செல்பி எடுக்க முயன்றால் செல்போன் உடையும் – சீறிப்பாய்ந்த சிவக்குமார்!

செல்பி எடுக்க முயன்றால் செல்போன் உடையும் - சீறிப்பாய்ந்த சிவக்குமார்!

சிங்கத்தையும் சிறுத்தையையும் பெற்று வளர்த்தவரான சிவக்குமார் நடிகர், ஓவியர், பேச்சாளர்
என்று பன்முகத் தன்மை வாய்ந்தவர். சில வருடங்கள் வரை இவருடைய சொல்லுக்கு ஏராளமான
மக்களிடம் மிகுந்த மதிப்பு இருந்தது. ஆனால் அந்த ஐடி பெண்களின் விவகாரத்தில் தன்னுடைய
ஒட்டுமொத்த பெயரையும் கெடுத்துக் கொண்டார்.

சிவக்குமார் மாதிரி பிள்ளைங்கள நல்ல படியா வளத்தி ஆளாக்கணும் என்று சொல்லும் அளவுக்கு
உண்மையிலயே அவருடைய பிள்ளைகளின் வளர்ச்சிக்கு அவர் முக்கிய பங்கு வகித்துள்ளார்
என்பது யாவரும் அறிந்ததே. அப்படிப்பட்ட சிவக்குமார் சமீப காலமாக சில சங்கடங்களை
சந்தித்து வருகிறார்.

நெட்டிசன்களின் கலாய் :

இந்த மனுசன் என்னடா செல்போன்ல வாலிபால் விளையாண்டு பழகுறாப்ள, 2.O ல அக்ஷய்
குமாருக்குப் பதிலா சிவக்குமார போட்ருக்கலாம், மனுசன் குழந்தையா மாறிட்டாருடா அதான்
செல்போனை கீழ தட்டிவிட்டுட்டாரு, இதே ஒரு பொண்ணு செல்பி எடுக்க போயிருந்தா இவரு
கோபப்பட்டுருப்பாரா? பல் இளிச்சிட்டு நிப்பாரா? நீ என்ன அவ்ளோ பெரிய அப்பாடேக்கரா
என்றும் கலாய்த்து வருகிறார்கள்.

மிரள வைக்கும் பேச்சாளர்:

காந்தி, சிவாஜி, இராமாயணம், மகாபாரதம், இந்திய விடுதலைப் போராட்டம் என்று எந்த
தலைப்பில் பேசப் போவதாக இருந்தாலும் முழு அர்ப்பணிப்போடு அவருடைய பேச்சைக் கேட்க
கூடியிருக்கும் மக்களின் நேரத்திற்கு மதிப்பு அளித்து பேசக்கூடியவர். அவருடைய பேச்சுக்காக
ஈரோடு புத்தகத் திருவிழாவில் கூடும் மக்களின் எண்ணிக்கையே அதற்குச் சான்று.

பேசப்போகும் விஷியத்தை முடிந்தவரை அலசி ஆராய்ந்து பேசக்கூடிய மனிதர் ஐடி பெண்களின்
விஷியத்தில் எப்படி சறுக்கினார் என்று பலரும் வியப்படைந்தனர். அப்போது முதலே 2 டன்
சிவக்குமார் என்று பலரால் கேலிக்கு உள்ளானார்.

இதை தொடர்ந்து சமீபத்தில் நகைகடை திறப்புவிழா ஒன்றிற்குச் சென்றிருந்த சிவக்குமார்
தன்னுடன் செல்பி எடுக்க முயன்ற இளைஞனின் செல்போனை எரிச்சலுடன் கீழே தட்டிவிட்டார்.
ஒரு நல்ல காரியம் தொடங்கும்போது ஏன் கோபப்பட்டார் என்று தெரியவில்லை.

எத்தனையோ இக்கட்டான சூழலில் கூட பல நடிகர் நடிகைகள் தங்களுடன் செல்பி எடுக்க
முயலும் ரசிகர்களுடன் ஒன்றிரண்டு செல்பி எடுத்துக்கொண்டு டாட்டா கிளம்பி செல்வார்கள்.
அந்த விதத்தில் இந்த தலைமுறை நடிகர் நடிகைகளை வெகுவாகப் பாராட்டலாம்.

தம்பி போட்டா எடுக்காத, குறுக்கால நின்னு இடைஞ்சலா இருக்காத என்று சொல்லி இருக்கலாம்
அல்லது கண்டுங்காணாதது போல் சென்றிருக்கலாம்.

தியானம், யோகா, அறிவுரை என்று மக்களிடையே நன்மதிப்பை பெற்ற சிவக்குமார் ஒரு நிமிட
கோபத்தால் தன் மதிப்பை கெடுத்துக் கொண்டார்.

Related Articles

கண்டிப்பாக பார்க்க வேண்டிய மூன்று திரைப்... கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்: இயக்குனர் ராஜீவ் மேனனின் இயக்கத்தில் மம்முட்டி, அஜீத், தபு, ஐஸ்வர்யா ராய் நடித்த படம் இது. இந்தப் படம் பார்த்து முடித்த ...
பக்கத்துல இருக்கறவங்க மேலயும் அக்கறை காட... நூற்றுக்கும் மேற்பட்ட சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு முப்பதுக்கும் மேற்பட்ட விருதுகளை வென்று தற்போது திரைக்கு வந்துள்ள படம் டூலெட். இயக்குன...
பூனை குறுக்க போனா என்ன? போய் பொழப்ப பாரு... வீட்டை விட்டுக் கிளம்பியதிலிருந்து, அன்றாட வேலைகள் அனைத்தையும் செய்து முடித்துவிட்டு நீங்கள் வீடு வந்து சேரும் வரை, உங்களைச் சுற்றி எத்தனை நம்பிக்கைகள...
தனியார் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள... சமீபத்தில் முகநூலில் ஒருவர், தனியார் பள்ளியில் வாத்தியார் வேலை பார்ப்பதற்கு பேசாமல் நாலு ஆடு மாடு வாங்கி மேய்க்கலாம் என்று பதிவிட்டிருந்தார். அதற்கு ப...

Be the first to comment on "செல்பி எடுக்க முயன்றால் செல்போன் உடையும் – சீறிப்பாய்ந்த சிவக்குமார்!"

Leave a comment

Your email address will not be published.


*