பல நன்மைகளை தரும் பனம் பழம்!

Benefits from Palmyra palm fruit
  1. விதைக்க வேண்டியதுமில்லை. வளர்க்க வேண்டியதுமில்லை என்கிற அளவில் நமக்கு சிரமம் தராதது பனை மரம். பனை மரத்தின் பழம் எண்ணற்ற சத்துக்களை கொண்டுள்ளது.
  2. பனம் பழத்தின் உள்ளே இரண்டு அல்லது மூன்று பெரிய உறுதியான கொட்டைகள் இருக்கும். பனம் பழத்தில் நார் நிறைந்து காணப்படும். நார்களின் நடுவே ஆரஞ்சு அல்லது சிவந்த மஞ்சள் நிறத்துடன் கூடிய கெட்டியான சாறு கலந்திருக்கும். இந்தச் சாறு இனிப்புச் சுவையுடன் கூடி இருக்கும்.
  3. பனம் பழம் பப்பாளி மாம்பழத்தை விட கூடுதலாக வைட்டமின் சி மற்றும் கால்சியம் கொண்டு இருக்கிறது. பனம்பழ சாற்றில் நீர்ச்சத்து புரதச்சத்து கொழுப்பு சத்து, உலோக உப்புகள் சர்க்கரை வைட்டமின் சி மற்றும் கரோட்டின் ஆகியவை நிறைந்து காணப்படுகிறது. குறிப்பாக பார்வை திறனை அதிகரிக்கும் வைட்டமின் ஏ சத்து இந்தப் பழத்தில் அதிக அளவில் இருக்கிறது.
  4. இந்தப் பழத்தை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம்.
  5. பனம் பழத்தை சாப்பிட விரும்புபவர்கள் நெருப்பு மூட்டி சுட்டும் சாப்பிடலாம்.
  6. நோய் எதிர்ப்பு சக்தியை உண்டு பண்ணி சரும நோய்களை பனம் பழம் சரி செய்கிறது.
  7. பனம் பழம் உடலுக்குத் தேவையான வெப்பத்தை தருகிறது. மலச் சிக்கலைப் போக்குகிறது. உடலில் உள்ள கழிவுகளை அகற்றுகிறது.
  8. நீரிழிவு பாதிப்பு உள்ளவர்களும் பனம் பழத்தை சாப்பிடலாம்.
  9. பனம் பழச் சாற்றுடன் மாவு சேர்த்து பிசைந்து பனியாரம் செய்து சாப்பிடுவார்கள். தேங்காய், வாழைப் பழம், பால், சர்க்கரை சேர்த்து இனிப்பு பலகாரங்கள் செய்வார்கள். தக்காளி ஜாம் போலவும் பனம் பழத்திலிருந்து ஜாம் தயாரிக்கிறார்கள்.
  10. பனம் பழத்தின் சாற்றை சரும நோய்களக்குப் பூசுவதால் நிவாரணம் கிடைக்கும்.

Related Articles

11 உயிர்களைப் பறித்த ஸ்டெர்லைட் 100 வது ... தாங்கள் வாழும் நிலப்பகுதியில் தங்களுக்கு புற்றுநோயை உண்டாக்கும், காற்றை மாசுபடுத்தும் ஒரு ஆலையை மூடச்சொல்லிக் கேட்டார்கள். தூத்துக்குடியில் போராடிய மக...
இவ்வளவு தாங்க வாழ்க்கை ! – அனைவரும... நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது? நம் வாழ்க்கையில் மட்டும் தான் இதெல்லாம் நடக்கிறதா? என்று மனத்தெளிவு இல்லாதவர்கள் இந்த கேள்வி பதில் தொகுப்பை கட்டாயம் பட...
”முதலமைச்சர் பழனிசாமிக்குள் புகுந்... கடமை வேறு, பெருமை வேறு, தியாகம் வேறு என்று நாம் எப்போது புரிந்து கொள்ளப் போகிறோம் என்று தெரியவில்லை. குறிப்பாக அரசியல்வாதிகள் இதை எப்போது புரிந்து கொள...
ரஜினியின் நிஜ அரசியல் வாழ்க்கையிலிருந்து... ரஜினியின் நிஜ வாழ்க்கையிலிருந்து முற்றிலும் மாறுபட்டு நிற்கிறது காலா என்று சொல்லிவிட்டோம். ஆக இது முழுக்க முழுக்க ரஞ்சித் படமா? என்றால் கிட்டத்தட்ட ஆம...

Be the first to comment on "பல நன்மைகளை தரும் பனம் பழம்!"

Leave a comment

Your email address will not be published.


*