* பள்ளிக் கூடமா அது… சந்தக்கட… எங்க பாத்தாலும் குப்ப… இரைச்ஙாலு… ஆட்டுமந்தைய திறந்துவிட்ட மாதிரி… படிக்கற புள்ளைக இந்த வயசுலயே ஜாதிப் பேர சொல்லிட்டு குரூப் சேர்த்துக்கிட்டு அடிச்சுகிட்டு திரியுதுங்க… கவுர்மெண்டு ஸ்கூலு காமனா மோசமா தான் இருக்கும்… ஆனா இந்த ஸ்கூலு ரொம்ப ரொம்ப கேவலமா இருக்கும்… பள்ளிக்கூடம்னா நல்லது சொல்லிக் கொடுக்க இருக்கனும்… ஆனா இந்தப் பள்ளிக்கூடத்துல படிச்சா உலகத்துல இருக்கற அத்தனை கெட்ட பழக்கத்தையும் கத்துக்குவாங்க…
* உங்கள ஒருமைல பேசுனா கோவம் வருதுல்ல… அதே மாதிரி எங்கள பேசுனா எங்களுக்கும் கோவம் வரும்…
* யார் உள்ள வரனும் யார் வரக்கூடாதுன்னு சொல்ல (இது கோயில் கர்ப்பகிரகம் இல்ல)..ஹெட்மாஸ்டர் ரூம்…
* தப்பு பண்ணா தான் பயப்படனும்…
* டீச்சர்ஸ் கொஞ்சம் வேல அதிகமா செஞ்சா போலீஸ்காரங்களுக்கு வேல கம்மி ஆயிடும்…
* இந்த நாடு உருப்படாம போனதுக்கு காரணமே வாத்தியாருங்க தாங்க… ஊழலும் லஞ்சமும் தப்புனு சொல்லி ஒரு தலைமுறைய கூட உருவாக்குலியேங்க… வாத்தியார் வேலைக்கு என்ன சேவை செய்யவா வராங்க… வாத்தியாருங்க எல்லாம் இப்ப வாங்குற சம்பளத்துல பாதி தான் தருவோம்னு அரசாங்கம் சொல்லட்டும்… தமிழ்நாட்டுல இருக்குற டீச்சர் ட்ரெய்னிங் காலேஜ்ல முக்கா வாசிய மூடிட்டு போயிருவாங்க… சம்பளம் வாங்கிட்டு பாடம் நடத்தலனா அதுகூட ஊழல தாங்க வரனும்…
* கற்போம் இனிதாய் கற்போம்… இணைந்து கற்போம்… துணிந்து கற்போம்… உலகை கற்போம்…
* சுதந்திரங்கறது இஷ்டத்துக்கு பண்றது இல்ல… எது சரியோ அத பண்றது…
* அப்பாங்க கொடுத்ததுவிட அதிகமா சேத்திங்கனா தான் நீங்களாம் ஹீரோ… இல்லைன்னா ஜீரோ தான்…
* ஒவ்வொரு ஊர்லயும் எத்தனை கோயில் இருக்கு..நல்லா செழிப்பாதானே இருக்கு? புதுசா கட்டி கும்பாபிஷேகம் பண்ண நன்கொடைன்னு அள்ளி அள்ளி குடுக்குறீங்க?? நீங்க கொடுத்தா கோயில் கர்ப்பகிரகம் இல்ல… பள்ளிக்கூட கக்கூஸ் கூட மணக்கும்…
பள்ளிக்கூடம்..கோயில விட ஒரு படி மேல… குருவுக்கு அப்புறம் தான் தெய்வம்…
* கணக்கு பாடத்தில் ஒரு பையன் 100 மார்க் எடுத்து, சயின்ஸில் தோல்வி பெற்றால், அவன் மக்கு பையனா, கல்வி சிஸ்டம் சரியில்லையா
* 40 நாள் தினம் ஒருமணிநேரம் செலவு பண்ணா சரளமா இங்கிலீஸ்ல பேசலாம்னு பிரைவேட்ல சொல்றாங்க… ஆனா இங்க 12 வருசம் இங்கிலீஸ்ல படிச்சும் 99% ஸ்டூடன்சுக்கு இங்கிலீஸ் பேச வரல… பயம் தான் வருது… காரணம் பாடம் நடத்துற இங்கிலீஸ் டீச்சருங்கள்ல பெரும்பாலான ஆசிரியர்களுக்கு இங்கிலீஸ் பேச தெரியாது…
* அப்டேட்டடா இல்லாத டீச்சர்ஸ்னால அப்டேட்டடான ஸ்டூடன்ச உருவாக்கவே முடியாது…
* வரலாறு படிக்கறது வரலாற்ற படைக்க மட்டும் இல்ல… வரலாற்றுப் பிழைய மீண்டும் செய்யாம இருக்கனும்னு சொல்லித் தான்…
* காட்ல ஓடுற பிள்ளைங்க கிட்ட ரன்னர கண்டுபிடிக்கலாம்… விவசாய பிள்ளைங்க கிட்ட இல்லாத ஸ்டமினா யாருகிட்ட இருக்கு…
* குற்றவாளிகளையும் கூலித் தொழிலாளியையும் உருவாக்க பள்ளிக்கூடம் எதுக்கு…
* தனியார் பள்ளிகூடங்களுக்கு பிள்ளைங்கல படிக்கறதுக்கு அனுப்புல கௌரவத்துக்காக அனுப்புறாங்க
* பாட புத்தகத்துல முதல் பக்கத்துல தீண்டாமை ஒரு பெருங்குற்றம்னு இருக்குது… அந்தப் பாடத்தையே நீங்க இன்னும் நடத்தி முடிக்கலயா…
* இவங்கள எல்லாம் திருத்தவே முடியாதும்மா… Birth சர்டிபிகேட் வாங்கறதுக்கு முன்னாடியே சாதி சர்டிபிகேட் வாங்குற பயக. உலக நாடுலாம் நிலாவுல இடம் போடுறாங்க… இவிங்க சாதிய வச்சுக்கிட்டு சட்டமன்றத்துலயும் இடம் போடுறாங்க நாட்டையும் ஆளுறாங்க…
* எதிர்த்து நிக்குறவங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும்… அதுவும் என்ன எதிர்த்து நிக்குறவங்கள எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்…
* நீங்க எப்பவுமே டீச்சர்ஸ்க்கு எதிராவே இருக்கிங்க… ஸ்டூடன்சுக்கு ஆதரவா இருக்கேன்…
* சம்பளம் வாங்கிட்டு வேல செய்யாம இருந்தா அதுவும் ஊழல் லிஸ்ட்ல வரும்கிற தெளிவோட இருக்கேன்…
* சம்பளம் பத்தல… வசதி பத்தல… பணி பாதுகாப்பு பத்தலனு போராடுற நீங்க பாடத்தோட தரம் பத்தல மாணவர்களுக்கு அடிப்படை வசதி பத்தல… சிஸ்டத்துல மாற்றம் வேணுமே அப்படின்லா எப்பயாவது போராடிருக்கிங்களா…
* ஸ்டேட் கவர்மெண்ட சீண்டும்போதே நினைச்சேன் அது சென்ட்ரல் கவர்மெண்டா தான் இருக்கும்னு…
*அதிக மார்க் எடுக்குறவன்லா அறிவாளின்னு அர்த்தம் கிடையாது. நல்ல மனப்பாடம் பண்றானு தான் அர்த்தம்…
* இன்ஜினியரிங் படிச்சவன எல்லாம் சோறு டெலிவிரி பண்ண வைக்குது இந்த சிஸ்டம்… அப்ப சிஸ்டமே ஃபெயில் தான…
* தோத்துடுவோம்னு பயமா இருக்கு சார்… ஜெயிக்கறவன் தான பயப்படனும்… நாம தான் தோக்கப் போறேம்மே… நமக்கு எதுக்கு பயம்…
* நாட்டுக் கோழிக்கும் போண்டா கோழிக்கும் போட்டி வச்சா யாரு ஜெயிப்பா… அவிங்க நாட்டுக் கோழிங்கன்னு தெரியாத வரைக்கும் தான் நம்ம பொளப்பு ஓடும்…
* கொல செய்றதும் ஜெயீக்கறதும் வேற வேறடா முட்டாள்.
* புத்தகம் சமுதாயத்த மாத்தி அமைக்கும்…
* வறுமை கோட்டுக்கு கீழ இருக்கறவங்க மட்டுமே அரசாங்க பள்ளில படிக்குறாங்க…
* கைரேகை மாதிரி ஒவ்வொருதருக்குள்ளயும் தனித்தனி திறம இருக்கு… அத கண்டுபிடிச்சிங்கனா மட்டும் தான் உங்களால ஜெயிக்க முடியும்…
* மக்களுக்காக வேல செய்றவிங்கள விட எங்களுக்காக (தனியார் முதலாளிகளுக்காக) வேல செய்றவங்க தான் அரசாங்கத்துல அதிகம்…
* தீமை நடக்கிறது என்று சொல்லி அதை தடுக்காமல் அதன் கூடவே பயணிக்கிறவர்கள் தீமையின் ஒரு பகுதியாகவே ஆகிறார்கள். எதிர்த்து நிற்கிறவர்களே வரலாறு ஆகிறார்கள்…!
Be the first to comment on "ராட்சசி திரைப்பட வசனங்கள் ஒரு பார்வை!"