முப்பது கோடி மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் புதிய கல்வி கொள்கையை நிறைவேற்ற ஏன் இத்தனை அவசரம்?
மூன்று வயது குழந்தையால் மூன்று மொழி படிக்க முடியுமா?
நாட்டில் 1848 பள்ளிகள் மூடப்படப்போகிறதே இதற்கு பதில் என்ன?
கல்வியில் சிறந்த நாடுகளில் 8ம் வகுப்பு வரை எந்த தேர்வும் இல்லை என்கிற நிலையில் 3, 5, 8ம் வகுப்புகளுக்கு பொது தேர்வு என்பது எப்படிச் சிறந்த கல்வியாகும்?
நுழைவு தேர்வு, பொதுத் தேர்வு, தகுதி தேர்வு, நீட் தேர்வு என்று மாணவர்கள் தொடர்ந்து தேர்வை எழுதிக் கொண்டிருந்தால் அவர்கள் வாழ்க்கையை படிப்பது எப்போது?
ஒரு லட்சத்து 80 ஆயிரம் அரசு பள்ளி மாணவர்கள் நீட் தேர்வு எழுதியதில் ஒருவர் மட்டுமே பாஸ் என்றால் இதை எப்படி பார்ப்பது?
ஐம்பது ஆயிரம் கல்லூரிகள் 12 ஆயிரமாக குறைக்கப்படுவதும், கோச்சிங் செண்டர்கள் அதிகரிப்பதும்தான் புதிய கல்வி கொள்கையா?
சுமார் 80 லட்சம் ஆசிரியர்களை கொண்ட இந்தியாவில் புதிய கல்வி கொள்கையை ஒரேயொரு ஆசிரியர் அமைப்பும், ஒரேயொரு மாணவர் அமைப்பும் சேர்ந்து தீர்மானிப்பது எந்த விதத்தில் நியாயம்?
விதவிதமான கல்வி முறைகளை வைத்துக் கொண்டு தேர்வு மட்டும் பொதுவானது என்பது எப்படிச் சரியாகும்?
எதிர்கால தலைமுறையின் தலையெழுத்து எழுதப்படும் நேரத்தில் நாம் ஏன் இன்னும் விழிப்படையாமல் இருக்கிறோமே ஏன்?
Related Articles
தி ஜானகிராமனின் “அம்மா வந்தாள்R... ஒவ்வொருவரும் தன் வாழ்வில் கண்டிப்பாக படிக்க வேண்டிய பத்து தமிழ் நாவல்கள் என்று பட்டியலிட்டால் அவற்றில் தி ஜானகிராமனின் அம்மா வந்தாள் புத்தகம் கண்டிப்ப...
“ருத்ர தாண்டவம்” படத்தால் உண...
எந்தெந்த பத்திரிக்கைகள்"அறம்" தவறாமல் நடந்து கொள்கின்றன... எவையெல்லாம் ஜால்ட்ரா அடிக்கும் பத்திரிக்கைகளாக இருக்கின்றன என்பதை தெரிந்துகொள்ள முடிந்...
நாடக கலைஞர்களை இளைஞர்கள் ஆதரிக்க வேண்டும... சமீபத்தில் வெளியான படம் சீதக்காதி. அந்தப் படத்தில் நாடக கலைஞர்களின் வாழ்க்கை முறைகளை மிக அற்புதமாக காட்டி இருந்தது படக்குழு. அந்தப் படத்தில் காட்டப்பட...
திரைப்படங்களின் தலைப்பில் சாதிப் பெயர் இ... முந்தைய காலத்தை விட இந்தக் காலத்தில் தான் சாதி பாகுபாடும் ஆதிக்கமும் வன்முறையும்
அதிகம் இருக்கிறது என்பது யாரும் மறுக்க முடியாத உண்மை. தெருப்பலகைகளில...
Be the first to commenton "இந்திய கல்விமுறை குறித்து நடிகர் சூர்யாவின் 10 கேள்விகள்?"
Be the first to comment on "இந்திய கல்விமுறை குறித்து நடிகர் சூர்யாவின் 10 கேள்விகள்?"