சியை விரும்பாதவர்கள் படத்தை பெரும்பாலான இடங்களில் ரிலீஸ் செய்ய முட்டுக்கட்டையாக இருக்கிறார்கள் என்று பேசப்படுகிறது. காரணம் கேட்டால் ரஞ்சித் ரஜினிய வச்சு ரெண்டு படம் எடுத்துட்டேங்குற திமிருல விலை அதிகமான காரு வாங்கி ஓட்டிக்கிட்டு பந்தா காட்டிக்கிட்டு திரியுறான் என்று சொல்கிறார்கள். ஆக மொத்தத்தில் ஒருவன் துணிந்து வந்து உண்மையை சொல்ல முன் வந்தால் இது தான் நடக்கும்போல.

 

Related Articles

ரொட்டி சாப்பிட்டுருப்பீங்க, ரோபோ கையால ச... இந்தியாவிலேயே முதல் முறையாக ரோபோக்களை கொண்டு வாடிக்கையாளர்களுக்குப் பரிமாறும் வகையில் ஒரு உணவகம் வடிவகைப்பட்டுள்ளது. மொமொ (Momo) என்று பெயரிடப்பட்டுள்...
பூ திரைப்படத்தின் சிறுகதை வடிவம்!... சிறுகதையை நாவலை படமாக்க முயலும் இயக்குனர்கள் தமிழ் சினிமால் குறைவே. பாலுமகேந்திரா, மகேந்திரன், பாலா, வெற்றிமாறன், சுசூந்திரன், வசந்தபாலன், சசி, சமுத்த...
செல்பி எடுக்க முயன்றால் செல்போன் உடையும்... சிங்கத்தையும் சிறுத்தையையும் பெற்று வளர்த்தவரான சிவக்குமார் நடிகர், ஓவியர், பேச்சாளர் என்று பன்முகத் தன்மை வாய்ந்தவர். சில வருடங்கள் வரை இவருடைய சொல்...
பாகிஸ்தான் குழந்தையை தத்து எடுத்து வளர்க... இந்த சமூகத்தில் செவிலியர்களுக்கு என்று எப்போதும் தனி மரியாதை உண்டு.( கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர்களையும் சாலையில் இறங்கி போராட வைத்தது நமது தமிழ...

Be the first to comment on "சட்டக்கல்லூரியில் படித்து டாக்டர் ஆகணும்! – பரியேறும் பெருமாள் பிஏபிஎல் மேல ஒரு கோடு படம் எப்படி இருக்கு?"

Leave a comment

Your email address will not be published.


*