குலேபகாவலி – சினிமா விமர்சனம்

தயாரிப்பு: கே.ஜே.ராஜேஷ் ஸ்டூடியோஸ்
இயக்கம்: கல்யாண்
இசை: விவேக் – மெர்வின்
ஒளிப்பதிவு: ஆர்.எஸ். ஆனந்தகுமார்
நடிப்பு: ரேவதி, பிரபு தேவா, ஹன்சிகா மோத்வானி

அறிமுகக்காட்சியில், “மாயமான விமானத்தில் என் பையனும் இருந்தான்… உன்னைய பார்க்க என் பையன் மாதிரியே இருக்கு…” என்று பீலா விட்டு சத்யனை ஏமாத்தி பிஎம்டபிள்யூ காரை திருடிச்செல்கிறார் ரேவதி.  கையில் பாட்டிலை வைத்தபடி சிலை திருடனாக எண்ட்ரி கொடுக்கிறார் படத்தின் நாயகன் பிரபுதேவா. இவர்களின் எண்ட்ரியை போலத்தான் மற்ற நடிகர்களின் எண்ட்ரியும். 1947ம் ஆண்டு மெட்ராஸ்- பிரிட்டிஷ் போர்ட்டில் வெள்ளைக்காரனிடமிருந்து கைப்பற்றிய வைரத்தை பெட்டியில் போட்டு ஒருவர் குலேபகாவலி கோவிலில் குழி தோண்டி புதைத்து வைக்கிறார். 2018ல்  அந்த புதையலை எடுத்து வர, ஆனந்தராஜ் குரூப் பிரபுதேவா, ஹன்சிகா, ராம்தாஸ் மூவரையும்  ஏவுகிறது.இவர்களும் நிர்பந்தத்தின் பெயரில் அந்த ஊருக்குச்செல்ல,  வழியில் நூதன கார் திருடி ரேவதி இவர்களுடன் தொத்திக்கொள்கிறார். ஒருபக்கம் சிலை திருடன் பிரபு தேவாவை துரத்துகிறது. மன்சூர் அலிகான், யோகிபாபு கேங். இன்னொரு பக்கம் கார் திருடி ரேவதியை துரத்துகிறது அவரிடம் ஏமாந்து காரை பறிகொடுத்த மொட்டை ராஜேந்திரன், சத்யன் கேங். படம் முழுக்க இந்த பயணம் தான். இடையிடையே சத்யனை வளைத்து வளைத்து ஏமாற்றும் காட்சிகள், ரேவதியிடம் காரை பறிகொடுத்தவர்கள், பிரபுதேவா ஹன்சிகா காதல் காட்சிகள் வந்துசெல்கிறது. இறுதியில் அவர்கள் தேடிச்சென்ற புதையல் அவர்களுக்கு கிடைத்ததா? என்பது தான் படம்.

பெண்ணை நிர்வாணமாக்கி ஊர் சுற்றி வரவைக்கும் பூஜை, அனாதை ஆசிரமம்,
அம்மா சென்டிமென்ட், மாயமான விமானம் போன்ற சென்சிட்டாவ்வான விசியங்களை சகட்டுமேனிக்கு காமெடி ஆக்கியுள்ளார்கள். மக்களை சிரிக்க வைக்க எவ்வளவோ வழி இருக்கும்போது அனாதை ஆசிரமத்தை வைத்துதான் காமெடி செய்ய வேண்டுமா?

படம் முடிந்து வெளியே வருகையில்,

” இந்த பிரபுதேவா எப்படி இந்த வயசுலயும் இப்படி டான்ஸ் ஆடுறான்… நான் சின்னப்பிள்ளையா இருக்கும்போது எப்படி இருந்தானோ அப்படியா இருக்கான்… ” என்று சிலர் பேச கேட்க நேரிட்டது. அது உண்மை தான். காதலன், காதலா காதலா போன்ற  படங்களில் பார்த்த பிரபுதேவாவின் துறுதுறு குணம் இன்னும் அப்படியே இருக்கிறது. படத்தில் அறிமுகப்பாடல் மட்டும் ஓகே.

ரேவதியின் நடிப்பு நன்றாக இருந்தாலும் ஆஞ்சிநேயா பட பிஸ்கட் திருடி கோவை சரளா ரேஞ்சுக்கு திருட்டுத்தன கேரக்டர். அவரை ஏனோ அந்த கேரக்டரில் பொருத்தி பார்க்க முடியவில்லை. சொப்பண சுந்தரி ஆக்கி வைத்திருக்கிறார்கள்.

ஹன்சிகா மோத்வானி படமுழுக்க படுகவர்ச்சி. அதனை,

” இந்த பொண்ணுக்கு நிர்வாண பூஜை செய்யப்போறோம் ” என்று ஒருவர் சொல்ல, ” அவ ஆல்ரெடி நிர்வாணமா தாண்டா இருக்கா…” என்று ஆனந்தராஜ் உடனே கலாய்க்கிறார். அதற்கு தியேட்டரில் இருக்கும் தாய்க்குலமும்  விழுந்து விழுந்து சிரிக்கிறது. உஸ்ஸ்ஸ்!

மொட்டை ராஜேந்திரனின் அம்மா சென்டிமென்ட், மன்சூர் அலிகானின் ” நான் பாஞ்சு வயசுல தம்பிய போட்டவன், இருபது வயசுல அப்பன போட்டவன், முப்பது வயசுல டாவ்வ போட்டவன், நாற்பது வயசுல பாஸ்ஸ போட்டவன்… ” என்ற ரிப்பீட்டட் வசனம், ராமதாஸ்ஸின் புலம்பல், சத்யனின் ஏமாளித்தனம்,   போன்றவற்றிற்கு தியேட்டரில் ஆங்காங்கே சிலர் சிரித்தனர்.   யோகிபாபுவின் ஒன்லைன் காமெடிகள், கார்ஓட்டும் ஸ்டைல், இடைவேளை விட்ட ஸ்டைல் போன்றவற்றிற்கு ஒட்டுமொத்த தியேட்டருமே குலுங்கி சிரித்தது.

குடும்பத்துடன் பார்த்து சிரிக்கக்கூடிய படம் தர நினைத்திருக்கிறது படக்குழு. அதை முழுமையாக செய்யவில்லை.

எம்ஜிஆர் படத்தின் டைட்டிலை உபயோகித்திருக்கிறார்கள். பயணம் சார்ந்ததால் இந்தப்படத்திற்கு குலேபகாவலி என்று டைட்டில் வைத்திருக்கிறார்கள். வேறு பெயர் கிடைக்கவில்லையா??? அறம் பட தயாரிப்பாளரின் படமா என்ற ரீதியில் உள்ளது. இருந்தாலும் ரூ. 6 கோடி செலவில் எடுக்கப்பட்ட இந்தப்படம் ரிலீசுக்கு முன்பே சாட்டிலைட் ரைட்ஸ் மற்றும் மற்ற மொழி ரைட்ஸ் என்று போட்ட பணத்தை எடுத்துவிட்டது. இனி வருவதெல்லாம் லாபம் தான்.

Related Articles

அவசியம் கடைபிடிக்க வேண்டிய ஆரோக்கிய குற... பசிக்கும்போது மட்டும் சாப்பிடுங்கள். தாகமெடுத்தால் தண்ணீர்  குடியுங்கள். குளிர் பானங்களை தவிர்த்து விடுங்கள். பசிக்கும் போது பயமில்...
இயக்குனர் வெற்றிமாறன் பற்றிய 25 தகவல்கள்... இயக்குனர் வெற்றிமாறனின் அப்பா ஒரு வெட்னரி சயின்டிஸ்ட். அம்மா நாவலாசிரியர். படித்தது ஆங்கில இலக்கியம். லயோலா கல்லூரியில் படித்தார். தமிழ் இலக்கி...
பர்சு பத்திரம் மக்களே! – அவனே ஸ்ரீ... சர்டிபிகேட் U/A , காலம் : 172.53 நிமிடங்கள் தயாரிப்பு: புஷ்கர் பிலிம்ஸ் & வெளியீடு : Screen scene entertainment  ராவணன் மற்றும் அனுமன...
மூணாறு – தென்னகத்தின் காஷ்மீர்... மூணாறு, கேரள மாநிலத்தில் உள்ள அழகான மலைவாசஸ்தலம். கடல் மட்டத்திலிருந்து 1600 மீட்டர் உயரத்தில் இருக்கும் இடம். மலையேறுதலுக்கும ஒரு அற்புதமான படம். இயற...

Be the first to comment on "குலேபகாவலி – சினிமா விமர்சனம்"

Leave a comment

Your email address will not be published.


*