பெண்கள் அரசியலுக்கு வர தயங்குவது ஏன்? அரசியலில் பெண்களுக்கு நேரும் பிரச்சினைகள் என்னென்ன?

Why Women hesitate to enter politics

பிரதீபா பாட்டில், சோனியா காந்தி, மம்தா பானர்ஜி, செல்வி ஜெ ஜெயலலிதா, தமிழிசை சவுந்தரராஜன், நிர்மலா சீதாராமன், ஜோதிமணி, தமிழச்சி தங்கபாண்டியன் என்று தற்கால பெண் அரசியல்வாதிகளை பார்த்து வருகிறோம். இந்திய அரசியலை பொருத்தவரை அரசியலில் பெண்களின் எண்ணிக்கையும் பங்கும் சற்று குறைவாகவே இருக்கிறது. இதற்கு காரணம் என்ன என்பதை பார்ப்போம். 

உலகிலேயே முதன் முதலில் பெண்களுக்கு ஓட்டுரிமை வழங்கபட்டது இந்தியாவில்தான். ஆனால் இன்று வரை 10% கூட பெண்கள் பதவிகளில் இல்லை. இது ஆய்வறிக்கை. எல்லா துறைகளிலும் சாதிக்க  துடிக்கும் பெண்கள் ஏன் அரசியலுக்கு வர தயங்குகிறார்கள் என்பதை பற்றிய ஆய்வு தொடங்கியது. 

  1. சில ஆண்களின் பார்வை சரியில்லை.
  2. இளம் பெண்கள் எங்கே அரசியலில் ஆர்வம் காட்டிவிடுவார்களோ என்ற பயத்துடன் சினிமாவில் பெண் அரசியல்வாதிகளை ரவுடி போன்று சித்திகரிப்பது (ஏமாற்றுவதும் பொய் சொல்வதும்,குற்றங்கள் செய்வதும் மட்டுமே அரசியல் என்ற தோற்றத்தை ஏற்படுத்தியது)
  3. ஆண்களுக்கு மட்டுமே அரசியல் பற்றி தெரியும்.
  4. குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய கட்டாயம் (குடிகார கணவண் குடும்பத்தை கவனிக்காமையால்)
  5. நாட்டை நம்மால் மாற்ற முடியுமா??? என்ற கேள்விகள்…..நம்பிக்கையின்மை
  6. “குடும்ப பெண்கள் அரசியலுக்கு வர மாட்டார்கள்” என்ற ஆண்களால் விதிக்கபட்ட ஒரு கட்டுப்பாடு.
  7. அரசியல் என்பது அதிகாரத்தில் அமர்ந்து மக்களுக்கு நன்மை செய்யும் உன்னதமான பொறுப்பு. ஆனால் இன்று பணம் போட்டு பணம் சம்பாதிக்கும் தொழில். பணம் மட்டும்தான் அரசியல் என்ற தமிழ்நாட்டின் நிலை. 
  8. இன்னும் பாரம்பரியம் என்ற ஒரு கடிவாளத்தை காலில் கட்டிக்கொண்டே வாழ்கிறார்கள். 
  9. பெண்ணியம் பேசுபவர்கள் மேடையில் முழங்குவதோடு நின்றுவிடுகின்றனர். 

பெண் சுதந்திரம் பற்றிய கவிதை ஒன்றை இங்கு இணைத்துள்ளோம். 

“பெண் சுதந்திரம்”

நீ வரவேண்டாம் பெண்ணே…!

வீட்டில் உள்ள 

வேலைகளை மட்டும் செய்…!

அதுதான் பெண்ணுக்கு அழகு…!

கதவை தாழ் போட்டுக் கொள்…!

பெண் சுதந்திரம் பற்றி புரட்சியாகப் பேசிவிட்டு வருகிறேன் என்று 

கதவைப் பூட்டிவிட்டு கிளம்பினார் 

அந்த ஆண் புரட்சியாளர்!

இப்படித்தான் இன்றைய சூழல் இருக்கிறது. பெண் விடுதலைக்காக ஆண்கள் தான் போராட வேண்டும் என்ற அவலம் இங்கு தொடர்ந்து நடந்து வருகிறது. எப்போது மாறும் இந்த அவலம்? சபரிமாலா ஜெயகாந்தன், வழக்கறிஞர் நந்தினி, தோழர் வளர்மதி என்று பெண் புரட்சியாளர்கள் மிக குறைவாகவே உள்ளனர். இனி வரும் காலத்திலாவது இந்த சூழல் மாற வேண்டும்.

Related Articles

டெல்லியில் ஒரு நாளைக்கு ஐந்து பெண்கள் பா... டெல்லி காவல்துறையின் தரவுகளின் படி, 2018 ஆம் ஆண்டின் முதல் 3.5 மாதங்களில் ஒரு நாளைக்கு ஐந்துக்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்புணர்வு செய்யப்படுகிறார...
இந்தியாவின் கூகுள் பாய் ! – அற்புத... இந்தியாவின் கூகுள் பாய் என்று எல்லோராலும் செல்லமாக அழைக்கப்படுபவர் கௌடில்யா பண்டிட். எந்த துறையிலிருந்து எந்த கேள்வி கேட்டாலும் நொடியில் பதிலளிக்கும்...
இருட்டு அறையில் முரட்டு குத்து படம் போல்... கடந்த வெள்ளிக் கிழமை அன்று சந்தோஷ் ஜெயக்குமாரின் இயக்கத்தில் கௌதம் கார்த்திக், சாரா, வைபவி, யாசிகா ஆனந்த், சந்திரிகா ஆகியோரின் நடிப்பில் வெளி வந்த படம...
ஒரே ஒரு தமிழ்படம் (2) தான், ஒட்டுமொத்த த... தமிழ்சினிமாவின் தவிர்க்க முடியாத சில படங்களையும் தமிழக அரசியலின் சில தவிர்க்க முடியாத சம்பவங்களையும் கலந்து கட்டி கலாய்த்து தள்ளி இருக்கும் தமிழ்ப்படம...

Be the first to comment on "பெண்கள் அரசியலுக்கு வர தயங்குவது ஏன்? அரசியலில் பெண்களுக்கு நேரும் பிரச்சினைகள் என்னென்ன?"

Leave a comment

Your email address will not be published.


*