முப்பது கோடி மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் புதிய கல்வி கொள்கையை நிறைவேற்ற ஏன் இத்தனை அவசரம்?
மூன்று வயது குழந்தையால் மூன்று மொழி படிக்க முடியுமா?
நாட்டில் 1848 பள்ளிகள் மூடப்படப்போகிறதே இதற்கு பதில் என்ன?
கல்வியில் சிறந்த நாடுகளில் 8ம் வகுப்பு வரை எந்த தேர்வும் இல்லை என்கிற நிலையில் 3, 5, 8ம் வகுப்புகளுக்கு பொது தேர்வு என்பது எப்படிச் சிறந்த கல்வியாகும்?
நுழைவு தேர்வு, பொதுத் தேர்வு, தகுதி தேர்வு, நீட் தேர்வு என்று மாணவர்கள் தொடர்ந்து தேர்வை எழுதிக் கொண்டிருந்தால் அவர்கள் வாழ்க்கையை படிப்பது எப்போது?
ஒரு லட்சத்து 80 ஆயிரம் அரசு பள்ளி மாணவர்கள் நீட் தேர்வு எழுதியதில் ஒருவர் மட்டுமே பாஸ் என்றால் இதை எப்படி பார்ப்பது?
ஐம்பது ஆயிரம் கல்லூரிகள் 12 ஆயிரமாக குறைக்கப்படுவதும், கோச்சிங் செண்டர்கள் அதிகரிப்பதும்தான் புதிய கல்வி கொள்கையா?
சுமார் 80 லட்சம் ஆசிரியர்களை கொண்ட இந்தியாவில் புதிய கல்வி கொள்கையை ஒரேயொரு ஆசிரியர் அமைப்பும், ஒரேயொரு மாணவர் அமைப்பும் சேர்ந்து தீர்மானிப்பது எந்த விதத்தில் நியாயம்?
விதவிதமான கல்வி முறைகளை வைத்துக் கொண்டு தேர்வு மட்டும் பொதுவானது என்பது எப்படிச் சரியாகும்?
எதிர்கால தலைமுறையின் தலையெழுத்து எழுதப்படும் நேரத்தில் நாம் ஏன் இன்னும் விழிப்படையாமல் இருக்கிறோமே ஏன்?
Related Articles
சுஜாதா நினைவு தினம் இன்று! வித்தியாசமான ... 1. கேள்வி: பெட்ரோல் டீசல் முழுவதும் எதிர்காலத்தில் வற்றிப்போகும் வாய்ப்பு உள்ளதா? பெட்ரோல் முழுக்கத் தீர்ந்து விட்டால் கோடிக்கணக்கான வாகனங்களுக்கு மாற...
#மண்டியிட்டு_மன்னிப்புகேள் – தமிழ்... நெட்டிசன்களின் இன்றைய வறுவலில் சிக்கியிருப்பவர் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல்
ஒலிக்கும்போது எழுந்து நின்று மரியாதை செலுத்த தவறிய காஞ்சி இளைய மடாதிபதி
...
ரஜினியின் நிஜ அரசியல் வாழ்க்கையிலிருந்து... ரஜினியின் நிஜ வாழ்க்கையிலிருந்து முற்றிலும் மாறுபட்டு நிற்கிறது காலா என்று சொல்லிவிட்டோம். ஆக இது முழுக்க முழுக்க ரஞ்சித் படமா? என்றால் கிட்டத்தட்ட ஆம...
கிறுக்கத்தனமான கிகி சேலஞ்ச்! – பப்... அது என்ன கிகி சேலஞ்ச்!
உலகில் உள்ள பைத்தியங்கறை அரவேக்காட்டுகளை வெளிச்சம் போட்டு காட்டுவது தான் இந்த கிகி சேலஞ்ச்! இப்போது உலகம் முழுக்க டிரெண்டாகி வ...
Be the first to commenton "இந்திய கல்விமுறை குறித்து நடிகர் சூர்யாவின் 10 கேள்விகள்?"
Be the first to comment on "இந்திய கல்விமுறை குறித்து நடிகர் சூர்யாவின் 10 கேள்விகள்?"