திரைப் படங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பெரும்பாலான படங்களுக்கு உரிய ரிலீஸ் தேதியும் போதுமான அளவிலான தியேட்டர்களும் கிடைப்பது இல்லை. அப்படியே கிடைத்தாலும் பெரிய நடிகர்களின் படங்கள் வந்து தங்களுடைய ஆதிக்கத்தை காட்டி விடுகிறது. தற்போது இவற்றிற்கு முடிந்த வரை தீர்வு காணும் வகையில் Netflix, Amazon prime, Hotstar, Zee 5 போன்ற அதிகாரப் பூர்வ இணையங்களில் ஒரிஜினல் பிரிண்ட் படம் வெளியாகி வருகிறது. அவ்வகையில் இந்த நான்கு இணையங்களிலும் வெளியாகி இருக்கும் 2018ல் வெளியான படங்களின் பட்டியல் இங்கே உள்ளது.
Netflix
1. மேற்குத் தொடர்ச்சி மலை
2. வஞ்சகர் உலகம்
3. சில சமயங்களில்
4. கோலிசோடா2
5. மிஸ்டர் சந்திர மௌலி
6. ஓடு ராஜா ஓடு
7. எதிர்மறை
Amazon Prime
8. பரியேறும் பெருமாள்
9. காற்றின் மொழி
10. கடைக் குட்டி சிங்கம்
11. யு டர்ன்
12. காலா
13. நடிகையர் திலகம்
14. தமிழ்ப் படம் 2
15. இமைக்கா நொடிகள்
16. தானா சேர்ந்த கூட்டம்
17. ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்
18. கஜினிகாந்த்
19. ஸ்கெட்ச்
20. நோட்டா
Hotstar
21. வட சென்னை
22. செக்க சிவந்த வானம்
23. அண்ணனுக்கு ஜே
24. காளி
25. வேலைக்காரன்
26. விஸ்வரூபம் 2
27. சாமி 2
28. நிமிர்
Zee 5
29. பியேர் பிரேம் காதல்
30. கோலமாவு கோகிலா
31. இரும்புத் திரை
32. சிகை
33. லக்ஷ்மி
34. மோகினி
35. ஜூங்கா
36. பாஸ்கர் ஒரு ராஸ்கல்
37. தியா
38. மன்னர் வகையறா
திரைப்படங்கள் வெளியான அடுத்த சில நாட்களிலயே தியேட்டர் பிரிண்ட் வெளியிடும் தமிழ்ராக்கர்ஸ், ஜியோ ராக்கர்ஸ், மெட்ராஸ் ராக்கர்ஸ் போன்ற இணையங்களுக்கு Amazon prime, Netflix, Hotstar, Zee5 போன்றவை ஒரு வகையில் மாற்று வழி. குற்ற உணர்வு இல்லாமல் திரைப்படங்களை இதில் கண்டு களிக்கலாம்.
இதை தான் அன்றே கமல் சொன்னார். அப்போது யாரும் ஏற்கவில்லை. இன்று சிகை போன்ற படங்கள் கமல் சொன்ன வழியில் நேரடியாக இணையங்களில் வெளியாகிறது.
Be the first to comment on "இணையத்தில் வெளியான 2018ம் ஆண்டின் 38 படங்கள்!"