* தள்ளாடி மேலெழும் தலைமுறை,
* எங்கே தொலையக் கொடுத்தோம்?,
* கூட்டாஞ் சோற்றுக் கணக்கு,
* வியாபார மந்திரம்,
* கூண்டுப் புறாக்கள்,
* அக்கறை காட்டுங்கள்,
* இரவு வெள்ளிகள்,
* உடலே மந்திரம்,
* மறையும் சாம்பிராணிப் புகை,
* ஒரு சொல்,
* மூன்று கலர் கனவுகள்,
* இயற்கையை நேசித்தல் இனிது,
* தற்புகழ்ச்சி தவிர்,
* குடை நிழல்,
* ஓடி ஓடி உழை,
* பிணைப்பில்லாத கைகள்
என்ற தலைப்புகளில் ஆனந்த விகடனில் 20 தொடர் கட்டுரைகள் எழுதியது தான்
” அன்பும் அறமும் “.
விக்டர், பார்த்தசாரதி, காமாட்சி அம்மா, வியாபார நுணுக்கத்தைக் கற்றுத்தந்த ரமலோவ், சூசையண்ணன், கேன்சரை வென்ற மனிதர், வெள்ளைச்சாமி, குழந்தையண்ணன், பாத்திமா அத்தை ஆகிய மனிதர்களின் வழியாக குடிபோதைக்குள் மயங்கி கிடக்கும் இளைஞர்கள், அப்பாக்கள், குற்ற உணர்வை தொலைத்த ஏமாற்றுக்காரர்கள், வறுமையில் வாடும் கிராம விவசாயிகள், விற்கும் பொருள் தரமானதாக இருக்க முற்படும் வியாபாரிகள், குற்றவாளிகளை உருவாக்கும் சாதி சங்கங்கள், அவசரத்துக்கு ஒதுங்க முடியாத பெண்களின் வலிகள், நுவான் நுவாக்கிராம் மாதிரி ஊடுருவி பாயும் மனித கருத்துக்கள், குடிகெடுத்த வெள்ளி, குப்பை தொட்டியான வயிறு, மதவெறி, பேரம் பேசத் தெரியாத இந்தியர்கள், கனவுகள் ஒப்பீடு, இயற்கையை அதிகம் நேசிக்கும் பெண்கள், இளைஞர்களின் அலட்சியம் போன்ற பல விஷியங்களை பேசியுள்ளார். ஒவ்வொரு தொடரிலும் அன்பு, மனிதம், அறம் போன்ற விஷியங்களே மையமாக காணப்படுகிறது. கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகங்களில் நிச்சயம் இந்தப் புத்தகமும் இடம்பெறும்.
- ” எதைத் தொலைத்தாலும் மீட்டுவிடலாம். குற்றவுணர்வைத் தொலைத்து விட்டால் எந்த ராட்சதக் கை வந்தாலும் மீட்டெடுக்க முடியாது. “
- ” நீதி, நேர்மையெல்லாம் நம்முடைய வசதிக்குத் தகுந்தாற்போல ஏற்படுத்திக் கொண்டது. எளியவர்களின் கடைசிப் புகலிடம் கடவுள் என்பார்கள். சாமிக்கு அபிஷேகத்துக்கு எண்ணெய் பாக்கெட் வாங்கித் தருகிறார்கள். அது பிரிக்காமலேயே மறுபடி கடைக்கு வந்துவிடுகிறது. மறுபடி சாமிக்குப் போய் மறுபடி கடைக்கு வந்துவிடுகிறது. ஐம்பது எண்ணெய்ப் பாக்கெட்டுகள் ஒரு நாள் முடிவதற்குள் ஐயாயிரம் பாக்கெட்டுகளாக விற்றுத் தீர்ந்துவிடுகின்றன. “
- ” இங்கே எதையும் எவருக்கும் அறிவுறுத்திவிட முடியாது. “நீங்க மட்டும் யோக்கியமா” என உடனடியாகப் பதில் கேள்வி வந்து விழும். எல்லோரும் ஒரே குட்டையில் அறம் தவறிய மட்டைகளாக இரண்டறக் கலந்துவிட்டால் அப்புறம் யார் சொன்னால்தான் மதிப்பார்கள்? இல்லையெனில் யார்தான் எடுத்துச் சொல்வது? இப்படி தங்களுக்குள்ளேயே அட்டுகளை நடமாட விட்டுக்கொண்டிருக்கும் சமூகம், தங்களை ஆள்பவர்கள், ஆளத் துடிப்பவர்கள் மட்டும் அசலானவர்களாக இருக்க வேண்டும் என எதிர்பார்த்தால் எப்படி? “
போன்ற வரிகள் இந்நாவலில் இடம்பெற்றிருக்கும் முக்கியமான வரிகளாகும்.
Be the first to comment on "எழுத்தாளர் சரவணன் சந்திரன் எழுதிய அன்பும் அறமும் – புத்தக விமர்சனம்"