கமலின் வீடியோவிற்கு அனிதாவின் அண்ணன் அளித்த பதில் என்ன தெரியுமா?

Do you know the answer given by Anita's brother to Kamal Haasan video

வருகின்ற 18ம் தேதி தேர்தல் நடக்க இருக்கிறது. கமல் தனது கட்சி சார்பாக டார்ச்லைட் சின்னத்தையும் வேட்பாளர்கள் பட்டியலையும் அறிவித்தார். அதை தொடர்ந்து பிரச்சார பயணத்தை தொடங்கியவர் சமீபத்தில் பிரச்சார வீடியோ ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். எல்லோரும் பெற்றோருடைய பேச்சைக் கேட்டு யாருக்கு ஓட்டுப் போடவும் என்பதை தீர்மானிக்கிறோம். ஆனால் எந்த மாதிரியான பெற்றோர் சொல்லி நாம் கேட்க வேண்டியுள்ளது என்பதை நாம் உணர வேண்டும். நீட் தேர்வினால் உயிரிழந்த அனிதாவின் பெற்றோர்கள் மாதிரியான பெற்றோர்களிடம் கேட்டு நமது வாக்கை நாம் அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார் கமல். கமலின் இத்தகைய வீடியோவை பார்த்த அனிதாவின் அண்ணன் தனது முகநூல் பக்கத்தில் என்ன பதில் அளித்திருக்கிறார் என்பதை பார்ப்போம்.

” அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய அண்ணன் #கமல் அவர்களின் உண்மையான ரசிகன் நான்…

நடிப்பிற்காக மட்டுமல்ல, திரையிலும் நிஜத்திலும் மரபுகளை  உடைக்க நினைக்கும் கலைஞன்,மற்றவர்கள் என்ன நினைத்தால் என்ன தனக்கு சரியென்று படுவதை செய்யும் துணிச்சல்காரன்..

ரசிகர் மன்றங்களை கலைத்து நற்பணி மன்றங்களாக மடைமாற்றம் செய்தவன்…

அவரைப் பார்த்துதான் 18 முறை இரத்ததானம் செய்துள்ளேன்.. உடல்தானம் செய்துள்ளேன்..

புதிதாக யார் அரசியலுக்கு வந்தாலும் மகிழ்ச்சிதான், அந்த வகையில் அண்ணன் கமல் அவர்களுக்கும் மக்கள் நீதி மய்யத்திற்கும் என் வாழ்த்துகள்…

அண்ணன் #கமல் சொன்னது போல யாருக்கு வாக்களிக்க கூடாது என்பதில் #நானும், எங்கள் குடும்பமும்  தெளிவாகவே இருக்கிறோம்..

#பாசிச_பாஜக கூட்டணிக்கு ஒருபோதும் வாக்களிக்க கூடாது,என்பதில்……

அனிதா இறந்த போது “திருமாவளவன்” இதை சும்மா விடக்கூடாது தாங்கள் கூறிய அதே #திருமாதான்  எங்கள் தொகுதியின் வேட்பாளர்..

மத்திய அரசிடம் நீட் விலக்கு என்பதை நிர்பந்திக்கும் வல்லமை கொண்ட கட்சி,

சமூக நீதி நிலைநாட்டும் கட்சி,

மாநில உரிமைகளை ஒருபோதும் விட்டுக்கொடுக்காத கட்சி,

தற்போதைய சூழலில் தமிழகத்தின் குறைந்தபட்ச பாதுகாப்பை உறுதி செய்யும் ஒரே கட்சி திமுக மட்டுமே..

திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளின் வலியுறுத்தலின் காரணமாக காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் நீட் விலக்கு அறிவிக்கப்பட்டுள்ளது, எங்களுக்கு நம்பிக்கை தருவதாக உள்ளது,

ஆதலால் எங்களின் வாக்கு திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் #தலைவர்_திருமா (தலைவர் என்ற பதத்திற்கு முழு தகுதியுடையவர்) அவர்களுக்கே…

என்றும் #கமல்_ரசிகன் ”

இவ்வாறு தனது முகநூல் பக்கத்தில் பதில் அளித்துள்ளார் அனிதாவின் அண்ணன் அனிதா மணிரத்னம் ச ஆ.

Related Articles

ஆட்டோ எக்ஸ்போ 2018ல் அறிமுகம் செய்யப்பட்... இந்தியாவே உற்று நோக்கும் ஆட்டோ எக்ஸ்போ 2018ல் பல புதிய வகை கார்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த வாகன திருவிழாவுக்கு உலகெங்கிலும் இருந்து பங்கேற்பாள...
பெண் பிள்ளைகளின் பெற்றோர்களுக்கு சில ஆலோ... பெண் பிள்ளைகளின் பெற்றோர் செய்யக் கூடியவை, செய்ய வேண்டாதவைதாய் தந்தையை தவிர வேறு யாரும் குழந்தையை தீண்ட அனுமதிக்க கூடாது. குழந்தைகள் தனியாக இ...
ஹிட்லரிடம் இருந்த நற்பண்புகள் – ஹி... ஒப்பீடு ஹிட்லர்க்கும் மோகன்ராஜா படைத்த நம்ம ஊர் சித்தார்த் அபிமன்யுவுக்கும் பல ஒற்றுமைகள் உள்ளது. அது என்னவென்றால் அதிபுத்திசாலித்தனம், சுயசிந்தனை, வ...
தமிழகத்தில் ஆறு ஆண்டுகளுக்கு பிறகு பேருந... கடந்த 2011ம் ஆண்டு நவம்பர் 18-ல் பேருந்து கட்டணம் கணிசமாக உயர்த்தப்பட்டது. அதையடுத்து ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது பேருந்து கட்டண உயர்வுக்கான அற...

Be the first to comment on "கமலின் வீடியோவிற்கு அனிதாவின் அண்ணன் அளித்த பதில் என்ன தெரியுமா?"

Leave a comment

Your email address will not be published.


*