“நாயா அலஞ்சு நாய கண்டுபிடிச்ச தரன்” – அடங்கமறு படத்தை ஏன் கட்டாயம் பார்க்க வேண்டும்?

Why you must watch Adangamaru movie

இயக்குனர் கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் 2018ம் ஆண்டின் இறுதியில் வெளியான படம் அடங்க மறு. ஒரே நாளில் ஐந்து படங்கள் ரிலீஸ் ஆனதால் மிகக் குறைவான தியேட்டர்களே இந்தப் படத்திற்கு கிடைத்தது. தற்போது தான் ஒரு சில தியேட்டர்களில் இதற்கு ஒன்றிரண்டு காட்சிகள் கிடைத்துள்ளது.

Obey The Order என்று மேலதிகாரிகள் எஸ்ஐ சுபாஷை (ஜெயம் ரவி) அடங்க சொல்கிறார்கள் கண் முன்னே எவ்வளவு அநியாயம் நடந்தாலும்! ஒரு உண்மையான போலீஸ்காரன் தப்ப தட்டிக் கேட்கணுமே தவிர தப்பு செய்றவங்களுக்கு சப்போர்ட் செய்யக் கூடாது என்று பணியில் இருந்து விலகி தன்னை சீண்டிப் பார்த்த மேலதிகாரிகளை திமிர் பிடித்த பணக்காரர்களை எப்படி அலறவிடுகிறார் என்பதை படத்தின் மையக்கதை. அடுத்தடுத்து என்ன நடக்கும் என எளிதில் கணிக்க முடிந்தாலும் படம் சுவாரஸ்யமாகவே செல்கிறது.

“யூனிபார்ம் புதுசுல்ல அதான்… காஞ்சா சரியா போயிடும்… “,

” அவிங்க ரௌடிங்க இல்ல சார் ஸ்டூடன்ட்ஸ்… அதான் பொதுமக்களுக்கு பிரச்சின வரக்கூடாதன்னு லீவ் டேய்ல போராடம்ம வச்சாருக்காங்க… “,

“நாயா அலஞ்சு நாய கண்டுபிடிச்ச தரன்…
அந்த நாய் வேற ஜாதி நாய்கூட சேர்ந்துருச்சுன்னா… நாய்ல கூட ஜாதி… “,

“அந்ந பெயிண்டிங் சீன் தான 4 தடவ பாத்துருக்கேன்… எப்ப பாரு ப்பஜி… கொடுத்து வச்சவன்… “,

“எப்பல்லாம் சான்ஸ் கிடைக்குதோ அப்பலாம் கில்மா பண்ணிட்ற… உனக்குப் போரே அடிக்கலயே…”,

“நல்ல காதலுக்கு கில்மா ரொம்ப முக்கியம்… “,

ஓ சாயாதி… ஓ சாயாதி… பாடலில் அரைகுறை ஆடை கொண்ட பொம்மை போல உடையணிந்து வரும் காதலி… இடம் பெறும் காட்சி,

“வசூல் சக்ரவர்த்திகளா… ஊதவே தேவையில்ல… ” ஓ இதான் அவசர உதவிக்கு 100 ஆ… “,

” இவிங்கள மட்டும் ஏன் நிறுத்தி வச்சிட்டு அனுப்ச்சு விடுங்க…” , ” இவனுங்களுக்கு இருக்கறது பணத்திமிரோ பொறுக்கித்தனமோ இல்ல… பவர்… obey the order… Obey the order னு அடிமையா வேல வாங்குறாங்க… “,

” என் அப்பா யாருன்னு தெரியுமா… ஏன் உனக்கு தெரியாதா… “,

“அப்பா அம்மாக்கு அப்பார்ட்மண்ட் கல்ச்சர்ல இண்ட்ரஸ்ட் இல்ல… “,

“டிக்கிய நல்லா டிங்கிரிங் பண்ணிருக்காங்க…”,

“டியூட்டிக்குப் புதுசா… பழைய விஷியங்கள கிளற்ற… மேலதிகாரிங்க என்ன சொல்றாங்களோ அத மட்டும் செய்…”,

“பணக்கார பசங்க யாருக்குமே அப்பா யாருன்னு தெரியாதா… எப்ப பாரு அப்பா யாரு அப்பா யாருன்னு…” ,

“உயிரோட இருக்கறவனுக்கு சேத்தவன் செய்தி ஆகிடாறான்…” ,

” நாடே ஓடுறப்ப நம்ம நடுவுல ஓடனும்… தனியா ஓடனும்னு நினைச்சா காலி… “,

போன்ற வசனங்கள் இடம்பெறும் காட்சிகள் எல்லாம் கை தட்டல் பறக்கிறது. வசனங்களாலயே இந்தப் படம் நிமிர்ந்து நில், தனி ஒருவன் வரிசையில் இடம் பிடிக்கிறது குடும்ப பெண்களின் மனதிலும் இடம் பிடித்துவிடுகிறது.

இரண்டாம் பாதியில் தன் எதிரிகளை அவ்வளவு கொடூரமாக கொல்லும் காட்சிகள் எல்லாம் இங்க நல்லவன் கெட்டவன்னு எவனும் இல்ல… எல்லோருமே வன்மத்த விரும்புறவானுங்களா தான் இருக்கானுங்க… என்பதையே பிரதிபலிக்கிறது.

நடிகை ராஷி கண்ணா வழக்கம் போல டூயட் பாடலுக்கும் எடுபிடி வேலைகளுக்கும் மட்டுமே பயன்படுத்தப்பட்டு இருக்கிறார். அழகம் பெருமாள், ராமதாஸ், சம்பத் போன்றோர் தங்களுக்கு கொடுத்த பணியை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு, எடிட்டிங் இரண்டுமே ரசிகர்களை வெகுவாக கவர்கிறது. கவனம் திரையை விட்டு விலகாத அளவுக்கு நுட்பமாக செய்யப் பட்டிருக்கிறது. இசையமைப்பாளரின் ஓ சாயாதி… ஓ சாயாதி… பாடல் மனதைக் கவர்ந்தாலும், பின்னணி இசை பல இடங்களில் காதை கிழிக்கிறது. ஒரு சில இடங்களில் அமைதியாக விட்டிருக்கலாம்.

A law abiding citizen படத்தின் கருவை வைத்துக் கொண்டு அதற்குள் சலீம், துப்பாக்கி முனை, தெறி போன்ற படங்களை கலந்துகட்டி கொடுத்திருந்தாலும் படம் கட்டாயம் ஒருமுறை பார்க்க கூடிய படமாகவே இருக்கிறது.

Related Articles

சுறா படத்தில் உள்ள சொதப்பல்கள்! ... விஜய் நடித்த படங்களின் கதைகளை கூர்ந்து கவனித்தால் அந்தக் கதைகள் அனைத்துமே சிறப்பான கதைகள் என்பது புரிய வரும். ஆனால் காட்சி ஆக்குவதில் சொதப்பி விடுகிறா...
அப்பான்னா இப்படி இருக்கணும்! – சாத... இந்தி டிவி சீரியல், இந்திப் படங்கள், மணிரத்னம் படங்கள், கமல், சீமானுடன் படங்கள் என்று படிப்படியாக உயர்ந்த நடிகர் மாதவன் இந்திய சினிமா உலகில் தவிர்க்க...
பிரபல யூடியூப் சேனல்கள் வைக்கும் தலைப்பை... கடந்த  நான்கு வருடங்களாக தான் இந்த யூடியூப் உலகம் இவ்வளவு பிரபலமாக இருக்கிறது.  அப்போது முதல் இப்போது வரை ஒரே ஒரு விஷயம் மட்டும் மாறவே இல்லை.  அது என்...
சாகித்திய அகாடமி விருது வெற்றியாளர் கேவி... 1. கேள்வி: கேரளாவுல பாலக்காட்டில் பிறந்திருந்தால் கூட இங்க வந்து ஒரு தமிழாசிரியரா இருக்கீங்க...  தமிழ் மீது அவ்வளவு ஈடுபாடு இருக்கு... தமிழ் சார்ந்த ம...

Be the first to comment on "“நாயா அலஞ்சு நாய கண்டுபிடிச்ச தரன்” – அடங்கமறு படத்தை ஏன் கட்டாயம் பார்க்க வேண்டும்?"

Leave a comment

Your email address will not be published.


*