- இயக்குனர் ராம்
- பத்திரிக்கையாளர் ஜெயராணி
- கவிஞர் மனுஷ்ய புத்திரன்
- ஜோதிமணி
- இசை
- தமிழ்நதி
- ஆதவன் தீட்சண்யா
- தமயந்தி
- ஜி. கார்ல் மார்க்ஸ்
- தமிழச்சி தங்கபாண்டியன்
- யுகபாரதி
- லிவிங் ஸ்மைல் வித்யா
- மாரி செல்வராஜ்
- கீதா இளங்கோவன்
- மருத்துவர் கு. சிவராமன்
- லீனா மணிமேகலை
- பா. இரஞ்சித்
- ஜெ. தீபலக்சுமி
- பாக்கியம் சங்கர்
- பிருந்தா சேது
- பாஸ்கர் சக்தி
- குட்டி ரேவதி
- சரவணன் சந்திரன்
- சபிதா
- பவா செல்லதுரை
- கவிதா முரளிதரன்
- இயக்குனர் நவீன்
- சந்திரா
- கவிதா பாரதி
- கே. வி. ஷைலஜா
- பாரதி தம்பி
- சுகிர்தராணி
- கவிஞர் நரன்
- உஷா கிருஷ்ணன்
- பூவுலகு சுந்தர்ராஜன்
- ஜா. தீபா
- பாரதி கிருஷ்ணகுமார்
- ச. விசயலட்சுமி
- கரன் கார்க்கி
- ஸர்மிளா ஸெய்யித்
- மு. குணசேகரன்
- சுகிதா
- ஆதிரன்
- விஜி பழனிசாமி
- ஆர். பி. அமுதன், ஆவணப்பட இயக்குனர்
- கிருபா முனுசாமி
- வசந்தபாலன்
- இளம்பிறை
- ஆர் ஆர் சீனிவாசன், ஆவணப்பட இயக்குனர்
- கொற்றவை
- அ. முத்து கிருஷ்ணன், அரசியல் செயல்பாட்டாளர்
- பெருந்தேவி
- ஆர். அபிலாஷ் எழுத்தாளர்
இவர்களில் திரைப்பட இயக்குனர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், பத்திரிக்கையாளர், ஆவணப்பட இயக்குனர், சமூக சேவகர் என பலவிதமான மனிதர்களும் அடங்குவர். ஆண்கள், பெண்கள், திருநங்கைகள் என அத்தனை மனிதர்களும் தங்கள் அனுபவங்களை பகிர்ந்துள்ளனர். ஆண் பெண் சமத்துவம் எப்படி உருவாகும் என்பதை தெரிந்துகொள்ள அவசியம் இந்தப் புத்தகத்தை படிக்க வேண்டும். விகடன் பதிப்பகத்தில் கிடைக்கிறது. இந்தப் புத்தகத்தில் உள்ள சில வரிகளை இங்கு இணைத்துள்ளோம்.
கெளரவக் கொலைகளால் நீ எதையும் தடுத்து நிறுத்திவிட முடியாது என்பதை அறிந்து வாழ் அல்லது இறந்துபோ. – இயக்குனர் ராம்
கிளம்புகிறேன்’ என்று சொல்லாதே
வழியனுப்ப மாட்டேன்
`போய்விட்டு வருகிறேன்’ என்றும் சொல்லாதே
`போய் வா’ என்றும் சொல்ல மாட்டேன்…
`கொஞ்ச நேரம் கண்களை மூடு
போய் ஒளிந்துகொள்கிறேன்’ என்று சொல்
கண்களை மூடுகிறேன்
திறப்பதற்குள் போய்விடு
நீ திரும்பி வரும் வரை
என் அறைக்குள்ளேயே
உன் வாசத்தின் வழித்தடத்தில்
என்னை நானே தேடிக்கொண்டிருப்பேன்
எத்தனை நாள் கழித்து வந்தாலும்
எத்தனை வருடம் கழித்து வந்தாலும்
எத்தனை யுகங்கள் கழித்து வந்தாலும்
சொல்லாமல்கொள்ளாமல் வா
கதவைத் திறந்தவுடன்
நானே உன்னைக் கண்டுபிடித்ததைப்போல
இறுக்கக் கட்டிப்பிடித்துக்கொள்வேன்
அந்த நொடியில்
நான் சிரித்தாலும் சிரிப்பேன்
அழுதாலும் அழுவேன்
என் முத்தத்தைத் தவிர பதிலுக்கு
எதுவும் பேசக் கூடாது நீ.. – திவ்யா மாரிசெல்வராஜ்
பெண்களைப் பற்றி ஆண்கள் சொல்வது, ஏன்… பெண்களே பெண்களைப் பற்றி சொல்வதுகூட பொய்தான். ஒரு பெண்ணை நாம் புரிந்துகொள்ள வேண்டுமெனில், நாம் அவளுடன் வாழவேண்டும். அவள் அம்மாவாக இருந்தால் மகனாக, அவள் மகளாக இருந்தால் அப்பாவாக, அவள் அக்காவாக இருந்தால் தம்பியாக, அவள் தங்கையாக இருந்தால் அண்ணனாக, அவள் தோழியாக இருந்தால் தோழனாக, அவள் காதலியாக இருந்தால் காதலனாக, அவள் மனைவியாக இருந்தால் கணவனாக, அவள் மனுஷியாக இருந்தால் மனுஷனாக… இப்படி அவள் எதுவாக நம்முடன் இருக்கிறாளோ, அதுவாக அவளுடன் நாம் வாழ்ந்தால்தான் அவர்களை நாம் புரிந்துகொள்ள முடியும்.
– மாரிசெல்வராஜ்
இங்க நம்ம ஊர்ல ஒவ்வொரு பொண்ணுக்குள்ளயும் ரெண்டு பொண்ணு இருக்கா. ஒருத்தி, ஆம்பிளயப் பார்த்து ஓடி ஒளியணும். இன்னொருத்தி, தன்னுடைய ஆம்பிளைக்கு ஒண்ணுன்னா கதறிக்கிட்டு ஓடி வரணும்.
– மாரிசெல்வராஜ்
காதலென்பது சின்ன விதைகளில் இருந்து முளைக்கும் ஒரு மரம் அல்ல; அது பிரபஞ்சத்தின் வாசத்தில் இருந்து முளைக்கும் பெரு மலை!
– மாரிசெல்வராஜ்
நாம் சாதி சமூகமாக இருப்பதில் ஆண்களைப் போலவே பெண்களுக்கான பங்கும் அதிகம். ஆண்கள் சொல்கிற எதையுமே தட்டிக்கழிக்கிற பெண்கள், சாதி, மதம் அடிப்படையிலான நம்பிக்கைகளை, உணர்வுகளை, சடங்குகளை மட்டும் இன்னமும் தாங்கிப்பிடிக்கிறவர்களாக ஏற்றுக்கொள்கிறவர்களாக இருக்கிறார்கள். அப்பா கண்டிப்பான முறையில் கற்றுத்தருகிற சாதியைவிட, நிதானமாக சாதிக்குக் கொடிபிடிக்கிற அம்மா ஆபத்தானவராக இருக்கிறார். சாதி என்பது தவறானது என்றே தெரிந்தாலும், அதைத் தவறு என்று தன் பிள்ளைகளுக்கு அம்மா உணர்த்தாமல் இருப்பது ஆபத்தானது தான். பகுத்தறிவுள்ள அம்மாக்களால்தான் சாதி, மத, பாலின பேதமற்ற சமூகத்தை உருவாக்க இயலும். – பா. இரஞ்சித்
இங்கே காதல் என்பது தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட பிரிவினரால் திட்டமிட்டுப் பரப்பப்படும் உணர்வாகப் பரப்புரை செய்யப்படுகிறது. சாதி வளர்ச்சிக்காக, சாதியப் பகைகளுக்காகக் காதலிக்கிறார்கள் என்ற கருத்து மேடைகளில் சொல்லப்படுகிறது. ஆனால், நிஜத்தில் காதலிப்பவர்களுக்கு அப்படிப்பட்ட எந்த நோக்கமும் இருப்பது இல்லை. காதலிப்பவர்களுக்கு இருப்பது சாதாரண மனித உணர்வு மட்டும்தான். ஆனால், மனிதத்தை வளர்க்கக்கூடிய காதலுக்கு அரசியல் சாயம் பூசும்போது, அது மனிதாபிமானத்தை எல்லாம் இழந்து சக உயிரைக் கொல்லக்கூடிய ஒன்றாக மாறிவிடுகிறது. பெற்ற பிள்ளையாக இருந்தாலும் வெட்டி எறியவும் துணிகிறது. இன்று சமூகத்தில் நடக்கிற ஆணவப்படுகொலைகளுக்குப் பின்னால் இருக்கிற அசிங்கமான மனநிலை இதுதான். – பா. இரஞ்சித்
திருமணத்துக்கு முன் வெளியூருக்கோ வெளிநாட்டுக்கோ தன் மகன்கள் வேலைக்காகச் செல்லும்போது தானே சமைத்துச் சாப்பிடுவதை எண்ணிப் பெருமிதப்படும் பெற்றோர்கள், திருமணத்துக்குப் பிறகு, அதைத் தொடரும்போது ஏன் பதற்றமடைகிறார்கள்? அப்போது மட்டும் சமையலும், வீட்டைச் சுத்தப்படுத்துவதும், துணி துவைப்பதும் பெண்ணின் வேலைகளாக மாறிவிடுவது எப்படி? – நரன்
தமிழ் இலக்கிய உலகம், விசித்திரமானது. தங்கள் கருத்தியல்களை வாசலில் செருப்பைக் கழற்றிவிடுவதுபோல விட்டுவிட்டு, `ஏய்… என்னடி சமையல்?’ எனக் கேட்டுக்கொண்டே வீட்டுக்குள் நுழையும் ஆண்கள்தான் அதன் நாயகர்கள். தெருவில் சீட்டியடிக்கிறவனிடம்கூட ஒரு நேர்மை இருக்கும். ஆனால், புரட்சி பேசுபவர்கள், முற்போக்காளர்கள், எழுத்தாளர்கள் எனச் சொல்லிக்கொள்கிறவர்களில் பெரும்பாலானவர்கள், எழுதும் பெண்ணை, வாசகிகளை வெறும் செக்ஸுவல் ஆப்ஜெக்ட்டாகப் பார்ப்பதில் கொஞ்சமும் சளைத்தவர்கள் அல்ல. – லீனா மணிமேகலை
இந்தப் புத்தகத்தில் இப்படி பலவிதமான அற்புதங்கள் நிறைந்துள்ளன. யாருக்காவது ஏதேனும் புத்தகத்தை பரிசளிக்க விரும்பினால் தயங்காமல் இந்தப் புத்தகத்தை கொடுக்கலாம்.
Be the first to comment on "பகுத்தறிவுள்ள அம்மாக்களால்தான் சாதி, மத, பாலின பேதமற்ற சமூகத்தை உருவாக்க இயலும் – ஆண்பால் பெண்பால் அன்பால் புத்தகம் ஒரு பார்வை!"