நெமிலிச்சேரி ரயில்நிலையத்தில் கத்தியுடன் சுற்றித்திரிந்த மாணவர்கள் முதல் புத்தாண்டு கொண்டாட்டத்தில் அராஜகம் செய்த பேரிகார்டு பீட்டர் வரை – கெத்து காட்டி மொக்கை வாங்கிய கல்லூரி மாணவர்கள்

peter

கடந்த இரண்டு நாட்களாக நியூஸ் சேனல்களிலும் சமூக வலைத்தளங்களிலும் இந்த பேரிகார்டு பீட்டரின் பெயர் அடிக்கடி கண்ணில் படுகிறது.

யார் அந்த பிரபலம்?

புத்தாண்டு கொண்டாட்டத்தில் நண்பர்களுடன் சேர்ந்துகொண்டு பைக்கில் ஊர்சுத்தியவர். அந்நாளில் போலீஸ் அவர்களை நிறுத்தி மெதுவாக பயணிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்கள். நம்ம தலைமுறைக்கு தான் அட்வைஸ் என்றால் பிடிக்காதே. நீ என்ன சொல்வது என்று காவலர்களை மீறி சென்றவர்கள் சாலையில் இருந்த பேரிகார்டை இழுத்துக்கொண்டே தீப்பொறி வருவதை ரசித்துக்கொண்டு கெத்து காட்டுகிறேன் என்று அதை வீடியோ எடுத்தது மட்டுமல்லாமல் ” நான் தான் செய்தேன்… செம கெத்தா இருந்துச்சி… போலீஸ்காரன் மிரண்டுட்டான்… ” என்று பேஸ்புக்கில் லைவ்வில் தானாக முன்வந்து வாக்குமூலம் கொடுத்த புத்திசாலி தான் பீட்டர். அதே வீடியோ வைத்து சைபர் கிரைம் படையினர் பீட்டரையும் பீட்டரின் நண்பர்களையும் கண்டுபிடித்து அதே பேஸ்புக் லைவ்வில் மன்னிப்பு கேட்கும்படி செய்துவிட்டனர். அந்த இரண்டு வீடியோக்கள் கீழேயும் கமெண்டுகள் பலவாறு குவிந்துள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பே இதே போல கல்லூரி மாணவர்களின் அராஜகம் நெமிலிச்சேரி ரயில் நிலையத்தில் நடந்தது. ரயில் படிக்கட்டுகளில் நின்றுகொண்டு தரையில் கத்தியை தேய்க்கவிட்டு தீப்பொறி பறக்கவிட்டு கெத்து காட்டிய மாணவர்களும் இதேபோல் தான் தாங்களாகவே அதை வீடியோ எடுத்து பேஸ்புக்கில் அப்லோட் செய்து போலீசிடம் மாட்டி சில நாட்களில் மன்னிப்பு வீடியோ வெளியிட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

ஆரோக்யமாக எடை குறைக்க ஐந்து வகையான பானங்... இன்றையகாலகட்டத்தில், பெரும்பாலான மக்கள் அதிக எடை காரணமாக அவதிப் படுகின்றனர். ஆரோக்கியமற்ற உணவு பழக்கம், அமைதியற்ற வாழ்க்கை முறை, சகிப்புத்தன்மையற்ற மன...
உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முதலிடம்!... இந்தியாவிலயே தமிழகம் உடல் உறுப்பு தானத்தில் முதலிடம் வகித்து வருகிறது. உடல் தானம் அதிகம் செய்யும் மாநிலம்  என்பதற்காக தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக இதற்...
தமிழகத்தின் தற்போதைய சூழலுக்கு தகுந்த பட...  தயாரிப்பு: பென் ஸ்டுடியோஸ் & ஸ்டோன் பெஞ்ச்இயக்கம்: கார்த்திக் சுப்புராஜ்இசை: சந்தோஷ் நாராயணன்ஒளிப்பதிவு: திருஎடிட்டிங்: ...
2021ல் பெரிய ஏமாற்றத்தை கொடுத்த படம்! ... காவியத்தலைவன் தான் வசந்தபாலனின் கடைசி படமாக இருந்தது. அந்தப் படம் பெரிய தோல்வி என்ற போதிலும் டெக்னிக்கலாக ரொம்ப ஸ்ட்ராங்கான படம். நிறைய விருது விழாக்க...

Be the first to comment on "நெமிலிச்சேரி ரயில்நிலையத்தில் கத்தியுடன் சுற்றித்திரிந்த மாணவர்கள் முதல் புத்தாண்டு கொண்டாட்டத்தில் அராஜகம் செய்த பேரிகார்டு பீட்டர் வரை – கெத்து காட்டி மொக்கை வாங்கிய கல்லூரி மாணவர்கள்"

Leave a comment

Your email address will not be published.


*