ஆபாசம் இல்லாத இடமே இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் எல்லா இடங்களிலும் ஆபாசம் நிரம்பி வழிகிறது. எதேதோ ஆப்கள் வந்து செல்போன் பைத்தியங்களை மானபங்கம் செய்து கொண்டிருக்கிறது. ஆக ஆபாசம் என்பதை இந்த சமூகம் சிறிது சிறிதாக சகஜப்படுத்திக்கொண்டு வருவதை நம் நேரடியாக உணர முடிகிறது. அவ்வகையில் 2018ம் ஆண்டில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற படங்களில் மிக முக்கியமான படம் இருட்டு அறையில் முரட்டுக் குத்து. பரபரப்பான விவாதத்தை உண்டாக்கியது என்பது குறிப்பிடத் தக்கது.
இந்தப் பட்டியலில் இருப்பது இருட்டு அறையில் முரட்டுக் குத்து, இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு, பியார் பிரேம காதல் என்று மூன்றே மூன்று படங்கள் என்றாலும் மூன்றும் முக்கிய ஆளுமைகளின் படம் என்பது குறிப்பிடத் தக்கது.
இருட்டு அறையில் முரட்டுக்குத்து :
நவரச நாயகன் கார்த்திக்கின் மகன் கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான படம். முக்கியமான தயாரிப்பாளரான ஞானவேல் ராஜா தயாரிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. பெரிய நடிகர்களின் படங்களுக்கு கிடைப்பது போன்ற மாஸ் ஓப்பனிங் இந்தப் படத்திற்கு கிடைத்தது என்பது குறிப்பிடத் தக்கது. பள்ளி, கல்லூரி மாணவர்களின் கூட்டம் நிரம்பி வழிந்தது. ஒருபக்கம் இது ஒரு கேவலமான படம் என்று தமிழ் சினிமா பத்திரிக்கையாளர் மற்றும் விமர்சகர் பிஸ்மி தரப்பு கூற, கேவலமான படம் என்றால் மக்கள் ஏன் அதை வரவேற்கிறார்கள்? எதை கேட்கிறார்களோ அதை கொடுப்பதில் என்ன தப்பு? என்று பதில் கேள்வி எழுப்பியது தயாரிப்பாளர் தனஞ்செயன் தரப்பு. இந்தப் படத்தினால் பேரன்பு இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் மிஷ்கினுக்கும் கேஎஸ் ரவிக்குமாருக்கும் இடையில் சலசலப்பு உண்டானது என்பதும் குறிப்பிடத் தக்கது.
பியேர் பிரேம் காதல் :
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் பிக்பாஸ் புகழ் ரைசா மற்றும் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான படம் இது. காதல் என்ற பெயரில் ஆபாசத்தை அள்ளித் தெளித்த படம். காமம் இல்லாத காதல் இல்லை என்பது தான் படத்தின் மையம் என்றாலும் முகச் சுளிப்பை உண்டாக்க கூடிய வகையில் சில காட்சிகள் இருந்தன என்பது குறிப்பிடத் தக்கது. இந்தப் படம் இளசுகளை வெகுவாக கவர்ந்து நல்ல வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத் தக்கது.
இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு :
நல்ல நடிகர் என்று பெயர் பெற்றிருந்த விமல் சாக்கடையில் விழுந்த பன்றி கணக்காக நடித்து முடித்த படம் தான் இது. வ்வா… என்று நாயகனை இழுத்துப் போட்டு தொடர்ந்து மேட்டர் செய்யும் நாயகியின் ஸ்னீக்பீக் அதிக கவனம் பெற்றது. இந்தப் படத்திற்கும் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் கும்பலாகச் சென்றார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.
ஆபாசத்தை அள்ளித் தெளித்த படங்கள் வெற்றிப் பெறுகையில் ஆபாசம் மிகக் கொடியது என்று சொன்ன X வீடியோஸ் படம் ஏனோ யாராலும் கண்டுகொள்ளப்படாமலே போய்விட்டது.
Be the first to comment on "2018 ம் ஆண்டில் களம் இறங்கி வெற்றி பெற்ற ஆபாச படங்கள்!"