* முதல் நாள் காலேஜ் வாசல்ல நின்னு அய்யா நாம இன்ஜினியர் ஆகப்போறங்கறது நினைச்சது என்னால மறக்கவே முடியாது… தம் அடிச்சேன் தண்ணி அடிச்சேன் கட் அடிச்சேன் தியேட்டர்ல படம் பாத்தேன்… அரியர் வச்சேன் போர்த் இயர்ல மொத்தமா கிளியர் பண்ணேன்… ஐயா நா மட்டும் தான் இன்ஜினியர் அப்படினு நினைச்சேன்… என்ன மாதிரி 10 லட்சம் பேரு இருந்தாங்க… இதுல பத்தாயிரம் பேரு ஜெனியுன ஜீனியசா இருப்பாங்க அவிங்களுக்கு எப்படியாவது வேல கெடச்சிடும்… ஒரு இருபதாயிரம் பேருக்கு செல்வாக்கான அப்பா இருப்பாங்க… ஒரு 30 ஆயிரம் பேருக்கு பரம்பரை கம்பெனி னா நா மீதி இருக்குற மெஜாரிட்டி கேட்டகிரி… அதென்னனா ” தெண்டச் சோறு”
* தெண்டச் சோறு எப்பவுமே திமிரா தான் இருக்கனும்… தெண்டச்சோறு குனிஞ்சா கும்மீடுவாங்க…
* வேலைக்குப் போகலனா நீங்க பேரு வச்சு வளத்த உங்க நாய்கூட உங்கள மதிக்காது…
* சமயத்துல 2000 ரூபாவ விட அம்மா கொடுக்கற 200 ரூபாய்க்கு தான் மதிப்பு ஜாஸ்தியா இருக்கு…
* நீயெல்லாம் ஒரு குடும்ப பொம்பளையா… வாய்ல கஞ்சா தண்ணினு…
* எத பாத்து டப்பா வண்டின… என் வண்டி லிட்டருக்கு அறுபது கிலோ மீட்டர் ஓடும்… உன் வண்டி ஓடுமா… நா டிராபிக் ஜாம்ல பூந்து பூந்து போவேன்… நீ போவியா… என் வண்டி நின்னுச்சுனா பெடல் பண்ணிட்டே வீட்டுக்கு வந்துருவேன்… உன்னால முடியுமா…
* உங்களுக்கெல்லாம் நா முப்பது செகண்ட் டைம் தரேன்… அதுக்குள்ள என்ன அடிச்சதுக்காக என்கிட்டயும் என் அம்மா கிட்டயும் சாரி கேட்டுட்டு ஓடிப் போயிருங்க… இல்ல…
என்னடா பண்ணுவே…
அடிப்பேன்…
* தம்பி முதல்லா யாரு சம்பாதிக்கறாங்ககறது முக்கியமல்ல… யாரு கரக்டான சமயம்ல சம்பாதிக்கறாங்ககறது தான் முக்கியம்…
* இப்ப எதுக்கு என்னையும் அவனையும் கம்பேர் பண்றிங்க… அவனுக்கு பண்ண எது எனக்கு பண்ணிங்க… அவன மட்டும் சென்ஜாஸ் படிக்க வச்சிங்க என்னைய ராமகிருஷ்ண மிஷன்ல படிக்க வச்சிங்க… இண்டர்வியூல வந்து பாருங்க நாலு வார்த்த சேந்தாப்ல இங்கிலீஸ் பேச எவ்வளவு கஷ்டப்படுறன்னு… வேல கிடைக்கல வேல கிடைக்கலனா எப்படி கிடைக்கும்…
* எதுக்கு கம்பேர் பண்றிங்க… பேருல கூட அவருக்கு மட்டும் ஹீரோ பேரு கார்த்திக்… எனக்கு மட்டும் வில்லன் பேரு ரகுவரன்…
* அம்மா இல்லாதவங்க கிட்ட போயி கேளு… அம்மா அடிக்கறதுல எவ்வளவு சந்தோசம்னு அவங்க சொல்வாங்க…
* எனக்கு கார்த்திக்க விட ரகுவரன தான் ரொம்ப பிடிக்கும்…
* எதுக்கு மூஞ்சிய இப்படி வச்சுக்கிற…
மூஞ்சியே அப்படித்தான்…
* சார் நா இங்க ஆறு மாசமா தான் வேல செய்றேன் எங்கட்ட போயி…
ஒருத்தர ஆறு மாசமா பாத்தா தெரியாதா… அவிங்களால முடியுமா முடியாதான்னு…
* சைட்க்கா… அப்ப நானும் வரேன்…
சைட்டுக்கனா தான் நீங்களா ரெடியா இருப்பிங்களே…
* எங்கம்மா கூட இப்படித்தான் எப்பவுமே உன்னால முடியுன்டானு பசிட்டிவா என்கரேஜிவா பேசுவாங்க…
* இவன பாத்தாலே எரிச்சலா இருக்கு… இந்த மாதிரி லோக்கல் பசங்கள சின்ன வயசுல இருந்தே பிடிக்காது…
* திறம மட்டும் இருந்தா போதும் ரகு…
* எவனோ ஒருத்தன் பிராடு தனும் பண்றாங்கறதுக்காக கவுர்மெண்ட்ட குறை சொல்வியா…
* என்ன சார்… வகுடு எடுத்து வாருன முடி… புட்டிக்கண்ணாடில பாத்து பழம்னு நினைச்சிட்டிங்களா… ஆக்சுவலா நான் கொஞ்சம் பேட் பாய் சார்… கொஞ்சம் கெட்ட வார்த்தைலா கூட பேசுவேன்… நீங்க வேற ஒரு மாதிரி பேசுறிங்களா… அப்புறம் த்தா… தப்பாயிறும்…
* தகுதி இல்லாத ஆள்ட்ட தகுதிக்கு மீறுன விஷியம் கிடைச்சா எல்லாம் தப்பா தான் நடக்கும்… பரம்பர பரம்பரையா இதுக்காகவே வாழ்றவங்கடா நாங்க… உன்ன மாதிரி பிச்சக்கார பசங்கள எல்லாம் அவ்ளவு ஈசியா வளர விட்ருவோமா… உங்க லெவலுக்கு வேல செய்ங்கடா…
* ஏன்டா வெள்ளப்பன்னி… எந்த வேலயும் செய்யாம தகுதியான படிப்பும் இல்லாம உங்கப்பா பணக்காரங்கற ஒரே காரணத்துக்காக நோகாம முதலாளி ஆன உனக்கே இவ்ளாவு திறம இருக்கே…
அப்பா அம்மா கஷ்டப்பட்டு ஸ்கூலுக்கு டொனேசன் கட்டி எல்கேஜில இருந்து பத்தாவது வரைக்கும் பெயிலாகாம படிச்சு பத்தாவதுல ஈசியான குரூப்லாம் விட்டுட்டு இந்த குரூப் எடுத்தா தான் இன்ஜினியர் ஆக முடியும்னு கஷ்டமான குரூப்பா எடுத்து பிசிக்சுக்கு ஒரு டியூசன், கெமிஸ்ட்ரிக்கு ஒரு டியூசன், மேக்சுக்கு ஒரு டியூசன்னு ரோட் ரோடா அலைஞ்சு அதுக்கு பீஸ் கட்ட முடியாம ரோட் ரோடா அலைஞ்சு பாசவறதுக்கு பிளாஸ்க்ல டீ வச்சு நைட்லா படிச்சு காலைல அலாரம் வச்சு எந்திரிச்சு படிச்சு அதுல வாங்குற மார்க்லாம் பத்தாம டிஎன்பிஎஸ்சி எக்சாம்க்கு வேற தனியா ரெண்டு மாசம் உக்காந்து படிச்சு அதுல வாங்குற கட்ஆப் மார்க் யூஸ்லெஸ்சா போயி அம்மா நகைய அடமானம் வச்சு காலேஜ்ல சீட் வாங்கி பர்ஸ்ட் இயர்ல இருந்து போர்த் இயர் வரைக்கும் வச்ச அரியரலாம் மொத்தமா போர்த் இயர்ல கிளியர் பண்ணி இந்த சொசைட்டிக்குள்ள நுழைஞ்சா இந்த சொசைட்டி என்ன வேல இல்லன்னு செருப்பால அடிச்சு ரோட் ரோடா வேல தேடி அலைஞ்சு மூணு வருசம் நாலு வருசம் வீட்ல தெண்டமா உக்காந்து அப்பா என்ன தெண்டச்சோறு தெண்டச்சோறுனு திட்டி சாப்டற ஒவ்வொரு வாய் சாப்பாடும் தொண்டைல சிக்கி சிக்கி வலிச்சு வலிச்சு இறங்கி எவனோ ஒரு புண்ணியவான் கடைசில ஒரு நல்ல மனுசன் எனக்கு வேல குடுத்து அதையும் புடுங்கிக்க நினைக்கும் உன்ன மாதிரி ஒரு பொறம்போக்கலாம் சமாளிச்சு இன்னிக்கு உன் முன்னாடி நின்னு பேசிட்டு இருக்குற வேலையில்லா பட்டதாரி எனக்கு எவ்வளவு திமிர்றா இருக்கும்…
* அமுல்பேபி நீ ரகுவரன வில்லனா தான பாத்துருக்க… ஹீரோவா பாத்தது இல்லையே… இனிமே பாப்ப…
* கீழ இருக்கறவன்லா மேல வரவே கூடாதா சார்… அப்ப என்ன மாதிரி பசங்களாம் ரோட்ல குப்பை பொறுக்கிட்டே தான் இருக்கனுமா… அப்படி வரனும்னு நினைச்சா இப்படித்தான் இறங்கி செய்வாங்களா… இங்க பரம்பர பணக்காரங்களுக்குத் தான் இடமா…
* நா பிச்சக்காரனா இருந்தாலும் எனக்குனு ஒரு அடையாளம் இருக்கு!
Be the first to comment on "ஜூலை18 – 5 years of வேலையில்லா பட்டதாரி! – வசனங்கள் ஒரு பார்வை!"