ஆபாச செய்தி இணையதளங்கள் எப்படி இயங்குகின்றன? – நடிகைகள் இதை கவனிக்குறார்களா?

How do porn news websites work_

இலக்கியம் குறித்து, விளையாட்டு குறித்து, டெக்னாலஜி குறித்து, ஆன்மீகம், சமையல், ஜோதிடம் குறித்து செய்திகள் வெளியிட தனித்தனி வெப்சைட்டுகள் உள்ளன. ஆனால் இந்த அரைகுறை சினிமா நியூஸ் வெப்சைட்டுகள் செய்யும் அலப்பறை தான் தாங்க முடியாதது. எப்படித்தான் அவர்கள் அவ்வளவு காஜியாக செய்திகள் எழுதி அத்தனை லைக்ஸ் சம்பாதிக்கிறார்களோ? இத்தனைக்கும் அந்த மாதிரியான வெப்சைட்டுகளுக்கு சில மீம் பேஜ்களும் துணையாக நிற்கின்றன. இன்னும் சொல்லப் போனால் சில வெப்சைட் ஓனர்கள் தான் அந்த மாதிரியான மீம் பேஜ்களை நடத்தி வருகிறார்கள் என்பதுதான் உண்மை. சசி குமார், அதுல்யா, சமுத்திரக்கனி, ஜோதிகா, லாரன்ஸ் என்று மக்கள் அதிகம் விரும்பும் பிரபலங்களின் பெயரில் பேஸ்புக் பக்கம் வைத்துக் கொண்டு  அந்தப் பக்கங்களில் இந்த ஆபாச செய்தி இணையதளங்கள் பகிரப்பட்டு வருகின்றன. 

அந்த மாதிரி நியூஸ் எழுதுபவர்களுக்கு நடிகைகளின் போட்டோ தான் மூலதனம். அந்தப் போட்டோவில் நடிகைகளின் உடை கொஞ்சம் விலகி இருந்தாலும் கன்டன்ட் ரெடி ஆகி விடும். “பாவாடையை மடித்துக் கட்டிய ஷிவானி”, “பேண்ட் போட மறந்த சமந்தா”, “முதுகை மட்டும் காமிச்சா எப்படி முன்னாடியும் காமிங்க ராதிகா ஆப்தே”, “பிரா போட மறந்த சாக்ஷி”, “எல்லாத்தயும் காட்டுவிங்களா மீரா மிதுன் – ரசிகர்கள் ஆவல்”, “கயல் ஆனந்தியா இப்படி? ச்சி இவர் செய்த காரியத்தை பாருங்கள்”, “ஸ்ருதி ஹாசனின் தொடையில் இருப்பது என்ன?”, “அனுஷ்காவின் தொப்புளில் இருப்பது என்ன?”, “தமன்னாவுக்கு அது பெருசாயிடுச்சு ரசிகர்கள் உற்சாகம்”, “வயதான நடிகருடன் படுக்கையை பகிர்ந்த தனுஷ் பட நடிகை”, “மூன்றெழுத்து நடிகையுடன் நள்ளிரவில் அனிருத் செய்த காரியத்தை பாருங்கள்”,”சுச்சி லீக்ஸ் மீண்டும் வருமா? ரசிகர்கள் ஆவல்?”, “விஜய் சேதுபதியின் மனைவி என்ன சாதி தெரியுமா?”, இந்த மாதிரி தான் டைட்டில் வைப்பார்கள். 

அந்த மாதிரியான செய்தி இணைய தளங்களுக்கு தவறுதலாகவோ,  அல்லது காஜி உணர்வை அனுபவிப்பதற்காகவோ  வேலைக்கு செல்லும் இளைஞர்கள் இளைஞிகள் இருக்கிறார்கள். அவர்களிடம் அந்த இணையதள நிர்வாகங்கள் எப்படி வேலை வாங்கும்? எப்படி செய்தி எழுத கற்றுக் கொடுக்கும்? என்பதை முதலில் பார்க்கலாம். 

டுவிட்டர், இன்ஸ்டாகிராம்  இந்த ரெண்டு சோஷியல் மீடியாவையும் யூஸ் பண்ணுங்க. இதுல அதிக லைக்ஸ், அதிக கமெண்ட்ஸ், அதிக ட்ரோல்ஸ் இந்த மூன்று விஷயங்களும் எந்த நடிகைகளுக்கு அதிகமாக வருதுனு நல்ல போக்கஸ் பண்ணுங்க. அந்த நடிகைகளை வைத்து சும்மா ஒரு 200 வார்த்தைகளுக்குள்ள சுருக்கமா ஒரு செய்தி எழுதி காட்டுங்க என்பார்கள். அவர்கள் சொல்வதற்கு தகுந்தாற்போல் நல்ல கவர்ச்சியான தலைப்புடன்,  குறைவான வார்த்தைகளுடன் அந்த நடிகை போட்ட ட்விட்டர் லிங்கையும் இன்ஸ்டாகிராம்  லிங்கையும் இணைத்து ஒரு செய்தி எழுதி காட்டுவார்கள் அந்த இளைஞர்கள். 

அப்படி இருந்த போதிலும் அந்த இணையதள நிர்வாகிகள் அந்த செய்திகளைப் படித்துப் பார்த்துவிட்டு கூறும் கருத்துக்கள்:

“நல்லா எழுதிறிங்க… ஆனா இந்த மாதிரி நியூஸ் நல்லா போகாது. ஹீரோயின்கள ஃபோகஸ் பண்ணுங்க… கிளாமர் தான் நம்ம வெப்சைட்டோட மெயின் டார்கெட். முடிஞ்ச அளவுக்கு எவ்வளவு ஆபாசமா எழுத முடியுமோ? அந்த அளவுக்கு இறங்கி எழுதுங்க… இந்த மீரா மிதுன், சாக்ஷி, ஷிவானி, யாசிகா ஆனந்த், பூனம் பஜ்வா இவளுங்கலாம் இன்ஸ்டாகிராம்ல டுவிட்டர்ல போட்டோ போட்டுக்கிட்டே இருப்பாளுங்க… அத வச்சு நியூஸ் மேக் பண்ணுங்க… இந்த மாதிரி நியூஸ் எழுதறதுல மிகப் பிரபலமான ஒரு வெப்சைட் இருக்கு… அத ரெஃப்ரன்ஸா வச்சுக்கிட்டு கன்டன்ட் மேக் பண்ணுங்க…” இப்படி சொல்லித் தான் எழுத சொல்வார்கள்.

இதற்குப் பிறகு அந்த இணையதளத்தில் வேலை செய்பவர்கள் எழுதும் செய்திகள் இந்த வகையில் அமையும். 

“பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபலமானவர் மீரா மிதுன். இவர் எட்டு தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம் போன்ற படங்களில் நடித்துள்ளார். தன் சமூக வலைதள பக்கத்தில் தொடர்ந்து கிக்கான போட்டோக்களை போட்டு ரசிகர்களை சூடாக்குவதில் வல்லவரான மீரா மிதுன் இப்போது தனது பெருத்த தொடையை ரசிகர்களுக்கு விருந்தாக்கி உள்ளார். தொடைய மட்டுமே எப்பவும் காட்டிட்டு இருக்கிங்களே மத்தத எப்ப காட்டுவிங்க என்று ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர்.”  இப்படியாய் அமையும் அந்த செய்தி. 

உண்மையில் இந்த மாதிரி இணையதளங்கள் தான் அதிகம் சம்பாதிக்கின்றன. அதிகம் சம்பாதிக்கின்றன என்றால் என்ன அர்த்தம்? அதிக பார்வைகள் பெறுகிறது என்ற அர்த்தம். அந்த மாதிரி டைட்டில் வைத்தால் எதுக்கும் ஒருதடவ உள்ள போய் பாத்துட்டு வந்துடுவோம் என்று மனம் பேயாய் அலைகிறது. 

நடிகர், நடிகைகளை பற்றி இப்படி ஆபாசமாக எழுதுபவர்களும் தங்களை “ரிப்போர்ட்டர்” என்றே கூறிக் கொள்கின்றனர். இந்த மாதிரி இணையதளங்களில் பெண்களும் நியூஸ் எழுதுபவராக வேலை செய்கிறார்கள் என்பதுதான் அபத்தம். இன்னும் சொல்லப் போனால் ஆண்கள் வைக்கும் டைட்டிலை விட, பெண்கள் வைக்கும் டைட்டில்கள் ரொம்ப ஆபாசமாக இருக்கும். 

இப்படிலாம் எழுதலாமா? என்ற கேள்வி எழுப்பினால் “இத எழுதாம வேற எத எழுதறது… நம்ம எழுதுனங்கறதுக்காக தான் அவளுங்க இப்படி போட்டோ போடுறாளுங்க… நல்ல விதமா எழுதற அளவுக்கு அவளுங்க ஒன்னும் அவ்வளவு வொர்த் இல்ல…” என்ற பதில் வரும். அதாவது குற்ற உணர்வு இல்லாம செய்யற எதுவுமே தப்பு இல்ல என்பதுதான் அந்த மாதிரி இணையதளங்களின் எண்ணம். 

ஷேர்இட், யூசி பிரௌசர், ஒபேரா பிரௌசர் போன்ற தளங்களில் அரைகுறை ஆடையுடன் ஒரு பெண் போட்டோ வந்து நிற்கும். அதெல்லாம் அதிக லாபம் பார்க்கும் செய்திகள். நாம் கேட்காவிட்டாலும் அதிக பார்வைகளைப் பெற்று டாப் லிஸ்டில் அந்த செய்திகள் இருப்பதால் நம் கண்முன் வந்து நிற்கும். நாமளும் உணர்ச்சிகளை அடக்க முடியாமல் அந்த செய்தியை ஓப்பன் பண்ணி அந்த நடிகையை ரசிக்கிறோம். அவரது போட்டோவை ஷூம் பண்ணி தொடையை மார்பகத்தை எல்லாம் உத்துப் பாத்துவிட்டு வெளியே வந்து “ச்சி எப்படித் தான் இந்த மாதிரிலாம் நியூஸ் எழுதறாங்களோ” என்று வேஷம் போடுகிறோம். ஆனால் அந்த செய்திகள் தான் மீண்டும் மீண்டும் உலாவி ஆயிரக்கணக்கான பார்வைகளை அசால்ட்டாக அள்ளி நல்ல லாபத்தை தருகின்றன வெப்சைட் ஓனர்களுக்கு. ஆனால் இந்த மாதிரி வெப்சைட்களில் எழுதுபவர்கள் தான் பாவப்பட்டவர்கள். என்ன தொழில் செய்யுறோம் என்பதை வெளிப்படையாக சொல்ல முடியாத சூழல் அவர்களுக்கு. சிலர் எந்த கூச்சமும் இல்லாமல் ஆமா நான் இந்த மாதிரி வெப்சைட்டில் தான் வேலை செய்கிறேன் என்பதையும் வெளிப்படையாக சொல்லிக் கொண்டு தான் திரிகிறார்கள். 

இந்த மாதிரி செய்திகள் எழுதுபவர்கள் செய்திகளை தேடி ரசித்து படிப்பவர்கள் ஒரு பக்கம் இருக்கட்டும். இவ்வளவு லைக்ஸ்களை இவ்வளவு பார்வைகளை பெற்று வைரலாக இருக்கும் இந்த ஆபாச செய்திகளை சம்பந்தப்பட்ட நடிகைகள், நடிகைகளின் உறவினர்கள், மேனேஜர்கள் போன்றவர்கள் படிக்காமல் இருப்பார்களா? 

நிச்சயம் அவர்களுக்கு தெரிந்திருக்கும். என்னென்ன இணையதளங்கள் தங்களைப் பற்றி எப்படி எப்படியெல்லாம் செய்தி எழுதுகிறார்கள் என்பதை பற்றி தினமும் அவர்கள் ஒரு நபர்களை அதற்கென்று தனியாக அமைத்து அல்லது அவர்களாகவே தினமும் ஆராய்ந்து பார்த்து அந்த இணையதளச் செய்திகள் எல்லாத்தையும் படித்துக்கொண்டும் சேகரித்துக் கொண்டும் தான் இருப்பார்கள். அதில் ஒரு சில நடிகைகள் ஆவேசப்பட்டு இந்த மாதிரியான இணையதளங்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏதாவது செய்யமுடியுமா என்று தங்களுக்குத் தெரிந்த அதிகாரிகள் போன்றவர்களை எல்லாம் அழைத்துப் பேசி இந்த இணைய தளங்கள் மீது நடவடிக்கை எடுக்க முயல்கிறார்கள். ஆனால் அது எந்த விதத்திலும் அவர்களுக்கு பயனளிக்கக் கூடியதாக இல்லை. திரும்பவும் வேறு ஒரு இணையதளம் மூலம் அந்த நடிகையைப் பற்றி இன்னும் அவதூறான செய்திகள் பரவ ஆரம்பிக்கின்றன. 

வேறு சில நடிகைகள் இந்த மாதிரியான செய்திகள் பரவுவதை ஒரு விதத்தில் ஊக்குவித்துக் கொண்டு இருக்கின்றனர்.  நெடுஞ்சாலை படத்தில் “நம்மள பத்தி நல்ல விதமா பேசுறாங்களா, கெட்ட விதமா பேசுறாங்களா… எப்படி பேசுறாங்கங்கறது முக்கியம் இல்ல… நம்மள பத்தி நாலு பேர் பேசறாங்க… நம்மளை இந்த உலகம் கவனிக்கிறது அப்படிங்கறதுதான் முக்கியம்…” என்ற வசனம் வரும்.  இந்த மாதிரியான வசனத்திற்கு ஏற்றது போலத்தான் நடிகைகளின் மனநிலை. எந்த செலவும் இல்லாமல் ஏதோ ஒரு விதத்தில் நமக்கு பப்ளிசிட்டி கிடைத்துக் கொண்டிருக்கிறது என்று அவர்கள் அந்த செய்திகளை கண்டும் காணாததும் போல் இருப்பார்கள். அந்த மாதிரி நடிகைகளுக்கு எவ்வளவு பண செல்வாக்கும், அதிகார செல்வாக்கும் இருக்கும். அவர்கள் நினைத்தால் அந்த இணையதளம் நடத்துபவர்கள் இருக்கும் இடத்தை நேரடியாக தேடிச்சென்று விஷால் போல அதிரடி காட்டலாம். ஆனால் அவர்கள் அதை செய்ய மாட்டார்கள். ஏனென்றால் இந்த மாதிரியான இணையதளங்களுக்கும் சினிமாவில் இருக்கும் பெரும் புள்ளிகளுக்கும் சினிமா நடிகைகளுக்குமே கூட ஒரு நெருங்கிய தொடர்பு இருக்கிறது.  சினிமா உலகில் இருக்கும் எல்லா நடிகைகளை நடிகர்களைப் பற்றியும் நன்கு தெரிந்த அவர்களின் அகவாழ்க்கை மற்றும் வெளி வாழ்க்கை இவை அனைத்தையும் அரசல்புரசலாக கேட்டுக்கொண்டு செய்தி எழுதும் பத்திரிகையாளர்கள் இந்த மாதிரி இணையதளங்களை நடத்தி வருகிறார்கள். அவர்கள் வெளியிடும் ஒரு சில செய்திகளில் நடிகர் நடிகைகளின் உண்மையான முகம் வெளிப்பட்டுள்ளதால் யாராலும் அந்த மாதிரியான இணைய தளங்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாமல் போய்விடுகிறது. 

ஷங்கரின் 2.O படத்தில் வரும், “கடவுளும் அரசாங்கமும் ஒன்னு… இருக்குன்னு நினைச்சா இருக்கு…  இல்லைன்னு நினைச்சா இல்லை…” என்பது போலதான் இந்த இணையதளங்கள். அவர்களாகவே திருந்தி நல்ல விதமாகவே செய்திகள் எழுதத் தொடங்கினால் தான் உண்டு. ஆனால் அப்படி அவர்கள் நல்ல செய்திகள், குறிப்பாக நடிகைகளை பற்றி நல்ல விதமாக எழுதினால் “இவளுங்கள பத்தி எல்லாம் நல்ல விதமா எழுதுறானுங்களே” என்று அந்த இணையதளங்களுக்கு கெட்ட பெயர்தான் கிடைக்குமே தவிர வருமானம் எதுவும் கிடைக்காது. 

இப்போதுகூட பாருங்கள் உங்களுடைய போனில் உள்ள  ஏதாவது ஒரு  முகநூல் பக்கத்தில், நீங்கள் விரும்பாவிட்டாலும் இந்த மாதிரியான செய்திகள் உலாவிக் கொண்டிருக்கும். “இதுவரை இல்லாத மோசமான கவர்ச்சி உடையில் பிக் பாஸ் ரித்விகா! –  விளாசம் ரசிகர்கள்!”

“அமெரிக்காவில் இந்த வயசிலும் ஆன்ட்டி வேற லெவல்! –  கஸ்தூரி-செம ஹாட் போஸ்! –  இரட்டை அர்த்தத்தில் ஜொல்லுடன் வர்ணிக்கும் ரசிகர்கள்!” 

Related Articles

“சைக்கோ பெண்களுக்கான படம்!”... கடந்த ஜனவரி 24ம் தேதியன்று ரிலீசான மிஷ்கினின் சைக்கோ படம் தியேட்டரில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அந்தப் படத்திற்கான நேர்மறை எதிர்மறை விமர்சனங்க...
தமிழ் ராக்கர்ஸ்க்கு சவால்விட்ட சன் பிக்ச... தீபாவளியை முன்னிட்டு சர்கார் திரைப்படம் உலகம் முழுவதும் கிட்டத்தட்ட ஆயிரத்து ஐநூறு தியேட்டர்களில் ரிலீசாக இருக்கிறது. அதை தொடர்ந்து இந்தப் படத்தை இணைய...
நுங்கம்பாக்கம் சுவாதி படுகொலையில் நடந்தத... க்ரைம் எழுத்தாளர் ராஜேஷ் குமாரின் நாவலை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம். அக்னிதேவி font style ஐ வித்தியாசமாக காட்ட தொடங்கியவர்கள் படம் முழுக்க வித...
பூனை குறுக்க போனா என்ன? போய் பொழப்ப பாரு... வீட்டை விட்டுக் கிளம்பியதிலிருந்து, அன்றாட வேலைகள் அனைத்தையும் செய்து முடித்துவிட்டு நீங்கள் வீடு வந்து சேரும் வரை, உங்களைச் சுற்றி எத்தனை நம்பிக்கைகள...

Be the first to comment on "ஆபாச செய்தி இணையதளங்கள் எப்படி இயங்குகின்றன? – நடிகைகள் இதை கவனிக்குறார்களா?"

Leave a comment

Your email address will not be published.


*