நம் நாட்டில் நடைபெறும் மணமுறிவுகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது இதற்கு அடிப்படையில் என்னதான் காரணம்? ஆண்களா பெண்களா யாருக்கு அதிக சகிப்புத் தன்மை இருக்கிறது, யாருக்கு சகிப்புத்தன்மை இல்லை?  

சகிப்புத்தன்மை ஏன் கண்டிப்பாகத் தேவைப்படுகிறது என்ற கேள்விகள் எழுந்து கொண்டே செல்கிறது. 

இப்படி மணமுறிவு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போவதற்கு காரணங்களாக சொல்லப்படுபவை: 

  1. உறவினர்கள்
  2. ஈகோ மற்றும் கெட்டப் பழக்கம்
  3. மனைவியிடம் ஆம்பள திமிரு காட்டுதல், சொந்த அம்மா அக்காக்களிடம் அடிபணிந்து போதல்
  4. சந்தேகம்
  5. அனுசரித்து போகாமல் இருப்பது, பிரச்சினைகளை பேசி தீர்க்க முயலாமல் இருப்பது
  6. செக்ஸ் 
  7. நிலையற்ற வருமானம், வேலையின்மை

ஒரு தம்பதியினருக்குள் மனக்கசப்புகள் வருவதற்கு உறவினர்கள் காரணமாக இருக்கின்றன என்று கணவனின் உறவினர்கள் தன் இல்லத்திற்கு வரும்போது மனைவி முகம் சுளிக்கிறாள் கோபித்துக் கொள்கிறாள் மனம் குமறுகிறாள்.  அதேபோல மனைவியின் உறவினர்கள் வீட்டிற்கு வந்தால் கணவர்கள் முகம் சுளிக்கிறார்கள்,  கடுகடுவென நடந்து கொள்கிறார்கள். 

ஆனால் இந்த மாதிரி உறவுக்காரர்களால் ஏற்படும் சண்டைகளால் மணமுறிவு ஏற்படுவது இல்லை. மாமியா நங்கையா கொழுந்தியா போன்ற உறவினர்களுடன் ஒரு பெண்ணுக்கு ஏற்படும் மனக் கசப்புகள் ரொம்ப நாளைக்கு நீடிப்பதில்லை. அப்படியே இருந்தாலும் அவர்கள் பேச்சுவார்த்தையை நிறுத்திக் கொள்கிறார்களே தவிர முற்றிலுமாக உறவை முறித்துக் கொள்வது இல்லை.  இன்னும் சில வீடுகளில் காலையில் மாமியாரும் மருமகளும் மாற்றி மாற்றி சண்டை போட்டுக்கொள்வார்கள். பிறகு மாலையில் இருவரும் ஒரே சோபாவில் உட்கார்ந்து ஒரே சீரியலை பார்த்துக் கொண்டிருப்பார்கள். 

மணமுறிவு ஏற்படுவதற்கு முழுக்க முழுக்க காரணம் கணவன் மனைவி இருவருக்கும் உள்ள பிரச்சனைகள் மட்டுமே. இந்த மண முறிவுக்கு பெரும்பாலும் சுற்றியிருக்கும் உறவினர்கள் காரணமாக அமைவதில்லை.  

கணவன் மனைவிக்குள் இருக்கும் ஈகோ, அவர்களுக்குள் இருக்கும் சந்தேக புத்தி  போன்றவை மிக முக்கியமான காரணமாக இருக்கிறது. குறிப்பாக இருவரில் ஒருத்தருக்கு இருக்கும் கெட்ட பழக்கம் அல்லது இருவருக்குமே இருக்கும் கெட்ட பழக்கம், சில தீய மனிதர்களுடனான நெருங்கிய பழக்கம் அவர்களின் மண முறிவுக்கு முக்கிய காரணமாக அமைந்து விடுகிறது. 

இந்த மணமுறிவு விஷயத்தில் இருவரையும் தனியாக அழைத்துக் கேட்டால் இருவரும் ஒருவர் மாற்றி ஒருவர் பழி சொல்வார்கள்.  குறிப்பாக பெண்களை விசாரித்தாள் பெண்கள் பெரும்பாலும் தன்மீது இருக்கும்  குற்றங்களை வெளியே சொல்லாமல் ஆண்கள் மீது பழி சுமத்துவார்கள். அது ஓரளவுக்கு உண்மையும் கூட ஆண்கள் ஒன்றும் அவ்வளவு ஒழுக்கமானவர்கள் கிடையாது. 

நீ இல்லனா என்ன எனக்கு பொண்ணா கிடைக்காது ஆம்பள எனக்கு நூறு பொண்ணு கிடைப்பா என்று ஆண் திமிருடன் முதலில் விவாகரத்துக்கு வழக்கு தொடுப்பது ஆண்கள்தான். ஆண்கள் டைவர்ஸ் வழக்கு தொடுப்பதற்கு முக்கிய காரணமாக இருப்பது பெண்களின் நச்சரிப்பு தான். எப்ப பாரு ஏதோ ஒன்று தொண தொணவென்று பேசிக்கொண்டே இருக்கிறார்கள்.  வேலைக் காட்டிலும் மன உளைச்சலோடு அலைந்து விட்டு வீட்டிற்கு உள்ளேயும் ஆண்கள் வீட்டில் திட்டு வாங்கி சமாளிக்க முடியாமல் தடுமாறுகிறார்கள்.  உலகிலேயே மிகக் குறுகிய காலத்தில் விவாகரத்து செய்தது என்ற சாதனை கலிபோர்னியா நாட்டிற்கு உள்ளது. கலிபோர்னியா நாட்டில் உள்ள ஒரு பெண் திருமணமான 36 மணி நேரங்களுக்குள் விவாகரத்து வழக்கு தொடர்ந்திருக்கிறார். அந்த சாதனையை நம்முடைய தமிழக பெண்ணொருவர் முறியடித்திருக்கிறார்.  இத்தனைக்கும் அந்தப் பெரிய தன்னுடைய கணவனை காதலித்து தேர்ந்தெடுத்தால் காதலித்து தேர்ந்தெடுத்த பிறகு திருமண நாளன்று வெறும் ஆறு மணி நேரத்திற்குள் அந்த ஆணை விவாகரத்து செய்து இருக்கிறாள். பல வருடங்களாக காதலர்களாக இருந்தவர்கள் கூட திருமண மேடையில் வந்து பிரிந்து சென்ற நிஜக் கதை கூட இருக்கிறது. 

இப்படி நாளுக்கு நாள் விவாகரத்து அதிகரித்துக் கொண்டே போவதை அழகு குட்டிச்செல்லம், ஆண்டவன் கட்டளை,  ஓ மை கடவுளே போன்ற படங்களில் கொஞ்சம் புள்ளி விவரத்துடன் உயரிய சிந்தனையுடன் பேசியிருப்பார்கள். 

அந்தப் பெண் வெறும் ஆறு மணி நேரத்திற்குள் விவாகரத்து செய்கிறார், மணமேடைக்கு வந்து பிரிந்து செல்கிறார் என்றால் அதற்கு என்ன காரணம். அந்த காதலன் சரியில்லை என்று தான் காரணம். வேறு என்னவாக இருக்க முடியும்? அந்த காதலன் இவ்வளவு நாள் காதலியை இளவரசி மானே தேனே என்று கெஞ்சி கொஞ்சிவிட்டு திருமண மேடைக்கு வந்ததும் தன்னுடைய அம்மாவை அக்காவை அரசிகளாகப் பார்க்கிறான், காதலியை அடிமையாகப் பார்க்கிறான். அப்படிப்பட்ட ஆண் நான் மூன்று முடிச்சு போட்டு விட்டேன் என்ற காரணத்திற்காக தன்னுடைய மனைவியை அவன் ஒரு அடிமை போல நடத்துகிறான்.  அக்காகளிடம் அம்மாவிடம் காட்டும் அன்பை அவனால் மனைவியிடம் காட்ட முடியவில்லை. அப்படி இருக்கும்போது அவன் என்ன ஆம்பளை?

முறையாக வேலைக்குப் போய் கைநிறைய சம்பாதித்து முறையாக வீட்டுக்கு பொருட்கள் வாங்கித் தரும் கணவர்களை விட்டு விடுவோம். அவர்கள் மீது எந்த குறையும் பெண்கள் சுமத்துவதில்லை. ஆனால் சரியாக வேலைக்குப் போகாமல் வீட்டுப் பெண்களிடம் பணம் வாங்கி குடித்துவிட்டு  திரும்ப வந்து அதே வீட்டு பெண்களை அடிப்பது என்ன நியாயம் இந்த ஆண்களுக்கு குடிப்பதற்கு என்னென்ன காரணங்கள் தேவைப்படுகிறது? திருமணமானால் குடிக்கிறார்கள் மனைவி கர்ப்பமாக இருந்தால் குடிக்கிறார்கள் குழந்தை பிறந்தால் குடிக்கிறார்கள் எழவு விழுந்தால் குடிக்கிறார்கள்  வேலை கிடைத்தால் குடிக்கிறார்கள் வேலை இல்லை என்றாலும் குடிக்கிறார்கள் இப்படி என்ன நடந்தாலும் குடிக்கிறார்கள். பெண்கள் அப்படிப்பட்ட ஆண்களை திருத்துவதற்காக எவ்வளவு சிரமங்கள் எடுக்கிறார்கள், எத்தனை முறை மதுக்கடைகள் முன்பு போராட்டம் நடத்தி இருக்கிறார்கள், எத்தனை முறை மதுக்கடைகளை அடித்து நொறுக்குகிறார்கள் அப்படி இருந்தும் இந்த ஆண்கள் திருந்துகிறார்களா?

நாய் பூனை போன்ற விலங்குகள் கூட அதன் மீது வரம்பு மீறி அதிகாரம் செலுத்துபவர்களிடம் எதிர்த்து சீறிப் பாய்கிறது. ஆனால் குடும்பப் பெண்கள் அப்படி நடந்து கொள்ள முடிகிறதா எத்தனை கஷ்டங்களை மனதுக்குள் போட்டு பூட்டி வைத்துக் கொண்டு சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அது எல்லாம் ஒட்டுமொத்தமாக ஒரு நாள் போட்டு உடைத்தால் தாங்குமா என்று ஆண் சமூகம்? சிரமத்தில் வாழும் இங்கு லட்சக்கணக்கான பெண்கள் இருக்கிறார்கள் அனைவரும் ஒன்று திரண்டு வந்தால் தமிழகமே பற்றிக் கொண்டு எரியும் என்பது மட்டும் உண்மை. 

ஆண்கள் தங்களுடைய தாய்மார்களை அதிக அளவு கவனிக்கிறார்கள், மனைவிகளை கவனிப்பதில்லை என்று ஒரு குற்றச்சாட்டு தொடர்ந்து இருக்கிறது. அப்படி குற்றச்சாட்டு வைக்கும் பெண்களிடம் ஒரு கேள்வி. உங்களுக்கு பிறக்கும் மகன்களிடம் நீங்கள் என்ன சொல்லி வளர்ப்பீர்கள் அதை தெளிவாக சொல்லுங்கள் என்று கேள்வி எழுப்பினால் பெண்கள் அத்தனை பேரும் மழுப்புகிறார்கள்.

பெண்களைப் பொருத்தவரை ஆண்கள் தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும் என்று மனதிற்குள்  வறட்டு கௌரவத்தை பதிந்து கொள்கின்றனர். அந்த ஆண் தன்னுடைய கணவனாக இருந்தாலும் சரி தன்னுடைய மகனாக இருந்தாலும் சரி.  மொத்தத்தில் ஒரு ஆண் அவர்களுடைய கைப்பிடியில் இருக்க வேண்டும். 

அதேபோல மண முறிவுக்கு மிக முக்கிய காரணமாக இருப்பது பணம் என்கிற ஒரு விஷயம். கணவன் மனைவி இருவரில் யார் அதிகம் சம்பாதிக்கிறார்கள் என்று ஒரு வாதம் எப்போதாவது வந்து விடுகிறது, அந்த வாதம் வந்த பிறகு அவர்கள் வீட்டில் நடக்கும் அத்தனையும் சச்சரவுகள் தான்.  இதைவிட முக்கியமான காரணம் ஒன்று இருக்கிறது பொய் சொல்லி திருமணம் செய்து கொள்வது. இவ்வளவு படித்திருக்கிறார் இவ்வளவு பணம் சம்பாதிக்கிறார் என்று மாப்பிள்ளை வீடும் பெண்கள் வீடும் மாறி மாறி பொய் சொல்வது கூட ஒரு வகையில் மண முறிவுக்கு காரணமாக அமைந்துவிடுகிறது. 

கர்ப்பமாக இருக்கும் மனைவியை குளிப்பாட்டுபவது அவளுடைய துணிமணிகளை துவைத்துப் போடுவது போன்ற அத்தனை வேலைகளையும் எந்த கூச்சமும் இல்லாமல் செய்யும் ஆண்கள் இந்த நாட்டில் கோடிக்கணக்கில் இருக்கிறார்கள்.  ஆனால் அப்படிபட்ட ஆண்களுக்கு வினையாக பெண்கள் இருந்து தொலைத்து விடுகிறார்கள்.  மனைவி அமைதியாக இருந்தாலும் நலம் விரும்பிகள் என்ற பெயரில் அவளை சுற்றி இருக்கும் சில விஷக்கிருமிகள் கண்டதையும் சொல்லிக் கொடுத்து ஒரு கணவனின் மனதை சிதைத்து விடுகிறார்கள். 

ஒரு சிலர் விவாகரத்து செய்வதற்கு என்ன காரணம் என்று கேட்டால் அந்தக் காரணத்தை விளக்கமாகவும் சொல்லமாட்டார்கள், மூடி மறைப்பார்கள். ஆண்களும் சரி பெண்களும் சரி காரணமே இல்லாமல் விவாகரத்து செய்துகொண்டு வாழ்க்கையை தொலைத்து விடுகின்றனர். 

இதேபோல கணவன் மனைவிக்குள் பேசிக்கொள்ளும் வார்த்தைகள் தவறாகப் போகும் போது அது மனமுறிவு வரை வந்துவிடுகிறது. முன்கோபம், கலந்து ஆலோசிக்காமல் எடுக்கப்படும் அவசர முடிவு, எப்பொழுதும் ஏதோ ஒரு சிந்தனையில் இருப்பது,  உடல்நலனில் அக்கறை செலுத்தாமல் இருப்பது, சுற்றியிருப்பவர்களை கவனிக்காமல் இருப்பது,  சட்டென்று முடிவெடுக்க தெரியாமல் எல்லாவற்றிலும் பொறுமை என்கிற பெயரில் மதமதவென இருப்பது, வேலை முடிந்ததும் வீட்டிற்கு சரியான நேரத்தில் வராமல் இருப்பது போன்ற ஆண்களின் குணங்களும் மணமுறிவுக்கு முக்கிய காரணமாக இருக்கின்றன. 

கணவன் மனைவி இருவரும் அவர்களுடைய பெற்றோர்களின் படிப்பறிவு இல்லாததை மாறி மாறி குறையாகப் பார்க்கிறார்கள். அவர்களுடைய காலத்திற்கேற்ற நாகரிகம் இல்லாததை குறையாகப் பார்க்கிறார்கள். அதேபோல சந்தேக புத்தி, பெண்களுக்கு அதிகம் என்று சொல்கிறார்கள். ஆனால் உண்மையில் சந்தேகப் புத்தி, காமப்பார்வை இவையெல்லாம் ஆண்களுக்குத்தான் அதிகம்.  ஆண்கள் தங்களுடைய மனைவியின் தங்கச்சிகளை அக்காக்களை தோழிகளை எல்லாம் காமக் கண்களுடன் பார்க்கிறார்கள், டபுள் மீனிங் பேசி சிரிக்கிறார்கள். பிறகு அதை விளையாட்டுக்கு என்று சொல்லி சமாளிக்கிறார்கள்.  ஆனால் பெண்கள் தங்களுடைய தோழர்களுடன் அல்லது கணவரின் தம்பி அல்லது தோழன் போன்ற பிற ஆண்களுடன் சிரித்து பேசி விட்டால் போதும் உடனே அவர்களுக்கு சந்தேகம் பொத்துக்கொண்டு வந்துவிடுகிறது. நீ எதுக்கு அவன் கிட்ட எல்லாம் சிரிச்சு சிரிச்சு பேசிக்கிட்டு இருக்க என்று கேள்வி கேட்பார்கள். சிறுபிள்ளையாக தொடங்கும் சந்தேகம் அதோடு நின்றுவிடுவதில்லை. மண முறிவுக்கு அதாவது சட்டப்படியான டைவர்ஸ் வாங்குவதற்கு வசதியில்லாதவர்கள் ஒருவரை ஒருவர்  சிதைத்துக் கொள்கிறார்கள். அது கொலை வரை நீண்டு விடுகிறது. பொறுத்து பொறுத்துப் பார்க்கும் மனைவி ஒரு கட்டத்தில் வெகுண்டு எழுந்து கணவனை வெட்டிச் சாய்க்கிறாள் கணவன் மீது அம்மி கல்லை தூக்கிப் போட்டு சாகடிக்கிறாள். 

பெண்களின் வளர்ச்சியை ஆண்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை சகித்துக்கொள்ள முடியவில்லை என்பதும் ஒருவகையில் மண முறிவுக்குக் காரணமாக அமைந்துவிடுகிறது. பெண்கள் நைட் டியூட்டி வேலைக்குப் போவதை  எத்தனை ஆண்கள் எத்தனை காதலர்கள் உண்மையிலேயே மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். 

மண முறிவுக்கு மிக முக்கியமான காரணமாக இருப்பது உடல் மற்றும் மன சுதந்திரம். ஆண்களை பொறுத்தவரை உடல் மற்றும் மன சுதந்திரம் இரண்டுக்குமே இன்றைய சமூகத்தில் நிறைய வசதிகள் இருக்கிறது.  ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி விட்டுக்கொடுக்க விட்டுக் கொடுக்க நல்லவராக இருந்து கொண்டே இருப்பதால் அவர்கள் ஏமாளிகளாக மாறிக் கொண்டிருக்கிறார்கள். இப்படி மண முறிவுக்கு ஏகப்பட்ட பிரச்சினைகள் இருக்கிறது நாளுக்கு நாள் கூறப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. இவற்றைத் தவிர்க்க நாம் ஒருத்தரை ஒருத்தர் கட்டுப்படுத்தனும் என்கிற எண்ணம் இல்லாமல் இருந்தாலே போதும் மன முறிவு என்பது ஏற்படாது. 

 

Related Articles

முதன்முறையாக நடக்கும் பதினோறாம் வகுப்பு ... பல தனியார் பள்ளிகளில் பதினோறாம் வகுப்பு படிக்க வேண்டிய காலத்திலயே பண்ணிரண்டாம் வகுப்பு பாடங்களை நடத்த தொடங்கிவிடுகிறார்கள். இதனால் மாணவர்கள் பண்ணிரெண...
நடிகர்களின் மீது பித்து பிடித்தது போல் இ... பாடகர் எஸ் பி பி பாலசுப்ரமணியம் அவர்களின் இறுதி சடங்கிற்கு நடிகர் விஜய் சென்றிருந்தபோது அவருடைய தலை முடியை வைத்து இது டோப்பா முடி என்று அஜித் ரசிகர்கள...
கமல்ஹாசனை காலி செய்யணும்! – வைகோ, ... கடந்த டிசம்பர் 31ம் தேதி ரஜினியின் அரசியல் அறிவிப்பு முதல் தொடங்கியது இந்த ஆண்டிற்கான பரபரப்பு பையர். அன்று முதல் இம்மியளவும் பரபரப்புக்கு பஞ்சமில்லை....
“சைக்கோ பெண்களுக்கான படம்!”... கடந்த ஜனவரி 24ம் தேதியன்று ரிலீசான மிஷ்கினின் சைக்கோ படம் தியேட்டரில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அந்தப் படத்திற்கான நேர்மறை எதிர்மறை விமர்சனங்க...

Be the first to comment on "நம் நாட்டில் நடைபெறும் மணமுறிவுகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது இதற்கு அடிப்படையில் என்னதான் காரணம்? ஆண்களா பெண்களா யாருக்கு அதிக சகிப்புத் தன்மை இருக்கிறது, யாருக்கு சகிப்புத்தன்மை இல்லை?  "

Leave a comment

Your email address will not be published.


*