உலகத்தில் எந்தப் பெண்ணுக்கும் இப்படியொரு கொடுமை நடக்க கூடாது! – மிக மிக அவசரம் விமர்சனம்!

Miga Miga Avasaram movie review

தயாரிப்பு நிறுவனங்கள் : வி ஹவுஸ் புரொடக்சன்ஸ், லிப்ரா புரொடக்சன்ஸ் 

தயாரிப்பாளர்கள் : சுரேஷ் காமாட்சி, குங்பூ ஆறுமுகம்

திரைக்கதை – இயக்கம் : சுரேஷ் காமாட்சி

கதை – வசனம் : ஜெகன்னாத் ( புதிய கீதை, ராமன் தேடிய சீதை பட இயக்குனர் )

இசை : இஷான் தேவ்

ஒளிப்பதிவு : பாலா பரணி

எடிட்டிங் : ஆர் சுதர்சன்

பாடல் : இயக்குனர் சேரன்

நடிகர் நடிகைகள் : ஸ்ரீ பிரியங்கா, வழக்கு எண் முத்துராமன், சீமான், ஹரிஸ், ஈ ராமதாஸ், லிங்கா, ஆண்டவன் கட்டளை அரவிந்த், சரவண சக்தி, வி கே சுந்தர், குணா, வெற்றி குமரன்,… 

மாஸ்டர் பீஸ் இன் தமிழ்சினிமா என்று இயக்குனர் இமயம் பாரதிராஜாவும், காவல் துறை பெண் ஊழியர்களின் அன்றாட சிக்கல்களை ஆணி அறைந்த மாதிரி இந்தப் படம் பேசுது என்று இயக்குனர் ராமும்,  ரொம்ப சுவாரஸ்யமான ஒரு படம்னு சொல்வேன், அதே நேரம் ரொம்ப மரியாதை கொடுக்க வேண்டிய படம் என்று இயக்குனர் வெற்றிமாறனும் கூறியுள்ளனர். எதோ பாராட்ட வேண்டுமே என்று பாராட்டி உள்ளார்கள் என்ற நினைப்பு தமிழ் முதலில் இருந்தது. ஆனால் படம் பார்த்த பிறகு அவர்கள் சொன்னதெல்லாம் உண்மை தான் என புரிகிறது. 

நூறு நிமிடங்களுக்கும் குறைவான நேரமுடைய படம் ( 95 நிமிடங்கள். 59 நொடிகள் U சர்டிபிகேட்), குறைந்த பட்ஜெட் படமான இந்தப் படத்தில் கதை தான் ஹீரோ என்ற இந்த இரண்டு விஷியங்களும் படத்தை தாங்கி பிடிக்கின்றன. 

வெயிலிலும் மழையிலும் இதமற்ற உடையுடன் கடினமான பணி நெருக்கடியிலும் சிக்கித் தவிக்கும் அனைத்து போலீஸ் சகோதரிகளுக்கும் இந்தப் படம் சமர்ப்பணம் என்ற அறிவிப்புடன் படம் தொடங்குகிறது. படத்தின் தொடக்கத்தில் சாமந்திக்கும் அதிகாரிக்கும்ந நடக்கும் போன் உரையாடலே படத்தின் கதை இது தான் என தெளிவாக சொல்லிவிடுகிறது. அதே போல படத்திற்கு ஏன் மிக மிக அவசரம் என்ற பெயர் வைத்தார்கள் என்பது இடைவேளை வந்ததும் புரிகிறது. 

” அழகா இருக்கறது உன்னோட தப்பு… ” , ” காபி டீ குடுத்து கரெக்ட் பண்ண பாக்குறியா… ” , ” வாய்ல வந்தாலே அசிங்கம் தான்… “, ” அப்பப்ப நான் “டச்சு”ல இருப்பேன்… “, ” இந்த கொட்டாவி, யூரின்லா மத்தவங்களுக்கு வந்தா நமக்கும் வர மாதிரி இருக்கும்… “, ” சிஸ்டர், தங்கச்சின்னு கூப்ட்றவங்கள பாத்தா பயமா இருக்கு… “, ” நேரா போங்க… ஒதுங்கிப் போனா விசாரிப்பாங்க… “, ” வேலை கிடைச்ச உடனே கிரவுண்டுக்கெல்லாம் போறதில்ல… “, ” அந்த விஐபி எப்ப தான் வந்து தொலையுறாராம்… “, ” பாதையை தேடாதே உருவாக்கு… “, ”    Don’t look for a hero, become one “, ” உங்களுக்கு அவசரனும்னா ரோட்ல போயிருவீங்க… ” போன்ற வசனங்கள் கவனிக்க வைக்கின்றன. கதை வசனம் எழுதிய இயக்குனர் ஜெகன்னாத் பாராட்டுக்குரியவர். குறிப்பாக கிளைமேக்ஸில் சீமான் பேசும் வசனங்கள் கைதட்டல் பெறுகின்றன. 

பாலா பரணியின் ஒளிப்பதிவு சில இடங்களில் அமெச்சூர்டாகவும் பல இடங்களில் பிரம்மாதமாகவும் உள்ளது. பின்னணி இசை படத்தின் பக்க பலம். சில இடங்களில் டப்பிங் சின்க் மிஸ் ஆகிறது. இயக்குனர் சேரனின் வரிகளில் ஒலிக்கும் பெண்ணுக்கோர் தீமை என்ற பாடல் கண்கலங்க வைக்கின்றது.

சாமந்தியும் அவரது மகள் தங்கமும் போனில் உரையாடிக் கொள்ளும் காட்சி ரொம்ப நாடகத்தனமாக இருந்தது. சாமந்தி, சுப்பா ராவ் கதாபாத்திரத்தில் நடித்த ஸ்ரீ பிரியங்கா, வழக்கு எண் முத்துராமன் இருவரும் நடிப்பில் அமர்க்களம் செய்திருக்கிறார்கள். இருவருக்கும் விருதுகள் கிடைக்க வாய்ப்புண்டு.  செந்தமிழன் சீமான் தனக்கு கொடுத்த போலீஸ் கதாபாத்திர வேலையை நன்றாக செய்துள்ளார். ஒரு சில காட்சிகளில் எவனோ ஒருவன் போலீஸ் சீமான் நினைவுக்கு வந்து செல்கிறார். திலீபன் கதாபாத்திரத்தில் நடித்த ஆண்டவன் கட்டளை அரவிந்த் இலங்கைத் தமிழனாக கவனம் பெறுகிறார்.கான்ஸ்டபிளாக நடித்த ராமதாஸ் சாமந்திக்கு ஆதரவாக பேசும் இடங்களும் ஆண்டவன் கட்டளை அரவிந்த் இலங்கை தமிழர்களின் நிலை குறித்து பேசும் வசனங்களும் செம. அது என்னவோ தெரியவில்லை போலீஸ் கதாபாத்திரம் மட்டும் ராமதாசுக்கு நன்றாக பொருந்திவிடுகிறது. 

படத்தில் சில லாஜிக் மிஸ்டேக்குகளும் இருக்கின்றன. பாம் வைத்தது என்ன ஆனது, சுப்பா ராவ்க்கு என்ன நடந்தது என்பதையெல்லாம் இன்னும் கொஞ்சம் தெளிவாக காட்டியிருக்கலாம்… சுப்பாராவ்வுடன் காரில் பயணிக்கும் கான்ஸ்டபிள் சும்மா முறைத்தபடியே இருக்கிறாரே தவிர பேச வைக்கும்படி எதுவும் செய்யவில்லை. 

படம் பார்க்க பார்க்க உலகத்தில் எந்தப் பெண்ணிற்கும் இப்படி ஒரு கொடுமை நடக்க கூடாது என நினைப்பீர்கள்! குறைந்த பட்ஜெட்டில் நல்ல படம் எப்படி எடுப்பது என்பதற்கு சிறந்த உதாரணம் இந்தப் படம். புதுமையான கதைக்களத்துடன் வந்திருக்கும் இந்தப் படத்தை தவறாமல் ஒருமுறையாவது பார்த்துவிடுங்கள். 

நல்லோர் ஒருவர் பொருட்டு எல்லோருக்கும் பெய்த மழை! 

Related Articles

கலைக்கும் கலைஞனுக்கும் சாவு இல்லைதான் அத... சீதக்காதி பெயர்க்காரணம் ஏன்?'செத்துங் கொடுத்தான் சீதக்காதி` என்று இன்றும் தமிழ் உலகில் வழங்கிவரும் முதுமொழி ஒன்றே அவரின் வள்ளன்மையை உலகுக்குப் பற...
நடிக்க தெரியாத நடிகர் சிம்பு! –  இ... நடிகர் சிம்புவின் படங்கள் எப்போது தொடங்கும் எப்போது முடியும் எப்போது ரிலீஸ் ஆகும் என்று தெரியாத சூழல் பல வருடங்களாக தொடர்ந்து வருகிறது.  அப்படியிருந்த...
அம்மாவுக்கு பிகினி மாட்டிவிட்ட லாரன்ஸ்! ... அம்மாவுக்கு பிகினி மாட்டிவிட்ட லாரன்ஸ்! என்ன கருமன்டா இது என்று முகம் சுளிக்கும் வகையில் அபத்தமான காட்சிகள் தமிழ் சினிமாவில் நிறைய வந்துள்ளன. அந்த வக...
விஷால் தலைமையில் நடந்த சினிமா ஸ்ட்ரைக் ம... தமிழ்சினிமா வரலாற்றில் முதல்முறையாக   நாற்பத்தி ஒரு நாட்கள் வேலை நிறுத்தம்  நடந்தது. சினிமாவை மட்டுமே நம்பி இருந்த பலதரப்பட்ட அன்றாட தொழிலாளர்கள் இந்த...

Be the first to comment on "உலகத்தில் எந்தப் பெண்ணுக்கும் இப்படியொரு கொடுமை நடக்க கூடாது! – மிக மிக அவசரம் விமர்சனம்!"

Leave a comment

Your email address will not be published.


*