“சில்லுக்கருப்பட்டி” படம் தமிழ் சினிமாவின் இன்னொரு “சில்லுனு ஒரு காதல்” – சில்லுக்கருப்பட்டி விமர்சனம்!

Sillu Karupatti movie review

நடிகர் சூர்யா தரப்பில் ஹலீதா சமீம் இயக்கி இருக்கும் படம் சில்லுக்கருப்பட்டி. இந்தப் படம் எப்படி இருக்கு என்பதை பார்ப்போம். மொத்தம் நான்கு கதைகள் என்பதால் நான்கு பிரிவுகளாக இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. 

 1. காக்காமுட்டை, சூப்பர் டீலக்ஸ் ராசுக்குட்டி வரிசையில் சில்லுக்கருப்பட்டி மாஞ்சா (மகேஷ்). சிறுகதையில் வரும் ஓவியத்தைப் போல இருக்கும் எலும்பும்தோலுமான மாஞ்சாவிடம் ஷேம்பூ டப்பா கேட்கும் கௌசி அழகு. மாஞ்சாவின் நண்பன் (வெங்கடேஷ்) துறுதுறுப்பாக இருக்கிறான், அவனுடைய கவுண்டர்கள் தியேட்டரில் சிரிப்பலையை வரவைத்தன. 
 2. குப்பைக் கிடங்கை ரசிக்க வைத்துள்ளது கேமரா மற்றும் பின்னணி இசையில் ஒலிக்கும் புல்லாங்குழல் ஓசை. 
 3. குப்பை கிடங்கில் கிடைக்கும் “பிங்க் கலர்” கவர்களை அதில் உள்ள பொருட்களை மாஞ்சா ஆசையோடு பார்க்கும் காட்சிகள் கவிதை. பிங்க் கலர் கவரை வைத்து குப்பை அள்ளும் லாரியில் தொற்றிக்கொண்டு அந்தக் கவர் எங்கிருந்து எந்த வீட்டிலிருந்து வருகிறது என்பதை கண்டுபிடிக்கும் வசனமில்லா காட்சிகள் செம. 
 4. ஆங்கிலத்திலயே பேசும் தெய்வமகள் சாரா பேபி பணக்கார வீட்டுப் பெண்ணாய் கொஞ்சம் வளர்ந்தவளாய் கொள்ளை அழகு. அவளுக்கு 
 5. பூவரசம்பீப்பியை போலவே இந்தப் படத்திலும் சிறுவர்களின் உலகம் மிகவும் உண்மையாக சுவாரஸ்யமாக படமாக்கப்பட்டுள்ளது. 

——————————

 1. காதலும் கடந்துபோகும் படத்திற்குப் பிறகு விக்ரம்வேதாவின் வசனகர்த்தா மணிகண்டன் இந்தப் படத்தில் முகிலனாக மீம் கிரியேட்டராக நன்றாக நடித்துள்ளார். 
 2. கேன்சர் என தெரிந்ததும் முகிலனின் தேன்மிட்டாய் கழண்டுகொள்ளும் இடம் தியேட்டரில் சிரிப்பை வரவைத்தது. 
 3. முகிலனுக்கு கேன்சர் என தெரிந்ததும் ஆபிஸ் நண்பர்கள் கொடுக்கும் ரியாக்சன்கள் காமெடி & க்யூட். 
 4. முகிலன் மற்றும் முகிலனின் ஓலா ரைடை ஷேர் செய்துகொள்ளும் தெத்துப்பெல் பெண் அழகு. அவர் மணிகண்டனை கலாய்க்கும் இடங்கள் செம. குறிப்பாக நாயகி, 

“ஜஸ்ட் கிக் இட் த கேன்சர், ஒரு பால்நாளும் அடிச்சு நெவுத்துங்க…” என்று பேசிய வசனத்திற்கு தியேட்டரே குலுங்கி சிரித்தது. 

 1. ஆப்ரேசன் நடந்துமுடிந்து மயக்கத்தில் இருந்தபோது காக்காவுக்குப் போட்டி என முகிலன் உளறியதை நர்சு நினைவுபடுத்தும் இடம், முகிலனின் நெஞ்சில் நர்சு தடவிக்கொடுக்கும் இடம் அருமை. 
 2. காதலில் விழுந்த நாயகன் தன் தலைமேல் காக்கா ஆய் போனதை நல்ல சகுனம் என சொல்கிறார். என்ன சொல்வதென்று தெரியவில்லை. நாயகனும் நாயகியும் படுக்கையில் படுத்திருக்க சுற்றி பிங்க் கலர் லைட் எரிகிறது. நான்கு காதல் கதைகளுக்கும் பொதுவாக இந்தப் பிங்க் கலர் உள்ளது ரசிக்கத்தக்கது. 

——————————-

 1. பேரனின் பைனாக்குலர் லென்ஸ்களை சரிசெய்து பார்க்கில் பேத்தியோடு (பக்கத்துவீட்டு பெண்ணின் குழந்தையை பேத்தியாக நினைக்கும்) விளையாடும் யசோதா பாட்டியை சைட் அடிக்கிறார் நவநீதன் தாத்தா, மருத்துவமனையில் ஊசி போட்டுக்கொள்ள பயப்படும் அதே பாட்டியை மீண்டும் சைட் அடிக்கிறார், இதுபோன்ற காதல் காட்சிகள் புதுமை மற்றும் அழகு. 
 2. தான் சைட் அடிக்கும் பாட்டியின் பெயர் ” மிஸ் ” யசோதா என தெரிந்ததும் தாத்தா கொடுக்கும் ரியாக்சன் செம. 
 3. டர்ட்டுள் வாக் பற்றிய தகவல்கள் புதுமையாக இருந்தது. இரவு நேரத்தில் டார்ச்லைட் பிடித்துக்கொண்டு ஜில்லென்ற காற்று வீசும் கடற்கரையில் தாத்தா பாட்டி பேசிக்கொள்ளும் வசனங்கள் முதிர்ச்சி. இந்தக் காட்சிகளை பார்க்கும்போது மட்டும் கொஞ்சம் பொறுமை தேவை. (ரசிகர்கள் ஐயோ அம்மா என புலம்புகிறார்கள்) 
 4. “கண்ணாடி பாக்கும் பழக்கமில்லையா, அதுதான் வெக்கப்பட்றிங்க…”, ” நிறைய நாள் வாழனும்னா ஆமை மாதிரி வாழனும்… ஆமைங்களோட வாழ்க்கை ஐம்பது வயசுல தான தொடங்குது…  ” போன்ற வசனங்கள் செம. வாரணம் ஆயிரம், பவர்பாண்டி, கபாலி, காலா, பண்ணையாரும் பத்மினியும் படத்திற்குப் பிறகு முதியோர் காதலை மிக அழகாக இந்தப் படத்தில் காட்டி உள்ளனர். 
 5. கீழே விழுந்து உடல்நலம் குன்றிப்போன யசோதா பாட்டி, வாக்கிங் ஸ்டிக் பிடித்து நடக்கும்போது சிறுவயதில் தள்ளுவண்டியை பிடித்து நடந்ததை நினைவுகூறும் இடமும், நவநீதன் யசோதா பெயரை டாக்கிங் டாமிடம் நவநீதன் பேசும் இடமும் கவிதை. 

———————–

 1. “இவ்வளவு உயரமா இருக்கேன்… நீ சொல்றதுக்கு எல்லாம் குனிஞ்சு நடக்க முடியல… ” என்று சமுத்திரக்கனியும், ” நான் தரைய சுத்தம் பண்ணென், நீங்க நடக்கலாம்… நான் சமைப்பேன், நீங்க சாப்பிடலாம்… நான் குழந்தைய குளிப்பாட்டுவேன், நீங்க தூக்கி கொஞ்சலாம்… இதுக்கெல்லாம் நான் எதிர்பாக்குறது குறைந்தபட்ச மரியாதை தான்… அதுக்கூட கிடைக்கலனா எப்படி… ” என்று சுனைனா பேசும் இடமும் செம. 
 2. அந்த வுமன் ஹார்லிக்ஸ் அங்க இருக்கு… போட்டு குடி எல்லாம் சரியா போயிரும்… என்று சமுத்திரக்கனி பேசும்போது, சமுத்திரக்கனி குடித்துவிட்டு பார்க்கில் தனியாக விளையாடும் காட்சிக்கு, மகனுக்கு ஷூ பிரஸ்சால் தலைவாரிவிடும் காட்சிக்கு தியேட்டரே சிரிக்கிறது. 
 3. நீ விரிச்சு போட்ருக்கற இந்த நாலு தலைமுடிய மத்தவங்க உன் தலைல பாக்குறாங்க… நான் என் டிபன்பாக்ஸ்ல பாக்குறேன்… என்று சமுத்திரக்கனி கத்தும்போதும், இந்தப் பெண்களுக்கு உள்ளத உள்ளபடி சொல்லக்கூடாதுனு யாராவது புரோகிராம் செட் பண்ணாங்களா என்று சமுத்திரக்கனி நக்கலடிக்கும்போதும் தியேட்டரில் இருந்த ஆண்களிடம் சிரிப்பலைகள் விடாமல் கேட்கிறது. 
 4. இன்னிக்காவது துணிய துவைச்சுடுவ இல்ல… என்று குறிப்புணர்த்தி துணிகளுக்கு அடியில் சமுத்திரக்கனி கிப்ட் ஒளித்து வைத்திருக்கும் காட்சி, ஹே அம்மு…  என்று சமுத்திரக்கனி சொல்ல ஸ்பீக்கர் பதிலேதும் பேசாமல் கலாய்க்கும் இடமும் கவிதை. 
 5. சுனைனாவின் உடைகள் கவனிக்க வைத்தன. சமுத்திரக்கனியையும் சுனைனாவையும் இணைத்து வைக்கும் கருவி பற்றிய காட்சிகள் புதுமை.  

————–

கவனிக்க வைத்த வசனங்கள் : 

 1. நாயகி : உங்களுக்குப் பிடிச்ச செக்ஸ் நடிகைகள் பேர் சொல்லுங்க… 

நாயகன் : (கடகடவென அடுக்குகிறார்)

நாயகி : பத்து சென்ட்ரல் மினிஸ்டர் பேர சொல்லுங்க… 

நாயகன் : (திருதிருவென முழிக்கிறார்)

நாயகி : க்யூட்… 

 1. யசோதா : அங்க கிஸ் பண்ணிட்டு இருக்காங்களே அந்த இளைஞர்களுக்கு வயசானவங்க ஒரு பொருட்டே இல்ல… நம்மள கண்டுக்கவே மாட்டாங்க… 

நவநீதன் : ஓ… அப்ப, நீங்களும் நானும் (வயசானவன் வயசானவள) கிஸ் பண்ணிக்கிட்டாவாவது அந்த இளைஞர்கள் வயசானவங்கள பாப்பாங்களா… 

 1. காபி வித் டிக்னிட்டி added
 2. பெரிய கைன்னா… எவ்வளவு பெரிய கைய்யா இருந்தாலும் எல்லாருக்கும் கடைசில அக்குள் இருக்கும்டா… எல்லோரும் மனுசன் தான…
 3. குப்பைல வைரமா மின்னுச்சு உங்க முகம்… அப்றம் நிஜமாலுமே வைரம் இருந்துச்சு… மோதிரத்தோட பத்திரமா இருங்க… 
 4. பொண்ணுங்க ஓகே சொன்னா மட்டும் எங்க இருந்து வருதுடா இந்த மாப்பிளைக் கலை…
 5. கறை நல்லதுதாங்கற மாதிரி சோகமா இருக்கறதும் நல்லதுதான்…
 6. ஜஸ்ட் கிக் இட் த கேன்சர், ஒரு பால்நாளும் அடிச்சு நெவுத்துங்க… 
 7. பெண்களே உங்களுக்கு வந்த காதல் கடிதங்களை, காதல் பரிசுகளை உங்களுடைய முக்கியமான சர்டிபிகேட்களை பாதுகாப்பதுபோல் பாதுகாத்து வையுங்கள்… புருசன் கூட எதாவது சண்டைனா நீங்க எவ்ளோ வொர்த்னு நிரூபிக்க இதுதான் உதவும்…
 8. நாயகி : ஐ லவ் யூ…

நாயகன் : எனக்கு ஒரு பால் (விதை) தான் இருக்கு… 

நாயகி : பரவால… உலகமே ஒரு உருண்டை தான… இங்க ரெண்டு தேவையில்ல… 

 1. கிராமத்துல ஊருக்கு ஒரு காவல்தெய்வம் தான் இருக்கும்… ஆனா நகரத்துல இருக்கற எல்லா ஆட்டோக்காரங்களும் காவல் தெய்வம் தான்… 
 2. மனைவி (கணவனிடம்) : கத்தாதீங்க… கத்துனா குழந்தை எந்திரிச்சுக்கும்… மறுபடியும் தூங்க வைக்க ஒருமணி நேரம் ஆகும்… ஒருமணி நேரம் தொட்டிலாட்டி தூங்க வைக்கற பொறுமை இருந்தா கத்துங்க… 
 3. காதலிகள ரொம்ப கிட்ட வச்சு பாக்கறதவிட கொஞ்சம் தூரத்துல நின்னு மறைஞ்சு ரசிச்சு பாருங்க ரொம்ப அழகா தெரிவாங்க…

———-

தன்னுடைய படைப்பை பார்க்க வந்த ரசிகர்களுக்கு தன்னுடைய படைப்பால் மயிலிறகால் வருடிவிட்டதுபோன்ற அனுபவத்தை தந்துள்ளார் இயக்குனர் ஹலீதா சமீம். 

Related Articles

வித்தியாசமான நோய்களை காட்டிய தமிழ் சினிம... தமிழ் சினிமாவில் நிறைய படங்களில் கேன்சர் என்ற ஒரே நோயை திருப்பி திருப்பி ஆள் மாற்றி காண்பித்திருப்பார்கள். அப்படி இல்லாமல் வித்தியாசமான நோய் உடைய மனித...
“அறம் நீ பழகு! அதுதான் அழகு!”... மெட்ரோ எனும் அருமையான படத்தை தந்த இயக்குனர் ஆனந்த கிருஷ்ணனின் இரண்டாவது படம் "கோடியில் ஒருவன்". ஒரு இயக்குனருக்கு இரண்டாவது படம் தான் மிக முக்கியமான ப...
ஹாலிவுட் படத்தில் ஒல்லிப்பிச்சான்! ̵... இவனெல்லாம் ஒரு ஆளா என்று இளக்காரம் பேசிய மனிதர்களை அடேங்கப்பா என்று வியக்க வைத்துள்ளார் நடிகர் தனுஷ். ஹாலிவுட்டிற்கு சென்ற தமிழ் நடிகர் என்றதும் அவரை ...
ஆபாச நிகழ்ச்சிகளை விட விஷாலின் ” ... தற்போதைய தமிழ் சேனல்களில் ஒளிப்பரப்பாகும் நிகழ்ச்சிகளில் தடைசெய்யப்பட வேண்டிய நிகழ்ச்சிகள் என்று பட்டியலிட்டால் அவற்றில் சன் டிவியின் சன் நாம் ஒருவர் ...

Be the first to comment on "“சில்லுக்கருப்பட்டி” படம் தமிழ் சினிமாவின் இன்னொரு “சில்லுனு ஒரு காதல்” – சில்லுக்கருப்பட்டி விமர்சனம்!"

Leave a comment

Your email address will not be published.


*