வைரலாகிறது அனிருத் பாடிய “கண்ணம்மா” பாடல் !

anirudh sings a kannamma song will be going to viral hit!

வைரல் என்ற வார்த்தைக்கும் அனிருத்துக்கும் அவ்வளவு கெமிஸ்ட்ரி. காரணம் அனிருத் பாடிய அல்லது இசையமைத்த பாடல்கள் அடிக்கடி இணையத்தில் ஒரு கலக்கு கலக்குகிறது. அப்படி இந்த முறை கலக்கி கொண்டிருக்கும் பாடல் இஸ்பேட் ராஜாவும் இதயராணியும் படத்தில் இடம்பெற்றிருக்கும் ” கண்ணம்மா உன்ன… ” என்பது தான்.

இசையமைப்பாளர் சாம் சிஎஸ் பாடலை எழுதி இசையமைக்க பாடி இருக்கிறார் அனிருத். ஏற்கனவே இருவர் கூட்டணியிலும் ஒரு பாடல் வெளியாகி பட்டிதொட்டியெல்லாம் ஹிட் அடித்தது.  விக்ரம் வேதா படத்தில் இடம்பெற்றிருந்த நெஞ்சாத்தியே பாடல் தான் அது. பலருடைய ரிங்டோன்களாகவும் வாட்சப் ஸ்டேட்டஸ்களாகவும் அந்தப் பாடல் இருந்துள்ளது.

அதனைத் தொடர்ந்து தற்போது இஸ்பேட் ராஜாவும் இதயராணியும் படத்தில் இடம்பெற்றிருக்கும் அனிருத் சாம் கூட்டணியில் உருவான கண்ணம்மா பாடல் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

ரிலீசுக்கு முன்பே :

இதன் வீடியோ பாடல் தற்போது தான் ரிலீசாகி உள்ளது. ரிலீசுக்கு முன்பே வீடியோ பாடல் வெளியிட்டிருந்தால் படத்திற்கு இன்னும் கொஞ்ச அதிக விளம்பரம் கிடைத்து நல்ல ஓப்பனிங் கிடைத்திருக்கும் என்கிறது ஒரு தரப்பு.

ரசிகர்கள் சொல்வது போல ரிலீசுக்கு முன்பே இந்தப் பாடலின் வீடியோ காட்சிகளை வெளியிட்டிருந்தால் பிரேமம், அர்ஜூன் ரெட்டி பட வரிசையில் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் தாராளமாக இடம்பெற்றிருக்கும்.

Related Articles

குலேபகாவலி – சினிமா விமர்சனம்... தயாரிப்பு: கே.ஜே.ராஜேஷ் ஸ்டூடியோஸ் இயக்கம்: கல்யாண் இசை: விவேக் - மெர்வின் ஒளிப்பதிவு: ஆர்.எஸ். ஆனந்தகுமார் நடிப்பு: ரேவதி, பிரபு தேவா, ஹன்சிகா மோ...
எம்.எம். தீன் எழுதிய “யாசகம்”... "தாயிடம் பாசப் பிச்சை தந்தையிடம் அறிவுப் பிச்சை குருவிடம் ஞானப் பிச்சை மனைவியிடம் இச்சைப் பிச்சை... பிள்ளைகளிடம் உறவுப் பிச்சை முதலாளியிடம் வாழ்வுப் ப...
கணவர் இறப்புக்கு பிறகும் பொட்டு வைத்திரு... கணவர் இறந்த பிறகு அவரது ஓய்வூதியத்தை தன் பெயருக்கு மாற்றச் சென்ற 77 வயது பெண், அரசு அலுவலகத்தில் அவமதிக்கப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் சர்ச்சையை உண...
கடைசி தேர்வு முடிந்ததும் பாட புத்தகங்களை... கடந்த சில மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்ட பண்ணிரண்டாம் வகுப்பு தேர்வுகளும், பத்தாம் வகுப்பு தேர்வுகளும் கேள்வித்தாள்கள் கடினமாக இருந்தது என்ற குறைகளுடன...

Be the first to comment on "வைரலாகிறது அனிருத் பாடிய “கண்ணம்மா” பாடல் !"

Leave a comment

Your email address will not be published.


*