தானா சேர்ந்த கூட்டம் திரைப்பட வசனங்கள் ஒரு பார்வை!

A view on Thaanaa Serndha Koottam movie dialogues

2018 ம் ஆண்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியானது இயக்குனர் விக்னேஷ் சிவனின் தானா சேர்ந்த கூட்டம். நல்ல வெற்றியை பெற்ற இந்தப் படம் தொடரும் வேலையின்மை பிரச்சினையைப் பற்றி பேசியது. குறிப்பாக இந்தப் படத்தின் வசனங்கள் நிறைய கை தட்டலைப் பெற்றன. விக்னேஷ் சிவன் பாடல்கள் நன்றாக எழுதுவார் என்பது அனைவரும் அறிந்ததே. அதே போல வசனங்களும் அற்புதமாக பல நாட்கள் கழித்து நினைத்து பார்க்கும் அளவிற்கு எழுதி இருப்பது கவனிக்கத்தக்க விஷியம். இந்தப் படத்தின் வசனங்கள் இங்கே தொகுக்கப் பட்டுள்ளன.

  1. நாம ஆசப் பட்டது கிடைக்கனும்னா அதுக்கு கொஞ்ச நாள் ஆகும்டா…
  2. நாங்க ஜெயிச்சுருவோம் சார்… எல்லாமே ஒழுங்கா இருந்தா ஒழுங்கானவங்கள்லா ஜெயிச்சரலாம் சார்… தகுதியே இல்லாதவன்லா இங்க… தகுதி இருக்கறவன்லா எங்க என்ன ஆனாங்கனு தெரியாம அப்படியே காணாம போயிடுறாங்க…
  3. இங்க வாழ்றவன் ஒவ்வொருத்தனக்கும் போறதுக்கு முன்னாடி செய்ய வேண்டிய வேலைன்னு ஒன்னு இருக்கும்… அத நம்மளா விட்டா கூட அதுவா தேடி வரும்…
  4. நச்சினார்க்கு இனியன்… நல்லவங்களுக்கு நல்லவன்னு அர்த்தம்…
  5. ” உங்கப்பா ஆச பட்டதால தான் நீங்க இந்த வேலைய தேர்ந்து எடுத்திருக்கங்களா… ? ”

    ” நாம சாப்ட்ற ஒவ்வொரு அரிசிலயும் நம்ப பேரு எழுதிருக்கனு சொல்வாங்க… அதே மாதிரி ஒவ்வொரு சேர்லயும் அதுக்குனு பொறந்தவங்க பேரு எழுதிருக்கன்னு நான் நினைக்குறேன்… எனக்கான சேர் இந்த ஆபிஸ்குள்ள தான் எங்கயோ இருக்கன்றது என்னோட என் அப்பாவோட நம்பிக்கை… “

  6. பொதைக்க வேண்டியது பொணத்த மட்டும் தான்… பணத்த அல்ல… அந்தப் பணத்தலாம் தோண்டி எடுத்தாலே நம்ம நாட்டுல இருக்கற பல பிரச்சினைகள வேரோடு புடுங்க முடியும்…
  7. தனியா நான் மட்டும் எதுவும் புடுங்க முடியாது… நாமலாம் சேர்ந்தா நிச்சயமா எதாவது புடுங்கலாம்…
  8. உண்மைக்கு பயந்தவங்க வேற எதுக்குமே பயப்பட மாட்டாங்க… நெஞ்சுல நேர்மை இருக்கு… செய்யுற செயல்ல நியாயம் இருக்கு… வேற எத பத்தியும் எங்களக்கு கவல இல்ல…
  9. நெஞ்சுல நேர்மையும் செய்யற செயல்ல நியாயமும் இருந்தா போதும் வேற எதுக்கும் பயப்பட தேவை இல்ல…
  10. நல்லவங்களா கெட்டவங்களா மாறுனா தான கெட்டவங்க நல்லவங்களா மாறுவாங்க…
  11. இந்த உலகத்துல எல்லோரும் ஃபிரியா பன்றது ஃபீல் பண்றது மட்டும் தான்… அதனால கால் பைசா கூட பிரயோஜனம் இல்ல…
  12. எளியாரை வலியார் அடித்தால் வலியாரை தெய்வம் அடிக்குதோ இல்லையோ வேற யாராச்சும் வந்து செம அடி அடிப்பாங்க…
  13. உயர உயர பறந்தாலும் குருவி குருவி தான்… பருந்து பருந்து தான்…
  14. சர்வீஸ்ல இருக்கறப்ப உங்கப்பன் செத்துட்டா அந்த வேல உனக்குத் தான் கிடைக்கும்னு யாரும் சொல்லலயாப்பா…
  15. தற்கொல பண்ணிக்கறதுலாம் தப்பு தான்… ஆனா படிக்க முடியல… படிச்ச படிப்புக்காக வேல கிடைக்கலன்னு தற்கொல பண்ணிக்கிட்டா அதுக்கு பேருலம் தற்கொல இல்ல… கொலை!
  16. இங்க வேலைல இருக்குற யாரும் ஒழுங்கா வேலயே செய்றது கிடையாது… ஒழுங்கா வேல செய்னம்னு நினைக்கறவனுக்கு வேலயே கிடையாது…
  17. நம்ம அடையாளத்த எவனாவது அழிக்கனும்னு நினைச்சானா அவனுங்கள அடியோடு அழிக்கறதுக்கு நம்மளாம் ஒரு கூட்டமா சேந்து நிப்போம்…
  18. ஜெயிக்கறது அந்த தெண்ட கூட்டமா இல்ல நம்மள மாதிரி தானா சேந்த கூட்டமான்னு பார்க்கலாம்…
  19. இப்ப லஞ்சம் கொடுக்கறது இனிமேல் லஞ்சம் வாங்காம இருக்கறதுக்காக…
  20. நான் கெட்ட வார்த்த பேச மாட்டேன்னு யாரு சொன்னா… கோவம் வந்தா அப்றம் எத வச்சு புடுங்கறது…
  21. ” Whats the problem in our country? ”

    ” corruption sir… And I hate corruption…

    ” ” Whats ur name… ”

    ” சசிகலா… “

  22. பிறக்கும் போது குழந்த… வளரும் போது டேய் தம்பி… ஸ்கூலுக்குப் போகும்போது இனிசியல் வச்சு பேர சொல்லி கூப்டுவாங்க… ஆனா இந்த உலகத்த விட்டு போகும்போது போலீஸ்காரன் செத்துட்டாரு… போஸ்ட்மேன் செத்துட்டாரு… டீச்சர் செத்துட்டாரு… செருப்பு தைக்கறவர் செத்துட்டாருனு நீங்க செய்ற வேலைய வச்சு தான் சொல்வாங்க… நீங்க செய்ற வேல தான் உங்களுக்கான அடையாளம்…
  23. “பொம்பள தான நீ… வெக்கமா இல்ல உனக்கு…

    ஆம்பளைங்க வெக்கமே இல்லாம பல வேலைங்க  பண்ணும்போது பொம்பளைங்க வெக்கமே இல்லாம சில வேலைங்க பண்ணலாம்…

  24. யாரு கிட்டலாம் பணம் இருக்கோ அவனுங்கள்ளா அழகா நினைச்ச வாழ்க்கய வாழலாம்… பணம் இல்லாதவன்லா அப்டியே கிடைச்ச எதாவொரு கண்றாவி வாழ்க்கைய வாழ்ந்துட்டு அழுது அழுது செத்துரனும்…
  25. எவ்வளவு உயரங்கறதுலாம் முக்கியமே இல்ல சார்… எவ்வளவு உயர்றங்கறது தான் முக்கியம்…
  26. லஞ்சத்த வச்சு தான் லஞ்சத்தையே அழிக்க வேண்டியதா இருக்கு… ஓட்ட கூட ஒரு நாள் காசு கொடுத்து வாங்குவாங்க சார்…

 

Related Articles

பிக்பாஸ்ஸில் அரசியல் பிரபலங்கள் பங்கேற்ற... " பிக்பாஸ்ஸில் அரசியல் பிரபலங்கள் " பிக்பாஸ் நிகழ்ச்சியில் சினிமா பிரபலங்கள் இல்லாமல் சில அரசியல் பிரபலங்கள் கலந்துகொண்டால் எப்படி இருக்கும்?ஒரு சின்...
கடந்த 5 ஆண்டுக ளில் 187 ஆணவ படுகொலைகள்! ... கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வாட்சப்பில் சாதி ஆணவ படுகொலை வீடியோ தீயாக பரவியதை யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டார்கள். அந்த வீடியோவில் இள...
இன்று எம்.ஜி.ஆர் பிறந்தநாள்!... இன்று எம்.ஜி.ஆரின் 101வது பிறந்தநாள். இளமையில் வறுமையில் வாட, அந்த வறுமையை போக்க நாடகக்குழுவில் இணைந்து பணியாற்றினார். பிறகு தமிழ் சினிமாவில் சிறுசிறு...
சுஜாதாவின் ஏன்? எதற்கு? எப்படி? புத்தகத்... சுஜாதா எழுதிய புத்தகங்களில் ரொம்ப பிராடு தனம் நிறைந்த புத்தகம் என்றால் அது கண்டிப்பாக அவர் எழுதிய "சிறுகதை எழுதுவது எப்படி?" என்ற புத்தகம் தான். அந்த ...

Be the first to comment on "தானா சேர்ந்த கூட்டம் திரைப்பட வசனங்கள் ஒரு பார்வை!"

Leave a comment

Your email address will not be published.


*